நிதி நிறுவனம், ஈமு கோழி, நாட்டுக்கோழி, கொப்பரைத் தேங்காய், அகர் மரம் என்ற மோசடிப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது, ஆன்லைன் மோசடி. இதுவரை வெளியான அனைத்து மோசடி களையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு எடுத்த எடுப்பிலேயே டாப் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது, இந்த ஆன்லைன் விவகாரம்.

ஈரோடு, கோவை, திருப்பூர் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரம், கேரளம் என்றும் இந்த மோசடியின் கரங்கள் நீண்டுள்ளன. ஃபைன் ஃப்யூச்சர்ஸ், ஃபைன் இந்தியா, குட் வே, வே டு சக்சஸ், பெஸ்ட் வே போன்ற ஐந்து பெயர்களில் இந்த ஆன்லைன் நிறுவனம் இயங்கி வந்துள்ளது. இதன் அதிபர்களாகக் கூறப்படுபவர்கள் கேரளத்தைச் சேர்ந்த விவேக் மற்றும் கோவையைச் சேர்ந்த செந்தில். இந்த அலுவலகம் எங்கு இருக்கிறது என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் மக்கள் ஏமாந்திருப்பதுதான் வேதனை.

பணம் போட விரும்பி யாரேனும் தொடர்பு கொண்டால், இந்த நிறுவன முகவர்கள் சிறிது நேரத்தில் ஏதாவது ஓர் இடத்துக்கு வரச் சொல்வார்கள். அங்கு ஒரு கார் வரும். அதில் வருபவர் லேப்டாப் அல்லது ஓர் ஆங்கிலப் புத்தகத்தைக் காட்டுவார். அதில் இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இருக் கும். 'இதில்தான் உங்கள் பணம் முதலீடு செய்யப்படுகிறது. நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் தந்தால், 8,500 ரூபாய் மாதம்தோறும் வட்டியாக வரும். வேறு

யாரையாவது சேர்த்து விட்டால் கூடுதலாக 2,000 ரூபாய் கிடைக்கும். ஆனால், இந்தப் பணத்துக்கு ரசீது எதுவும் தரப்படாது. மாதம் 7-ம் தேதியானால் பணம் உங்கள் இல்லம் தேடி வந்துவிடும்’ என்று உறுதி கொடுப்பார்கள். அதை நம்பித்தான் பணம் போட்டுள்ளனர். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் இந்த மோசடி நடந்துள்ளது. தொடர்ந்து புதிதுபுதிகாகப் பணம் போடுபவர்கள் இருந்ததால், இந்த மோசடி இத்தனை ஆண்டுகளும் நடக்க சாத்தியப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரம் பேர் பணம் போட்டுள்ளனர். கடந்த மாதம், வட்டி வரவில்லை என்றதும், பணம் போட்டவர்கள் முகவர்களை முற்றுகை இட்டிருக்கிறார்கள். உடனே அந்த முகவர்கள், 'பணம் போட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்று, ஈரோடு எஸ்.பி-யிடம் மனு கொடுத்து விட்டனர். அதன்பிறகுதான் இப்படி ஒரு மோசடி நடந்ததே வெளியே தெரிந்துள்ளது. இதுவரை, புகார் கொடுத்த முகவர்களின் எண்ணிக்கை 200. ஒவ்வொரு முகவரும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்.

புகார் கொடுத்திருக்கும் முகவர் விஜயகுமார், ''இதுவரை வட்டி சரியாகத்தான் வந்தது. ஆனால், கடந்து 20 நாட்களாக எந்தத் தொடர்பும் இல்லை. பணம் கொடுத்தவர்கள் எங்களைத் தாக்க வரு கின்றனர். அதனால், புகார் கொடுத்து இருக்கி றோம். இதுவரை முகவர்கள் மூலமாக 32,000 கோடி வசூலிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வைப் பரப்பி வரும் வழக்கறிஞர் தளபதி, ''மூன்று மாதங்களுக்கு முன் சத்திய மங்கலத்தை அடுத்த புளியம்பட்டியில் இந்த நிறுவனத்தின் முகவராக இருக்கும் செல்வம், வெள்ளங்கிரி ஆகியோர் பாஸ்போர்ட் விண்ணப்பித்தனர். அதற்கான

விசாரணைக்கு போலீஸ் அவர்கள் வீட்டுக்குப் போனார்கள். மோசடி விவகாரத்துக்காக போலீஸ் தங்களைப் பிடிக்க வருவதாக நினைத்து அவர்கள் இருவரும் தப்பிக்க முயற்சி செய்தனர். போலீஸ் உடனே சுதாரித்து அவர்களைக் கைதுசெய்து விசாரித்தபோது, அவர்கள் காரில் இருந்த 36 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அவர்களை கோவை வருமான வரித் துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் அதன்பிறகு, இந்தப் பிரச் னையை போலீஸ் கண்டு கொள்ளவில்லை. அப்போதே போலீ ஸார் இவர்களைக் கண்காணித்து இருந்தால், இந்த மோசடி நிறுவனத்தைக் கூண்டோடு பிடித்து இருக்கலாம். புகார் வரவில்லை என்று, அசட்டையாக செயல்படுவதை போலீஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும். சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் மொத்தமே 300 குடும்பங்கள்தான் இருக்கின்றன. அந்தக் கிராமத்தில் இருந்து மட்டும் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் பணம் போட்டு இருக்கிறார்கள். அதேபோல், கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கெட்டிசேவியூரில் 5,000 பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்த மோசடி ஒரு லட்சம் கோடியைத் தாண்டி நடந்திருக்கும். பணம் திரும்பக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதால், பலரும் அமைதியாக இருக்கிறார்கள். அனைவரும் விரைவில் புகார் கொடுக்க வருவார்கள்'' என்றார்.

இந்தப் புகார் குறித்து ஈரோடு மாவட்ட எஸ்.பி. பொன்னி, ''இதுவரை பொதுமக்கள் புகார் தரவில்லை. புகார் கொடுத்த அனைவரும் முகவர்கள்தான். அவர்கள் குற்றவாளிகள். தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று மனு கொடுத்து உள் ளனர். அவர்களின் புகார் குறித்து சட்ட அபிப்ராயம் கேட்கப்பட்டுள்ளது'' என்றார்.

புகார் வரவில்லை என்பதற்காக, போலீஸ் சும்மா இருக்கலாமா?

- ம.சபரி , படங்கள்: க.ரமேஷ்