'ஓடிப்போனவர் திரும்பும் வரையில் கிளம்ப மாட்டேன்’ என்று கணவர் வீட்டு முன், தன் ஐந்து வயது மகன் தீபேஷ§டன் அமர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார் காஞ்சனா. புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியில்தான் இப்படி ஒரு காட்சி!

காஞ்சனாவைச் சந்தித்தோம். ''எனக்கு சொந்த ஊர் சென்னை வில்லிவாக்கம். எங்க அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தார். பணியில் இருக்கும்போதே இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் அந்த வேலை வாங்குவதற்காக அலைந்த நேரம் அது. அப்போதுதான் என் தோழி மூலம் சாய்காவியன் அறிமுகமானார். 'நான் தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்கிறேன். உங்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்து வேலை வாங்கித் தர்றேன்’னு சொன்னார். அப்படியே இரண்டு பேருக்கும் பழக்கமாயிருச்சு. திருமணம் செஞ்சுக்க முடிவெடுத்தோம். 'நான் ஒரு அனாதை. அதனால் சென்னையிலேயே திருமணத்தை வைச்சுக்கலாம்’னு சொன்னார். அதன்படி 27.10.2006 அன்று திருமணம் செய்துகொண்டோம். 2007-ம் வருஷம் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில், 2009-ல் அவருடன் ஒரு முஸ்லிம் அம்மா வந்தாங்க. 'யார் இவங்க?’னு கேட்டேன்.

அப்பதான், 'இவங்க தான் எங்க அம்மா’ன்னு அதிர்ச் சியான தகவலைச் சொன்னார். 'அனாதைனு சொன்னீங்களே..?’ என்று கேட்டதுக்கு, 'நான் ஒரு முஸ்லிம். என்னோட உண் மையான பேரு இப்ராஹிம் ஷா. எனக்குச் சொந்த ஊர் ஆலங்குடி. டி.வி-க்காக சாய்காவியன்னு பேர் வெச்சுக்கிட்டேன்’ என்று சொன்னார். அவங்க அம்மாவும் என்கிட்ட பாசமாத்தான் இருந்தாங்க. அதனால் நான் அந்தப் பிரச்னையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

2010-ம் வருஷம் டி.வி. வேலையை விட்டுட்டு பிசினஸ் ஆரம்பிக்கப்போறதாச் சொன்னார். அதனால், என் சொந்தக்காரங்ககிட்ட 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி, மாதவரத்தில் பஜாஜ் ஷோ ரூம் ஒண்ணு ஆரம்பிச்சுக் கொடுத்தேன். அதில் பெரிய அளவுக்கு நஷ்டம். அதனால், என்னுடைய 75 பவுன் நகையை அடகுவெச்சுக் கடனைக் கொடுத்தேன். அப்படியும் கடன் முழுசா அடையலை. அப்பதான் இவரோட அக்கா வீட்டுக்காரர் நிஜாமுதீன் சென்னைக்கு வந்தார். 'நகையை அடகு வெச்சா கடன் அடை யாது. அதனால அடகுவெச்ச நகையை மீட்டு, வித்துக் கடனை அடைச்சிருவோம்’னு சொன்னார். நானும் சரின்னு சொன்னேன். நகையை மீட்டுட்டு வர்றதாச் சொல்லி போனவங்க... அதுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பவே இல்லை.

அப்போ நான் கர்ப்பமா இருந்தேன். அவரை எங்கே போய் தேடுறதுன்னு தெரியலை. கொஞ்ச நாள் கழிச்சு அவரே போன் செய்தார். 'கடனை எல்லாம் அடைக்கிறதுக்குப் பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு வீட்டுக்கு வர்றேன்’னு சொன்னார். அதை நம்பிக் காத்திருந்தேன். அப்பப்ப போன் செய்வார். குழந்தை பிறந்த நேரத்திலும் வரலை. அந்தக் குழந்தை ஒரு மாசத்திலேயே இறந்து போயிருச்சு. அதுக்கும் வரலை. அதுக்குப்பிறகு போன் பண்றதும் குறைஞ்சு, ஒரு கட்டத்தில் நின்னே போயிடுச்சு.

அதனால, அவரைத்தேடி கடந்த 22-ம் தேதி ஆலங்குடிக்கு வந்தேன். என் மாமியார், என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. என் வீட்டுக்காரரோட அக்கா வீட்டுக்குப் போனேன். அங்கே இருந்த நிஜாமுதீன், 'இங்கே வராதே... மீறி வந்தா உன்னையும் உன் குழந்தை யையும் கொன்னுடுவேன்’னு மிரட்டி அனுப்பிட்டார். அதனால் மறுபடியும் என் வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்தேன். அதுக்குள்ள என் மாமனாரும் மாமியாரும் வீட்டைப் பூட்டிட்டுப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்துட்டு, என்ன ஆனாலும் சரின்னு இங்கேயே உட்கார்ந்துட்டேன்'' என்று கண்ணீ ரோடு சொன்னார்.

காஞ்சனாவின் நிலையைப் பார்த்து அந்தப் பகுதி பொதுமக்களும் இப்போது சாய்காவியன் மீது ஏக கோபத்தில் இருக்கிறார்கள். ஏரியாவைச் சேர்ந்த சங்கர் என்பவர், ''இந்தப் பொண்ணுக்காக சாதி, மதமெல்லாம் பார்க்காம எல்லோரும் போராடத் தயாராகிட்டோம். இன்னும் இரண்டு நாட்களில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

இதுகுறித்து, பேசுவதற்காக சாய்காவியனை போனில் தொடர்பு கொண்டோம். லைன் கிடைக்கவே இல்லை. எனவே, நிஜாமுதீனிடம் பேசினோம். ''என்னுடைய மைத்துனர்தான் இப்ராஹிம் ஷா. ஆனா, அவர் 2002-ம் ஆண்டு வீட்டைவிட்டுப் போயிட்டார். அதுக்குப்பிறகு, சென்னை யில் ஒரு கல்யாணம் செஞ்சுக்கிட்டதாச் சொன் னாங்க. அந்தப் பொண்ணு இப்ராஹிம் வீட்டுக்கு வந்திருக்கு. அவங்க வீட்டுல யாரும் இல்லாததால், எங்க வீட்டை யாரோ கை காட்டி விட்டுட்டாங்க. இங்கே வந்து இப்ராஹிமை எங்கே மறைச்சு வெச்சிருக்கீங்கன்னு சண்டை போட்டது. அதனால், எனக்கும் இப்ராஹிமுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டேன். அவங்க சொல்ற மாதிரி நகை எல்லாம் நான் வாங்கவே இல்லை'' என்று மறுத்தார்.

புகார் குறித்து மாவட்ட எஸ்.பி-யான தமிழ்சந்திர னிடம் பேசினோம். ''சாய்காவியனிடம் போலீஸார் பேசி இருக்கிறார்கள். விரைவில் அந்தப் பிரச்னை முடிந்து விடும்'' என்று உறுதியளித்தார்.

தன்னைச் சுற்றி நடப்பவை பற்றி எதுவும் அறியா மல் விழிக்கிறான் இவர்களின் வாரிசு தீபேஷ். காஞ்சனாவுக்கும் தீபேஷ§க்கும் நல்லதே நடக்கட்டும்!

- வீ.மாணிக்கவாசகம்