மதுரை மாவட்டத்தில் பி.ஆர்.பி-க்குச் சொந்தமான கிரானைட் குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் தூள்பறக்க... கரூர் மாவட்டத்தில் இன்னமும் அமைதிதான் நிலவுகிறது. பி.ஆர்.பி. குவாரிகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக கரூரில் இருந்து இரண்டு புகார்கள் வந்துவிட்ட நிலையில், அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்கிறார்கள் மக்கள்.

புகார் கொடுத்தவர்களில் ஒருவர் தோகைமலையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சிங்காரம். முதலில், அவரைச் சந் தித்தோம். ''நாங்க இங்கே பல தலைமுறையா வாழ்ந்துட்டு வர் றோம். 1994-ம் வருஷம், 'இங்கே கிடைக்கும் கிரானைட்க்கு உலக அளவில் கிராக்கி இருக்கிறது; விற்பனை செய்தால் கோடிக்கணக்கில் பணம் கொட்டும்’ என்று ரிச்சர்ட் என்ற பெங்களூருகாரர் சொன்ன பிறகுதான், இந்த மண்ணின் அருமை எங்களுக்குத் தெரிந்தது. அவர்தான், அரசிடம் எப்படி அனுமதி வாங்கி கிரானைட் தொழில் செய்வது என்பதையும் சொன்னார். அதைக்கேட்டு நானும் அரசிடம் பர்மிட் வாங்கி, எனக்குச் சொந்தமான 12.5 ஏக்கரில் கிரானைட் தொழில் செய்து வந்தேன். என்னுடன் சேர்ந்து நிறையபேர் சின்னச்சின்ன குவாரிகளை நடத்தினாங்க. எல் லோரிடமும் கிரானைட் கற்களை ரிச்சர்ட்தான் வாங்கி விற் பனை செய்து கொடுத்தார்.

1998-ம் வருஷம் பி.ஆர்.பழனிச்சாமியின் அக்காள் மகன் காந்திராஜன் தோகைமலைக்கு வந்தார். 20 சென்ட் அளவுள்ள ஒரு சின்ன குவாரியை லீஸுக்கு எடுத்தார். குவாரி வைத்திருந்த அனைவரிடமும்

ரிச்சர்ட் பற்றி தவறாகச் சொல்லி, அவரை தோகைமலையை விட்டு விரட்டினார். எல்லா குவாரிக்காரர்களும் கிரானைட் கல்லை காந்திராஜனிடம் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையை ஏற்படுத்தினார். காலப்போக்கில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை கைக்குள் போட்டுகிட்டு, தோகைமலையில குவாரி நடத்தியவர்களின் அத்தனை இடத்தையும் வளைத்துப்போட ஆரம் பித்தார். இப்போது, தோகைமலையில் அவரிடம் 1,000 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது.

என்னுடைய 12.5 ஏக்கர் நிலத்தின் மீதும் பத்து வருடங்களுக்கு முன்பே கண் வைத்தார். நான் தர முடியாதுன்னு மறுக்கவும், என் குவாரிக்கு போற பாதையை அடைத்து வைத்து கடுமையான நெருக்கடி கொடுத்தார். நான் போலீஸில் புகார் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை. காந்தியைப் பகைச்சுக்காதீங் கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

கடந்த வருஷம் மார்ச் 2-ம் தேதி தன்னோட ஆட்கள் மூலமா என்னைக் கடத்திட்டு போய் மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டார் காந்திராஜன். அந்த நிலத்தில் எங்க பரம்பரை வீடு மோட்டார், கிணறு எல்லாம் இருந்தது. 200 தென்னை மரம், வாழை, கடலை, சூரியகாந்தி எல்லாம் போட்டு விவசாயமும்

செஞ்சுக்கிட்டு இருந்தோம். எல்லாத்தையும் பறிச்சிட்டு எங்களை நிர்மூலமாக்கிட்டாங்க. இடத்துக்கு ஒரு கோடி ரூபா மட்டும் பணம் கொடுத்தாங்க. அந்தப் பணம் அப்படியே இருக்கு. எங்களுக்கு இன்னும்

எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேணாம். நாங்க சாமியா நினைக்கிற எங்க நிலம்தான் வேணும். இங்கே இருக்கிற அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால், மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடமும், எஸ்.பி. பாலகிருஷ்ணனிடமும் மனு கொடுத்தேன். அதுக்குப் பிறகுதான் சில அதிகாரிகள் வந்து இடத்தைப் பாத்துட் டுப் போயிருக்காங்க. எங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நம்புறோம்'' என் றார் எதிர்பார்ப்புடன்.

தோகைமலையைச் சேர்ந்த பெரிய சாமியும் மதுரை கலெக்டரிடம் நில மோசடி புகார் கொடுத்து இருக்கிறார். ''என்னுடைய பூர்வீக இடம் 9.58 ஏக்கரை காந்திராஜன் மிரட்டி பறிச்சுட்டார். இது சம்பந்தமா கரூர் கலெக்டர்ல இருந்து சி.எம். செல் வரைக்கும் புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. எங்கள் நிலத்தைப் பறிச்சதை எதிர்த்துக் கேட்ட பாவத்துக்காக என் மகன் மீது, தீண்டாமை வழக்கு போட வைத்தார். எந்தக் குற்றமும் செய்யாத அவன் ஆறு மாசமா ஜெயில்ல இருக்கான். இதுக்கு நியாயம் கேட்கப் போன என் மனைவியையும் அடித்து உதைச்சாங்க. அதில் பாதிக்கப்பட்டு அவ செத்தே போயிட்டா. இடத்தையும் மனைவியையும் பறிகொடுத்துட்டு நான் தவிக்கிறேன். தோகைமலையில் ரொம்ப சாதாரண ஆளா இருந்தவர் மூர்த்தி. அவர்தான் இப்ப காந்திராஜனுக்கு எல்லாமே. இப்ப மூர்த்தியும் பல கோடிகளுக்கு அதிபதி. என் மனைவி இறப்பில் மூர்த்திக்குச் சம்பந்தம் இருக் குன்னு எங்க ஊர் போலீஸ்ல சொல்லியும் கண்டுக்க மாட்டேங்குறாங்க'' என்று புலம்பினார்.

இதுகுறித்துப் பேச, காந்திராஜனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், முடியவில்லை. பி.ஆர்.பி. தரப்பில் மூர்த்தியிடம் பேசினோம். ''நான் கஷ் டப்பட்டு முன்னுக்கு வந்தவனுங்க. எங்க ஊர் மக்களோட வளர்ச்சிக்கு காந்தியும் ஒரு முக்கிய மான காரணம். இவங்க சொல்ற புகார் எல்லாம் வேணும்னே ஒரு உத்தமர் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் திட்டமிட்ட சதி. எங்க அண்ணன் சொக்கத்தங்கம். பி.ஆர்.பி-யோட சட்டத்துக்கு உட்பட்ட வளர்ச்சி இவங்களுக்குப் பிடிக்கலை. யாராலயும் பி.ஆர்.பி-யை அசைக்கவோ, அழிக்கவோ முடியாது'' என்றார்.

இதுகுறித்து, கரூர் எஸ்.பி சந்தோஷ் குமாரிடம் பேசினோம். ''நீங்க சொன்ன மாதிரி ரெண்டு பேரும் புகார் கொடுத்து இருக்காங்க. புகார் விசாரணையில் இருக்கு'' என்று மட்டும் சொன்னார்.

கரூரில் அதிரடி எப்போது தொடங்கும் என்று காத்திருக்கிறார்கள் மக்கள்!

- ஞா.அண்ணாமலை ராஜா