'பாலம் வருவதற்கும் திட்டம் முடிவடை வதற்கும் பாடுபட்டவன் நான். என்னைப் புறக்கணித்துவிட்டு திறப்பு விழாவா?’ என்று கொந்தளிக்கிறார் தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான சி.ஹெச்.சேகர்.

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே 23.37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி திறந்துவைத்தார் ஜெயலலிதா. கோட்டையில் இருந்தபடி முதல்வரும், புதிய பாலத்தின் அருகே கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி வீடியோ கான்ஃபெரன்ஸிங் முறையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டது குறித்து நம்மிடம் பேசிய சேகர், ''சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக கன்னியப்பன் கோயில் கேட் மற்றும் பெட்டிகுப்பம் ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப் பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அரசாணை வெளியிட்டு, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் வேலையும் தொடங்கினார்கள். ரயில்வே துறையும் தமிழக அரசும் 50:50 என்ற அடிப்படையில் நிதியை ஒதுக்கினார்கள். மிக மெதுவாக நடந்து வந்த இந்தப் பணியை, நான் எம்.எல்.ஏ. ஆன பிறகு துரிதப்படுத்தினேன். தொடர்ந்து மேம் பாலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துவந்தேன். ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை அணுகி வேலையை விரைவாக முடிக்கச் சொல்லிப் போராடினேன். கலெக்டர் ஆசிஸ் சாட்டர்ஜியை மட்டும் 20 தடவைக்கும் மேல் பார்த்து, முறையிட்டு இருக்கிறேன். அந்த முயற்சிகளின் பலனாகத்தான் நான்கு மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிந்து விட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் பாலத்தை திறக்கச் சொல்லி கலெக்டரிடம் கேட்டபோது, 'பெரிய பாலம் என்பதால், முதல்வர்தான் திறந்துவைப்பார். அவரிடம் தேதி கேட்டிருக்கிறோம்’ என்றார்.

முதல்வர் திறந்துவைக்கும்போது விழாவுக்கு அழைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். திடீரென்று பாலத்தைத் திறந்துவிட்டார்கள். பாலத்தைத் திறக்கப்போகும் செய்தி, விழா அன்றைக்குத்தான் எனக்கே தெரிந்தது. இதற்காக எந்த அழைப்பிதழும் அச்சடிக்காமல், வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் முதல்வர் திறந்துவைத்துவிட்டார். கட்டப்பட்ட பாலத் துக்கு அருகே அமைக்கப்பட்ட மேடையில் பொது மக்களுடன் கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எல்லோரும் இருந் தார்கள். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ-வான எனக்கு மட்டும் அழைப்பும் இல்லை. இந்தக் கொடுமை வேறு எங்காவது நடக்குமா?

சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்களை அழைக்காமல் எந்த மாநிலத்திலும் இப்படி அரசு விழா நடந்தது கிடையாது. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக மக்கள் பிரதிநிதியான என்னைப் புறக்கணித்து இருக்கி றார்கள். முதல்வர் தன்னுடைய சொந்தப் பணத்தில் இந்தப் பாலத்தைக் கட்டி இருந்தால் என்னை அழைக்க வேண்டியது இல்லை. அதை யாரும் கேள்விக் கேட்கப் போவதும் இல்லை. பொதுமக்கள் பணத்தில் கட்டப்பட்ட பாலத்துக்கு மக்கள் பிரதிநிதியை அழைக்காமல் அரசியல் செய்வது அபத்தம். இந்தப் பாலத்துக்கு பாதி நிதியை மட்டும்தான் தமிழக அரசு கொடுத்தது. மீதி நிதியை ரயில்வே கொடுத்து இருக்கிறது. ரயில்வே அதிகாரிகளைக்கூட விழாவுக்கு அழைக்கவில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்த 146 எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான் மக்கள் பிரதிநிதிகளா?'' என்று சீறினார்.

ரயில்வே துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ''திருச்சியில் இருந்து நெல்லைக்கு பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டபோது அமைச்சர் சிவபதிதான் ரயிலை பச்சைக் கொடி காட்டித் துவக்கினார். இதில் திருச்சி ஆளும் கட்சி எம்.பி. குமார், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் அழைக்கப்பட்டனர். ரயில்வே துறையின் மூலம் நடக்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் பாரபட்சம் பாராமல் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், ரயில்வே துறை பாதிப் பணம் போட்டும் அந்தத் துறையினரையே அழைக்காமல் தமிழக அரசு புறக்கணித்துவிட்டது'' என்று வருந்தினார்கள்.

'திருச்சியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றபோது மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் அழைப்பிதழில் போடப்பட்டது. ஆனால், இப்போது நடந்தது வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலம் நடந்த நிகழ்ச்சி. பொதுவாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ்கள் அச்சடிப்பது கிடையாது. அதனால்தான் யாரையும் அழைக்கவில்லை’ என்கிறது அரசுத் தரப்பு.

எதிர்க் கட்சி என்றால் எல்லோருக்குமே எட்டிக்காய்தானோ?

- எம்.பரக்கத் அலி