குட்டி மும்பை என்று சொல்லும் அளவுக்கு ரவுடியிஸத்தில் கொடி கட்டிப் பறக்கிறது சேலம்!

இந்த நகர எல்லைக்குள் இருக்கும் அன்னதானப்பட்டியில் தொடர்ந்து கொடூர கொலைகள் அரங்கேறி வரு கின்றன. கழுத்தை அறுத்துக் கொலை செய்து... நெஞ்சைப் பிளந்து கருங்கல்லை நட்டுவைப்பது, கொலை செய்து உடலைப் பாறையின் இடுக்கில் சொருகுவது, பட்டப்பகலில் பலர் முன்னி லையில் ஓட ஓட விரட்டிக் கொல்வது என்று விதவிதமாகக் கொலைகளை அரங்கேற்றம் செய் கிறார்கள் அன்னதானப்பட்டி ரவுடிகள். கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த ஏரியாவைச் சேர்ந்த மூன்று பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருந்தாலும், குற்றங்கள் இன்னமும் குறைய வில்லை.

கடந்த 16-ம் தேதி, சதீஷ் என்பவரை பலர் முன்னிலையில் கல்லால் அடித்தே ஒரு கும்பல் கொலை செய்ததைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்கள் மக்கள்.

காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் இதுபற்றி விலாவாரியாகப் பேசினார். ''அன்னதானப்பட்டிங்கிற பேரைக் கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்கும் நிலைமைதான். இந்தப் பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ரவுடிகள் இருக்காங்க. அவங் களுக்குள்ளேயே அடிக்கடி மோதல் நடக்கும். கடந்த வருஷத்தில் மட்டும் இந்த ரவுடிகளால் ஏழு கொடூரக் கொலைகள் நடந்திருக்கு. ஒவ்வொரு கும்பலும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பின்னணியில் இருக்காங்க. அதனால், ஆட்சி மாறும்போது, எதிர்க்கட்சியில் இருக்கும் ரவுடிக்கும்பலை பிடிச்சு உள்ளே போடுறதும்... ஆளும் கட்சிக் கும்பல் அட்டகாசம் பண்றதும் வழக்கமா நடக்குது. இப்போகூட 'வளத்தி’ குமார், பெருமாள், 'கோழி’ பாஸ்கர்னு மூணு ரவுடி கும்பல்களின்

'தலைகளை’ அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துட்டாங்க. இவங்க தி.மு.க. ஆட்சியில் போட்ட ஆட்டம் சேலத்தில் இருக்கும் எல்லோருக்குமே தெரியும்.

அன்னதானப்பட்டி படிப்பறிவு இல்லாத, அன்றாடம் கூலி வேலைக்குப் போகும் அடித்தட்டு மக்கள் வாழக்கூடிய பகுதி. அதனால் இங்கே இருக்கும் வேலை இல்லாத இளைஞர்களை, அடியாட்களாக மாற்றிவிடுகிறார்கள். தினமும் சாப்பாடு, மது, மாது என்று இளைஞர்களுக்குத் தேவையான அத்தனையும் செய்து கொடுப்பதால், அந்த இளைஞர்களின் பாதை மாறிவிடுகிறது. ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் ரவுடிகள், லோக்கல் எம்.எல்.ஏ. கூடவும், அமைச்சர் கூடவும் கைகோத்துட்டு சுத்துறாங்க. அதனால், காவல் துறையில் இருக்கிறவங்களே ரவுடிகளுக்கு சல்யூட் அடிக்கிற நிலைதான்'' என்று வருத்தத்தோடு சொன் னார்.

சேலத்தில் ரவுடிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று கடந்த தி.மு.க. ஆட்சியில் பகிரங்கமாகவே கமிஷனரிடம் புகார் கொடுத்தார் தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பார்த் திபன். ''ஆட்சி மாறியும் காட்சி மட்டும் மாறவே இல்லைங்க'' என்கிறார் இப்போது தே.மு. தி.க-வின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் எஸ்.ஆர்.பார்த்திபன். ''சேலத்தை கொலை நகரம் என்று சொல்வதுதான்

பொருத்தமாக இருக்கும். கொலை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல்னு எல்லாக் கெட்ட காரியங்களும் நடக்கிறது. வாரத்துக்கு நாலு கொலை நடக்குது. பட்டப் பகல்ல வீடுபுகுந்து கொலை பண்ணிட்டு, நகைகளையும், பணத்தையும் அள்ளிட்டுப் போறாங்க. 'கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம்’னு கமிஷனர் பேட்டி கொடுத்துட்டே இருக்கார். ஆனா, சேலத்தில் இருக்கும் அத்தனை ரவுடிகளுக்குமே போலீஸ் சப்போர்ட் இருக்கு. சேலம் சிட்டியில் 60 ரவுடிகளை குண்டாஸ்ல போட்டதா கமிஷனர் பெருமையாச் சொல்லிக்கிறார். ஆனா, உண்மையான ரவுடிகள் யாரையும் அவங்க அரெஸ்ட் பண்ணவே இல்லை.

செவ்வாய்பேட்டை ஏரியாவில் வெள்ளித் தொழில் செய்பவர்களின் வீடுபுகுந்து ரவுடிங்க பணம் கேட்டு மிரட்டுறாங்க. வெளியே சொல்ல முடியாத இன்னும் சில அசிங்கங்களும் நடக்கிறது. இப்படியே போனா, யாரும் நிம்மதியா ரோட்டுல நடக்கக்கூட முடியாத சூழ்நிலைதான் உருவாகும்'' என்றார் வேதனையோடு.

'என்ன செய்கிறது சேலம் போலீஸ்?’ என்று மாநகர போலீஸ் கமிஷனர் மஹா லியிடம் கேட்டோம். ''அன்னதானப்பட்டியில் ரவுடிகள் இருந்தது உண் மைதான். அவர்கள் அத்தனை பேரையும் கூண்டோடு தூக்கி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விட்டோம். இனி, ஒரு வருடத்துக்குப் பிறகுதான் அவர்கள் வெளியே வர முடியும். சேலத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்குக் காரணமானவர்களைத் தேடிக்கொண்டு இருக் கிறோம். விரைவில், அத்தனை பேரையும் கைது செய்துவிடுவோம். மக்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை. இரவுமுழுக்க போலீஸார் ரோந்து செல்வதைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது'' என்றார்.

இதுதான், கட்டுப்பாட்டில் இருக்கும் லட்சணமா?

-வீ.கே.ரமேஷ், படங்கள்: எம். விஜயகுமார்