குன்றத்தூரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் கடந்த 6-ம் தேதி இரவு 10.30 மணியளவில் ஒன்றுகூடி கூட்டம் நடத்திய 13 பேரை கைது செய்திருக்கும் கியூ பிராஞ்ச் போலீஸார், 'ஆயுதப் பயிற்சிக்குத் திட்டம் போட்ட நக்ஸலைட்டுகள்’ என்று சொல்லி வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். அதில் ராகினி என்ற பெண்ணும் ஒருவர். அதனை அடுத்து, 'ஆயுதப் போராட்டம் நடத்தும் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் வடக்கைப் போல் தெற்கிலும் வலுப் பெற்று விட்டதா?’ என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. 'உண்மை யில் அன்று நடந்தது என்ன? கைது செய்யப்பட்டவர்கள் யார்?’ என்று விசாரணையில் இறங்கினோம்.

மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது, ''குன்றத்தூரில் கைதானவர்களில் துரை சிங்கவேலு, பழனிமாணிக்கம், பாஸ்கர், புவியரசன் போன்றவர்கள் முன்பு எங்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்கள்தான். 2002-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபெற்ற அரசியல் பயிற்சி வகுப்பில் எங்களுடன் இவர்களும் பங்கேற்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்பிய நாங்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு, பொடா சட்டத்தின் கீழ் சிறையில் ஒன்றாகத்தான் அடைக்கப்பட்டு இருந்தோம்.

சிறையில் இருந்து வெளிவந்த உடன் இவர்கள் நால்வரும் கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். தலைமறைவாக இயங்குவதும் ஆயுதப் போராட்டமும் தற்போது சாத்தியமில்லை என்று கூறினர். மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து பணியாற்ற வேண்டும்

என்றும் மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதை எங்கள் தலைமை ஏற்காததால், இயக்கத்தில் இருந்து தங்கள் தொடர்புகளை முற்றிலுமாகத் துண்டித்துகொண்டனர். அதன்பின் பொதுமை பரப்புநர் நடுவம், புதிய போராளிகள் இயக்கம் என்ற பெயர்களில் இயங்கி வந்தனர். தற்போது மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி உள்ளனர்.

கடந்த பல வருடங்களாகவே எந்தவித மான ஆயுதப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை. அதற்கான செயல் திட்டம்கூட அவர்களிடம் இல்லை. கைது செய்யப்பட்டபோது கூட அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லையே? இப்படிப்பட்டவர்களைக் கைதுசெய்துவிட்டு மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் என்று போலீஸ் கதை கட்டுகிறது'' என்றார்கள்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், ''அன்று நடந்தது ரகசியக் கூட்டமோ அல்லது சதித் திட்டமோ அல்ல. முறையாக பள்ளி நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கி நடைபெற்ற கலந்துரையாடல். அவ்வளவுதான்! அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் புதிய போராளிகள் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது அவர்களுடைய இயக்கத்தின் பெயரை மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி என்று மாற்றி உள்ளனர். அது தடை செய்யப்பட்ட கட்சி அல்ல. வெளிப்படையான அமைப்பு. அந்த அமைப்புக்கு என்று ஒரு பத்திரிகையும் உள்ளது. அதுவும் தடை செய்யப்பட்ட பத்திரிகை அல்ல. இப்படிப் பட்ட நிலையில் இந்தக் கைது மூலம் காவல் துறை, மனித உரிமை செயல்பாடுகளை அச்சுறுத்த நினைக்கிறது.

சங்கம் அமைப்பது, கூடிப் பேசுவது, நியாயமான நோக்கத்துக்காக பிரசாரம் செய்வது போன்றவை எல்லாம் இந்திய குடிமக்களுக்கு அரசியல் அமைப்பு தந்திருக்கும் உரிமை. ஆனால், இந்த 13 பேரை கைதுசெய்திருப்பதன் மூலம் காவல் துறை அதை அவமதித்துள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மற்ற மனித உரிமை அமைப்புகளுடன் கலந்து பேசி கண்டனக் கூட்டங்கள் நடத்த உள்ளோம்'' என்று சீறினார்.

கியூ பிராஞ்ச் எஸ்.பி-யான சம்பத்குமாரிடம் இந்த விவகாரம் பற்றி பேசினோம். ''தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து பல சதித் திட்டங்களில் ஈடுபட்டவர்கள். பொடா சட்டத்தின் கீழ் ஏற்கெனவே சிறையில் இருந்தவர்கள். அதன் பின் புதிய போராளிகள் என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். அது தடை செய்யப்பட்டதும், மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி என்று பெயரை மாற்றி செயல்படுகின்றனர். போலீஸை ஏமாற்றுவதற்காகத்தான் இந்தப் பெயர் மாற்றம். மற்றபடி அவர்களின் நோக்கம் எப்போதும் வன்முறைதான். அதனால் அவர்களை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது எங்களின் கடமை. அப்படித்தான் அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்களைக் கண்காணித்து கைதுசெய்தோம். அவர்கள் மீது ரகசியமாக கூடி சதித்திட்டம் தீட்டுதல், தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் நிறைய விவரங்கள் கிடைத்துள்ளன'' என்றார்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு கொண்டு வரும்போது கோஷம் போட்டுக்கொண்டே வந்தார்கள். ''காவல் துறை எங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளது. நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவது பற்றி விவாதிக்கவே அன்று கூட்டம் நடத்தினோம். இதை நீதிமன்றத்தில் நிரூபித்து விடுதலையாவோம்'' என்றனர்.

உண்மை என்னவோ..?

- ஜோ.ஸ்டாலின், எஸ்.கிருபாகரன்

படம்: சு.வெங்கடேசன்