'எங்கள் ஊருக்கு ரேஷன் கடை வருவதற்கு எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வே தடையாக இருக்கிறார்’ என்று குமுறுகிறார்கள் சேலம் அருகே உள்ள தீரானூர் மக்கள்!

ஏரியாவின் அ.தி.மு.க. இணைச் செயலாளர் முத்து இதுபற்றி நம்மிடம் பேசினார். ''எங்க பஞ்சாயத்தில் தம்மநாயக்கன்பட்டியில் மட்டும்தான் ஒரே ஒரு ரேஷன் கடை இருக்கிறது. இந்த கடையில் தான் சுற்றியுள்ள குக்கிராமங்களைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொருட்கள் வாங்க வேண்டும். இந்தக் கடை எங்களுக்குத் தொலைவில் உள்ளது என்பதுடன் குறுக்கே சேலம் டு கரூர் அகல ரயில் பாதை போடப்பட்டதால், பெரியவர்கள் ரயில் பாதையைத் தாண்டி போக முடியவில்லை. இந்தக் கடையில் ரேஷன் அட்டைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் பொருட்களும் சரிவர கிடைக்கவில்லை.

தனி ரேஷன் கடை கேட்டு நாங்கள் மனு கொடுத்ததை அடுத்து, தம்மநாயக்கன்பட்டி ரேஷன் கடையில் இருந்து 412 கார்டுகளைப் பிரித்து பகுதி நேர நியாயவிலை கடை திறப்பதற்கு, கலெக்டர் கடந்த மாதம் உத்தரவு போட்டார். புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு எங்க ஊர் மாரியம்மன் கோயில் அருகே இடத்தைப் பார்த்தார்கள். கட்டடம் கட்டித் திறக்கும் வரை கடை நடத்த எங்கள் ஊரில் ஒரு வீட்டை இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்தோம். அதையும் அதிகாரிகள் பார்த்துவிட்டு ஓகே சொன்னார்கள்.

ஆனால் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வான செல்வம் எங்க ஊரில் ரேஷன் கடை திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஏனென்றால், அவரின் கார் டிரைவராக இருக்கும் வைத்தி, தம்மநாயக்கன்பட்டி 8-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். அவருடைய வார்டுக்கு இந்த ரேஷன் கடையைக் கொண்டு போகத் துடிக்கிறார். கலைப்பாறை என்ற குடியிருப்பே இல்லாத முட்புதர் நிறைந்த ஏரிப் பகுதியில் ரேஷன் கடைத் திறக்க பூமி பூஜை போட்டிருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?'' என்று கொதித்தார்.

தீரானூரைச் சார்ந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி, ''எங்க ஊரில் இருந்து ரேஷன் கடை இருக்கும்

தம்மநாயக்கன்பட்டி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குது. அதுவும் ரயில் ரோட்டை தாண்டி போகணும். எப்ப போனாலும் கும்பலாவே இருக்கு. ஒரு நாளைக்கு கூலி வேலைக்குப் போனா 200 ரூபாய் தர்றாங்க. பிழப்பை விட்டுட்டு போனாலும் ரேஷனில் பொருள் வாங்க முடியல. பல முறை போய் அலைஞ்சாதான் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியும். அதையும் இவ்வளவு தூரம் தலையில்வெச்சு தூக்கிட்டு வர முடியல. வயலிலும், மேட்டிலும் விழுந்து எழுந்திருச்சு வர வேண்டியதா இருக்கு. அதனால் தீரானூருக்குதான் ரேஷன் கடை வரணும். வேற எங்கே போனாலும் இதே பிரச்னைதான் இருக்கும். எங்களுக்கு பிரயோஜனம் இல்லை'' என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.கே.செல்வத்திடம் கேட்டோம். ''தம்மநாயக்கன்பட்டி ரேஷன் கடையில் இருந்து சில கார்டுகளைப் பிரித்து பகுதி நேர கடை திறக்க கலைப்பாறை என்ற இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு என்னு டைய நிதியில் இருந்து 7.10 லட்சம் ஒதுக்கி வேலை நடந்துவருகிறது. இது எல்லா கிராமத்துக்கும் மையப் பகுதி. தீரானூரில் இருப்பவர்கள் சிலர் அவர்கள் ஊருக்குள்ளேயே ரேஷன் கடை வரவேண்டும். என்று நினைக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ரேஷன் கடை வேண்டும் என்று கிளம்பி வந்தால், எங்குதான் வைக்க முடியும். அனைவரும் பயன் அடையும் வகையில் மைய இடத்தில் கட்டுவதுதான் முறை. என்னுடைய கார் டிரைவருக்காக இடத்தை மாற்றவில்லை'' என்றார் அமைதியாக.

இந்த விஷயத்தையே தீரானூர் மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த எம்.எல்.ஏ. முயற்சிக்கலாமே!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்