தமிழ்நாட்டில் மிகப்பழமையான நகராட்சிகளில் குடி யாத்தமும் ஒன்று. அ.தி.மு.க-வின் கையில் இருக்கும் இந்த நகராட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆளும் கட்சியினரே கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

குடியாத்தம் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம். ''எங்க பெயரைப் போடாதீங்க. நகராட்சி சேர்மனாக அமுதா சிவப்பிரகாசம் பதவி ஏற்று ஒரு வருஷம் ஆகப் போகுது. இதுவரை உருப்படியா ஒரு காரியமும் செய்யலை. அதனால எங்க கட்சிக்குத்தான் கெட்ட பெயர். கடந்த மாதம் 27-ம் தேதி, வேலூர் மாநகராட்சி கமிஷனரிடம், 'செயல்படாத சேர்மன் அமுதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கவுன்சிலர்கள் புகார் கொடுத்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டும் புகார் கொடுத்ததா நினைக்காதீங்க, அ.தி.மு.க உறுப்பினர்களும் சேர்ந்துதான் கொடுத்தாங்க. மொத்தம் உள்ள 36 உறுப்பினர்களில் 32 பேர் புகார் கொடுத்தாங்க. இதில் இருந்தே அவங்க எந்த அளவுக்குச் செயல்படுறாங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம். இதுக்கு மேல உள்விவரங்களைச் சொன்னா, அது எங்க கட்சிக்குத்தான் அசிங்கம்! அவங்க இனியாவது செயல்படத் தொடங்கணும். இல்லைன்னா எங்ககட்சி சார்பிலேயே போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும்'' என்று கோபப்பட்டனர்.

குடியாத்தம் நகராட்சி 29-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் காந்திமதி, ''எங்க வார்டில் இருக்கும் வீடு களுக்குத் தண்ணீர் சப்ளையாகி பல நாட்கள் ஆச்சு. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில்

மட்டும்தான் எந்தக் காலத்திலும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். நான் சேர்மனை சந்தித்து எத்தனையோ முறை எடுத்துச் சொன்னாலும், அவர் கண்டு கொள்வதே இல்லை. இத்தனைக்கும் இவர் அ.தி.மு.க-வின் வேலூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் இருக்கிறார். கட்சியிலும் நல்ல பதவியில் இருந்துகொண்டு, எதையும் கண்டுகொள்ளாமல் அசட்டை யாக இருந்தால் எப்படி?

பொறுக்க முடியாத நிலையில்தான் 32 உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து மாநக ராட்சி கமிஷனர் ஜானகியிடம் புகார் கொடுத்தோம். அவரும், ''நீங்க எல்லோரும் உங்க வேலையைக் கவனியுங்க, நான் நேரடியாக வந்து பிரச்னைகளைப் பார்த்துத் தீர்த்து வைக்கிறேன்'' என்றார். ஆனால், அன்று சொன்னதோடு சரி. இதுவரை அவரும் இந்தப் பக்கம் தலை காட்டவே இல்லை.

அமுதாவைப் பொறுத்தவரை, அவர் பேருக்குத்தான் குடியாத்தம் சேர்மன். அதிகார பலம் எல்லாமே

அவரது கணவர் சிவப்பிரகாசத்திடம்தான் இருக்கிறது. அமுதாவின் நிழல்போல கூடவே இருப்பார். கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதை நாங்கள் எதுவும் சொல் லவில்லை. ஆனால், அவர் அரசாங்க விழாக்களிலும் நகராட்சி கூட்டங்களிலும் சேர்மன் அறையில் இருப்பது தவறு. பொதுமக்கள் ஏதேனும் புகார் கொடுக்க வந்தால், இவர்தான் பேசி அனுப்புகிறார். எங்களது உறுப்பினர்கள் பலரும் சேர்ந்து 'உங்களது கணவரை ஏன் அரசு நிகழ்ச்சிகளில் அனுமதிக்கிறீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு அமுதா பதில் சொல்லவில்லை. அவரது கணவர் சிவப் பிரகாசம், 'என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் அப்படித்தான் வருவேன்!’ என்று தைரியமாக பதில் சொன்னார்.

அமுதா தினமும் பகல் 12 முதல் 1 மணி வரைதான் நகராட்சியில் இருப்பார். அதன்பிறகு அவரது கோழிக்கடைக்குப் போய்விடுவார். அவரது, அமுதா சிக்கன் சென்டர் குடியாத்தத்தில் மிகப் பிரபலம். அதனால், மற்ற நேரங்களில் எல்லாம் கோழிகளுக்கு தீவனம் போட்டு நன்றாகக் கவனிக் கிறார். கோழிகளுக்கு மரியாதை கொடுத்து கவனிக்கும் சேர்மன், குடியாத்தம் மக்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்துப் பேச, அமுதா சிவப் பிரகாசத்தைத் தொடர்பு கொண்டபோது... அவர் பேச முன்வரவில்லை. அவரது கணவர் சிவப்பிரகாசம், சேர்மன் சார்பில் பேசினார். ''இதுவரை குடியாத்தம் நகராட்சிப் பகுதிகளில் 60 போர்கள் அமைத்து உள்ளோம். நான்கு நாளுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். தினமும் நகராட்சியில் மூன்றுமணி நேரம் இருந்து மக்கள் குறை களைக் கேட்கிறோம். நேற்று நடந்த கூட்டத்தில் கூட குடிநீருக்காக மட்டும் இரண்டு கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளோம். மக்கள் பணி செய்வது மட்டுமே எங் களது குறிக்கோள். மற்றபடி என்னைப் பற்றி வரும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்யானவை!'' என்றார்.

அமுதாவின் பதில்களைக் கூட, அவரது கணவர் சிவப் பிரகாசம் கூறுகிறார் என்றால் குடியாத்தம் நகராட்சியில் என்னதான் நடக்கிறது?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்