'எங்களுக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் களே, புராஜெக்ட் நோட்டில் கையெ ழுத்துப் போட வேண்டும் என்றால், எங்கள் ஆசைக்கு உடன்பட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்’ - என்று ஒரு கதறல் புகார் கடிதம் ஒன்று, நமது அலுவலகத்துக்கு வந்தது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவிகள் தான் இப்படி ஓர் அதிர்ச்சிப் புகார் அனுப்பி இருந்தனர்!

தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் இருக் கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். இங்கே, கிட்டத்தட்ட 1,500 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இன் டர்னெல் மார்க், புராஜெக்ட் போன்றவைகளைப் பயன்படுத்தி மாணவிகளிடம் சில பேராசிரியர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'கல்வி கற்க வரும் மாணவியர்களிடம் பாலியல் தொந்தரவு செய்யும் இரண்டு விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மாணவர் விடுதலைக் கூட்டமைப்பு போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இரண்டு பேராசிரியர்கள் பணியில் இருந்து விலகினர் என்றாலும் விவகாரம் இன்னமும் அனலாகத் தகிக்கிறது.

பாதிக்கப்பட்ட ஒரு முன்னாள் மாணவியை சந்தித்தோம்.

''பெயர் வேண்டாம் ப்ளீஸ்'' என்று பேசத் தொடங்கியவர், ''நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்.

பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பம் படித்தேன். இறுதி வருடப் படிப்புக்காக புராஜெக்ட் செய்ய வேண்டும். காந்திராஜன் மற்றும் போஸ் இருவரும் புராஜெக்ட் கெய்டாக செயல்பட்டனர். 'புராஜெக்ட் சரி பார்க்கணும்’ என்று அடிக்கடி அழைப்பார்கள். காந்திராஜன் மனைவி வெளியூருக்குச் செல்லும்போது எல்லாம் அவர் வீட்டுக்கு என்னையும் இன்னும் சில மாணவிகளையும் அழைப்பார். போஸ் தஞ்சாவூரில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அவர்கள் இருவருமே எங்களைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தனர். மறுத்தால், 'நோட்டில் கையெழுத்துப்

போட மாட்டேன். உன் படிப்பே நின்று விடும்’ என்று மிரட்டுவார்கள். அவர்கள் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் கல்லூரியில் அழுதேன். என் தோழிகளிடம் விஷயத்தைச் சொன்னேன். அதன் பிறகுதான் மற்ற மாணவிகளிடமும் அவர் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அனைவரும் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். விசாரணைக்குப் பின், இரண்டு பேராசிரி யர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இப்போது இருவரும் வேறு கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் நன்மாறன், ''பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்ற விழிப்பு உணர்வே பெரியார் வந்தபிறகுதான் எல்லோருக்கும் புரிந்தது. அவருடைய பெயரால் செயல்படும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது கொடுமை. இது பல்கலைக்கழக பிரச்னை என்று, விவகாரத்தை கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே முடித்து விட் டனர்.

இரண்டு பேராசிரியர்களும், மாணவிகளிடம் முறைதவறி நடந்து இருக்கிறார்கள் என்பது நிர் வாகத்தின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டாமா? சஸ்பெண்ட் செய்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று அமைதியாகி விட்டனர். அவர்களும் நிம்மதியாக வேறு கல் லூரிகளுக்கு வேலைக்குச் சென்று விட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் மட்டுமே போலீஸ் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்கள். அதனால், அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளேன். பாதிக்கப்பட்ட மாணவிகளை சந்தித்துப் பேசி புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வைப்பேன். இதுகுறித்து, சி.எம். செல் முதற்கொண்டு அனைவருக்கும் புகார் அனுப்பி இருந்தோம். அதன்பேரில், போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கொடுமை எங்கேயும் நடக்காது'' என்றார்.

பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ''நேரடியாக புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்து தானாகவே விலகி விட்டனர்'' என்றனர்.

பேராசிரியர் போஸிடம் பேசியபோது, ''நான் இப்போது கல்லூரியில் இருக்கிறேன். காந்திராஜன் உங்களிடம் பேசுவார்'' என்றார்.

காந்திராஜனிடம் பேசினோம். ''அது முழுக்க முழுக்கத் தவறான செய்தி. நாங்கள் கல்லூரியில் அதிக கண்டிப்புடன் செயல்பட்டதால் சில மாணவர்கள் எங்களுக்கு எதிராக இப்படி புகார் செய்கின்றனர். பெயர் குறிப்பிடாமல் பொய்யான புகார் அனுப்புகிறார்கள். போனிலும் சிலர் மிரட்டுகிறார்கள். கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், கல்லூரியில் இருந்து விலகினோம். தேவைப்பட்டால் எங்களுடைய நேர்மையை நிரூபிப்போம்'' என்றார்.

தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்!

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்