கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருமா என்று, ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளும் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் கள். ஆனால், 'தண்ணீர் வந்தாலும் எங்க நிலம் தரிசாதான் கெடக்கப்போகுது, எங்களை யாரு கவனிக்கிறது?’ என்று வெடிக்கிறார்கள் டெல்டா விவசாயிகளில் ஒரு சாரார்!

என்ன விஷயம்?

தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங் களில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய, காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு போன்ற ஆறுகளும் அவற்றின் உப ஆறுகள் மற்றும் வாய்க்கால்களும் பயன்படுகின்றன. ஆனால், அந்த ஆறுகளின் தண்ணீரை நேரடி யாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மேட்டு நிலங்களாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மேட்டு நில விவசாயிகளும் பயன்பெறட்டுமே என்று நல்ல நோக்கத்தில் 1950-ம் ஆண்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தகட்டூரில் ஆரம்பிக்கப்பட்டது, நீர்இறைவை பாசனத் திட்டம். ஆறு மார்க்கமாக தண்ணீர் போக முடியாத நிலங்களுக்கு, அந்த ஆறுகளில் இருந்து மின் மோட்டார்கள் மூலமாக தண்ணீரை எடுத்து, ராட்சத சிமென்ட் பைப்புகள் மூலமாக மேட்டு நிலங்களின் பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதுதான் திட்டம். அதன்பிறகு வந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தியதன் விளைவு... இன்று தஞ்சை மாவட்டத்தில் ஐந்தும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 12 நீர்இறைவை பாசனத் திட்ட மையங்களும் இருக்கின்றன. ஆனால், இப்போது அவற்றில் மிகக்குறைவான மையங்களே இயங்குகின்றன என்பதுதான் வேதனை. கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சி விவசாயத்தை செழிக்க வைத்த இந்தத் திட்டம் வீணாகப்போனது ஏன்?

நம்மிடம் பேசிய விவசாயிகள் சிலர், ''எங்கள் விவசாய நிலம் மேட்டு நிலமாக இருப்பதால், ஆற்று நீரை நேரடியாக விவசாயத் துக்குப் பயன்படுத்த முடியாது. மேலும், மழைநீரும் எங்கள் நிலத்தில் தேங்காது. அதனால் நீர் இறைவைப் பாசனத் திட்டம்தான் எங்களைப் போன்ற மேட்டு நில விவசாயிகளுக்கு ஒரே ஆதாரம். இப்போது அந்தத் திட்டமும் செயல் இழந்து கிடப்பதால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். மழைவரும் முன்னராவது, எல்லா நீர் இறைவைப் பாசன மையங்களையும் சரிசெய்து எங்களின் விவசாயத்துக்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்'' என்றனர் பரிதாபமாக.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன், ''பொதுப்பணித் துறையின் கீழ்தான் இந்தத் திட்டம் செயல் பட்டு வந்தது. ஆரம்பத்தில் இந்தத் திட்டத்துக்காக ஆகும் மின்செலவு முழுவதையும் தமிழக அரசே, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்தி வந்தது. மோட்டார் இயக்கிகள், பராமரிப்புப் பணியாளர்கள், லஸ்கர் மேஸ்திரிகள்னு நியமிச்சு மொத்தம் உள்ள 29 நீர் இறைவை மையங்களையும் முறையா செயல்படுத்தி வந்தாங்க. ஆனால், எல்லாமே 2000-ம் வருஷத்தோட முடிஞ்சு போச்சு. 2001-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு இந்த நீர் இறைவைப் பாசனத் திட்டத்துக்கு ஆகும் மின் செலவில் பாதியை அரசாங்கமும் மீதியை விவசாயிகளும் செலுத்தணும்னு அறிவிச்சாங்க. ஆனா, அதிகக் குதிரைத்திறனில் இயங்கும் மோட்டார் என்பதால், அதிக பில் தொகை வந்து விவசாயிகளால் தொடர்ந்து பில் தொகையைக் கட்ட முடியாமல் போனது. அரசாங்கமும் முழுத் தொகையைக் செலுத்த மறுத்ததால், வருஷத்துக்கு ஒவ்வொண்ணாகக் குறைந்து, இப்போது சிலமட்டுமே இயங்குகின்றன. அதுவும் பெயரளவுக்குத்தான் இயங்குகின்றன'' என்றார் விரக்தியாக.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார், ''தஞ்சை மாவட்டத்தில் அரசப்பட்டு, சின்னபருத்திக்கோட்டை, கொள்ளுக்காடு, ஒக்கநாடு கீழையூர், பொய்யுண்டார் குடிகாடு என்ற ஐந்து ஊர்களில் நீர் இறைவைத் திட்ட மையங்கள் இருக்கின்றன. இதில் எங்கள் ஊரான ஒக்கநாடு கீழையூரில் உள்ள திட்ட மையம் மட்டும்தான் இயங்குகிறது. அதுவும் ஆறு மோட்டார்களில் இரண்டு மட்டும்தான் இயங்குகின்றன. இரண்டு மோட்டாரில் வர்ற தண்ணியை வெச்சு நாங்க என்ன விவசாயம் பண்ண முடியும்? அரசு உடனடியாகத் தலையிட்டு தேவையான ஆட்களை நியமித்து, அனைத்து நீர் இறைவை பாசன மையங்களையும் இயக்கணும். முக்கியமாக அரசே மின்கட்டண தொகை முழுவதையும் செலுத்தி, விவசாயிகளைப் பாதுகாக்கணும். இல்லைன்னா, மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறுவழி இல்லை'' என்றார்.

இதுபற்றி, வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரனிடம் கேட்டோம். ''மேட்டு நில விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார் உறுதியாக.

சீக்கிரம்!

- சி.சத்தியகுமார்