கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கலங்கடிக்கும் கொடூரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது!

ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமம் தோப்புவலசை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர், சவுதி அரேபியாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காளிமுத்து, குழந்தைகள் காளீஸ்வரி, பாலமுருகன், சரண்யா, சக்தி ஆகியோருடன் தங்களுக்குச் சொந்தமான ஒதுக்குப்புற நிலத்தில் குடிசை போட்டு வசித்து வந்தனர். காளிமுத்துவுக்குத் துணையாக அவருடைய தந்தை கருப்பையாவும் அந்த வீட்டிலேயே இருந்துள்ளார்.

அக்டோபர் 1-ம் தேதி காலை பொழுது விடிந்தபோது... கள்ளழகரின் வீடு எரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஊர் மக்கள். வீட்டுக்குள் காளிமுத்து, அவருடைய தந்தை கருப்பையா மற்றும் குழந்தைகள் நால்வர் என அத்தனை பேரும் கருகிக் கிடந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார், ஆறு உடல்களையும் மீட்டு, அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு அவர்கள் உடல்கள், வீட்டுக்கு அருகிலேயே ஒன்றாக வைத்து மீண்டும் எரியூட்டப்பட்டன.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய என்மனங் கொண்டான் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன், ''மீன் பிடித்தொழில் சரியில்லாததால், ஒரு வருடத்துக்கு முன், வெளிநாட்டுக்குச் சென்றார் கள்ளழகர். அவரது நிலத்துக்கு அருகே இருந்த நிலத்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்த லூயிஸ்ராஜ் வாங்கினார். அப்போது கள்ளழகர் நிலத்தையும் சேர்த்து தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளார். பட்டா போடப்பட்ட அந்த நிலத்தை பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே நிலப் பிரச்னை ஏற்பட்டு, விஷயம் கோர்ட்டுக்குப் போனது.

இந்தநிலையில், லூயிஸ்ராஜ் தன்னு டைய பெயரில் இருந்த இடத்தை நாகாச் சியைச் சேர்ந்த சிலருக்கு பவர் எழுதிக் கொடுத்துள்ளார். பவர் வாங்கியவர்கள், கள்ளழகரின் மனைவி காளிமுத்துவிடம் சென்று வீட்டை காலி செய்யச்சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக காளிமுத்துவுக்கும் பவர் வாங்கியவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்தப் பிரச்னைதான் இத்தனை தூரம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இந்தக் கொடூர சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் முறையான ஆவணங்கள் இன்றி யார் பெயருக்கும் யாருடைய நிலத்தையும் பட்டா போட்டுக்கொடுக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற துயரங்களுக்கு முடிவுகட்ட முடியும்'' என்றார் வேதனையோடு.

காளிமுத்துவின் உறவினர் சௌந்தரம், ''ஆண்டாண்டு காலமாக இந்த நிலத்தில்தான் கள்ளழகர் குடும்பத்தினர் குடியிருந்தனர். ஊர் புறம்போக்கு நிலத்தை வளைத்து விற்க முயன்றவர்கள், கள்ளழகர் நிலத்தையும் சேர்த்து பறிக்கப் பார்த்தனர். அதற்கு அவன் சம்மதிக்கவில்லை. அந்தக் கோபத்தில்தான் வீட்டுக்கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு, தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது தீ வைத்து எரித்திருக்கிறார்கள். என்னதான் மண்ணுமேல ஆசை இருந்தாலும், இப்படியா பச்சைக் குழந்தைகள் என்றுகூட பாக்காமல் எரிப்பார்கள்? வெள்ளமாரிவலசை முனியாண்டியும், கல்கிணற்றுவலசை காளிமுத்துவும்தான் இதற்கெல்லாம் காரணம். அவர்கள் இருவரும்தான் சம்பவத்துக்கு முதல் நாள் வந்து நோட்டம் பார்த்துவிட்டு போனார்கள். பச்சை மண்ணுகளை துள்ளத் துடிக்க கொளுத்திய அவர்களுக்கு நல்ல சாவே வராது'' என்று கண்ணீரோடு சாபமிட்டார்.

கள்ளழகரின் குடிசையில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு வீடுகள் எதுவும் இல்லை. காளிமுத்து தன்னுடைய குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டு இருக்கும்போது அங்கு வந்த கொலையாளிகள் குடிசை வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு, தாழ்பாளில் கனத்த குச்சியை சொருகி வைத்துள்ளனர். பிறகு, நெருப்பை வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி உள்ளனர். நெருப்பில் சிக்கித்தவித்த காளிமுத்துவும் குழந்தைகளும் தப்பி ஓட முடியாமல், முற்றிலும் கருகிப் போயிருக்கிறார்கள். அதிலும் ஒரு வயதுக் குழந்தையான சக்தி தவழ்ந்த நிலையில் கதவின் அருகில் கருகிக் கிடந்த காட்சி காண்பவரைக் கண்ணீர் சிந்த வைத்தது. அந்த வீட்டில் இருந்த பீரோவை போலீஸார் திறந்து பார்த்தனர். காளிமுத்து தனது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ புதிதாகக் கிடைத்தது. வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவருக்கு அனுப்புவதற்காக சில நாட்களுக்கு முன்தான் காளிமுத்து இந்த போட்டோவை எடுத்துள்ளார்.

இந்தக் கொலை குறித்து நம்மிடம் பேசிய டிஎஸ்.பி. மணிவண்ணன், ''கொலைக்கான காரணமாக நிலப்பிரச்னை சொல்லப்பட்டாலும், இறந்து போன காளிமுத்துவின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகுதான் உண்மையான காரணம் தெரிய வரும். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைக்கொண்டு கொளையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளோம். விரைவில் கொலையாளிகள் சிக்குவார்கள்'' என்றார்.

கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்!

- இரா.மோகன்,

படங்கள்: உ.பாண்டி