'மதுரை அரசு மருத்துவமனை யில் மருந்து கொள்முதலில் நடந்துள்ள பெரும் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்துள்ளோம். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இதே போன்று முறைகேடு நடந்திருக் கலாம் என்று கருதுகிறோம். எனவே, அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் தோழர்கள்.

இந்த முறைகேட்டைக் கண்டித்து மதுரை அரசு மருத்துவமனை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ள அண்ணாதுரை எம்.எல்.ஏ-வைச் சந்தித்தோம். 'அரசு மருத்துவமனைகளுக்குத் தேவை யான மருந்துகளில் பெரும்பாலானவை, மருத்துவ சேவைக் கழகத்தில் இருந்து சப்ளை செய்யப்படுகின்றன. தவிர, அத்தியாவசியமான மருந்துகளை வாங்கிக்கொள்ள, மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அனுமதி உண்டு. மாதத்துக்கு 15 லட்ச ரூபாய்க்கு மேல் மருந்து வாங்குவதாக இருந்தால், மருத்துவ சேவைக் கழகத்தில் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இந்த நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் முறைகேடாக டெண்டர் விட்டு, மருந்து வாங்கி இருக்கிறார்கள். அதுவும் வெளி மார்க்கெட்டைவிட 300 சதவிகிதம் கூடுதல் விலைக்கு மருந்துகள் வாங்கப்பட்டு இருக்கின்றன.

உதாரணமாக, புற்று நோய்க்கான 'சைக்லோபோஸ் போபைடு’ மருந்தின் சந்தை விலை 210 ரூபாய்தான். ஆனால் இவர்கள் 670 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருக்கிறார்கள். 320 ரூபாய் மதிப்புள்ள 'அவாஸ்டின்’ மருந்தை 1,800 ரூபாய்க்கும், 2,100 ரூபாய் மதிப்புள்ள 'ஹெர்ஜெப்டின்’ மருந்தை 12 ஆயிரம் ரூபாய்க்கும், 1.10 லட்சம் மதிப்புள்ள 'கெபாசிட்டாக்சல்’ மருந்தை 6.2 லட்சம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்படி அநியாய விலைக்குக் கொள்முதல் செய்த மருந்துகள் எல்லாம் தரமற்றவை என்று மருத்துவர்களே குற்றம் சொல்கிறார்கள்.

இந்த முறைகேட்டை டாக்டர்களாலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் மதுரை அரசு மருத்துவமனையின் மருந்து ஸ்டோருக்கான பொறுப்பு அதிகாரியாக இருந்த டாக்டர் செந்தாமரை இந்த வேலையே வேண்டாம் என்று போய்விட்டார். அடுத்து கணேஷ்பாபு என்பவரை அந்தப் பணியில் நியமித்தார்கள். அவரும் மாறிப்போய்விட்டார். ஆனால், இதை எல்லாம் தடுக்க வேண்டிய டீன் மோகன் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இருக்கிறார். இந்த முறைகேட்டில் அவருக்கும் பங்கு இருப்பதாகவே சொல்கிறார்கள்' என்றார் வருத்தத்துடன்.

தொடர்ந்து பேசிய அவர், 'மதுரையைப் பொறுத்தவரை பல முக்கியமான திட்டங்கள் வரப்போகின்றன. மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, மகப்பேறு மருத்துவமனை, புற்றுநோய் ஆராய்ச்சி மையம், செவிலியர் விடுதி, நவீன பிரேதப் பரிசோதனைக் கூடம் என்று மத்திய, மாநில அரசுகள் மூலம் சுமார் 275 கோடி ரூபாய் மதுரை அரசு மருத்துவமனைக்கு வர உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளிலேயே கைவரிசை காட்டும் அதிகாரிகளை நம்பி, இந்தப் பணத்தை ஒப்படைத்தால் சரிவராது. எனவே, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமித்து, அவரது மேற்பார்வையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மருந்து கொள்முதல் முறைகேடு குறித்து சிறப்பு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினேன். எந்தப் பதிலும் இல்லாததால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜய் என்னைத் தொடர்புகொண்டு பேசியதோடு, முறைகேடு பற்றி விசாரிப்பதற்காக சுகாதாரத் துறை துணை இயக்குநர் முத்துராஜை மதுரைக்கு அனுப்பிவைத்தார். ஆறு மணி நேரம் நடந்த விசாரணையில் முறைகேடு நடந்தது ஊர்ஜிதமானதால், அன்றைய தினமே சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்றார் வருத்தத்துடன்.

இதுபற்றி பேசுவதற்காக அமைச்சர் விஜய்யை பல முறை தொடர்புகொண்டோம். பேசுவதற்கு அவர் தயாராக இல்லை. அதனால் விசாரணை அதிகாரியான துணை இயக்குநர் முத்துராஜைத் தொடர்புகொண்டோம். 'முதல் கட்ட விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் வம்சதாராவிடம் ஒப்படைத்து இருக்கிறேன். துறை ரீதியான விசாரணை என்பதால், அது பற்றிய விவரங்களை நான் தெரிவிக்க முடியாது. மருத்துவக் கல்வி இயக்குநர் இதுபற்றி அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பார்' என்றார்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து