ஆரணி மற்றும் குடியாத் தத்தில் தேர் கவிழ்ந்து பக்தர்கள் பலியான சம்பவங்கள் கடந்த மே மாதம் நடந்தன. அதைத் தொடர்ந்து தேர் பவனிக்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் சார்பில் தீபத்தின்போது பவனி வரும் ஐந்து தேர்களும் மாலை 6 மணிக்குள் நிலையை அடைய வேண்டும் என்று கோயில் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்துவருகிறார்கள் தேருக்குக் கட்டை போடுபவர்கள், தேரைத் திருப்ப உதவும் ஆச்சாரிகள். இதனை சில பக்தர்களும் ஆதரிப்பதுதான் சிக்கலே!

அண்ணாமலையார் பக்தர் ரவி, ''எல்லா ஊர்களிலும் போன்று ஒரு தேர் என்றால், குறிப்பிட்ட நேரத்தில் நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் திருவண்ணாமலையில் ஐந்து தேர்கள் என்பதால், அத்தனையையும் குறிப்பிட்ட நேரத்தில் நிலைக்குக் கொண்டுவர சாத்தியமே இல்லை. தேர் பவனி

வரும் நாளில், பக்தர்களும் அதே பாதையில்தான் கரும்புத் தொட்டில் கட்டிக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை முடிக்க வருவார்கள். எல்லா தேர் பவனியையும் மாலை நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அவசரப்பட்டால்... பக்தர்களுக்குக் கண்டிப்பாக இடையூறு ஏற்படும். மேலும் அவசரம் காட்டுவதன் காரணமாகவே விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மாட வீதிகளில் சுற்றி வரும்போது குறிப்பாக கடலைக் கடை சந்திப்பு, திருவூடல் தெரு மேடு ஆகிய இரண்டு இடங்களில் தேரைத் திருப்புவது மிகவும் சிரமமாக இருக்கும். அந்த இடங்களில் பெரிய தேர் திரும்புவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். இது தவிர நல்ல நேரம் பார்த்து... பூஜைகள் செய்துதான் தேரைக் கிளப்ப வேண்டும் என்பதால் முன்கூட்டியே கிளப்பவும் முடியாது. தேர் குறிப்பிட்ட நேரத்துக்குள் நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று அவசரம் காட்டுவது புத்திசாலித்தனமான செயல் அல்ல'' என்று எச்சரிக்கிறார்.

தேருக்குச் சன்னக்கட்டை போடுபவரான ராஜேஷ், ''வழக்கமாக கார்த்திகை தீபத்தின் 10 நாள் திருவிழாவில் ஏழாம் நாள் அன்று (இந்த வருடம் நவம்பர் 24) தேர்த் திருவிழா நடக்கும். விநாயகர் தேர் அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டு மாட வீதி சுற்றி வந்த பின்னர், முருகன் தேர் புறப்படும். அதற்கு அடுத்ததாக அண்ணாமலையார் தேர் புறப்பாடு நடைபெறும். அதற்கு அடுத்து பெண்கள் மட்டுமே இழுக்கும் அம்மன் தேர் வலம் வரும். இறுதியாக சண்டிகேஸ்வரர் தேர் வரும். ஒவ்வொரு தேரும் மாட வீதியைச் சுற்றி வர சுமார் நான்கு மணி நேரமாவது பிடிக்கும். அதுவும் பெரிய தேர் சுற்றி வருவதற்கு மட்டும் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஆகும். அதனால் ஐந்து தேரும் மாலை 6 மணிக்குள் சுற்றி வர வேண்டும் என்று சொல்வது நடக்காத காரியம். அப்படிச் செய்வதற்கு சாத்தியமே இல்லை. இந்தத் தேர்களுக்கு கட்டை தூக்குவது, முட்டுப் போடுவது எல்லாம் எங்கள் போயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்களில் சுமார் 300 பேருக்குத்தான் தேருக்குக் கட்டை போடுவதில் அனுபவமும் தேர்ச்சியும் உண்டு. ஒரு தேருக்குக் கட்டை போடுவதற்கு மட்டும் குறைந்தது 100 பேர் தேவைப்படும். அதுவும் பெரிய தேருக்கு என்றால் குறைந்தது 300 பேராவது தேவைப்படும்.

தேர் பவனியின்போது ராகு காலம் வந்துவிட்டால், தேரை நிறுத்திவிட்டு, அது கழிந்த பிறகுதான் எடுப்போம். தேரை இழுக்க அந்த வி.ஐ.பி. வரணும்... இந்த வி.ஐ.பி. வரணும்னும் லேட் பண்ணுவாங்க.

இந்தத் திருவிழாவைப் பார்க்க சுத்து வட்டாரக் கிராமங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். வழக்கமாக தேர் பவனி முடிவதற்கு இரவு 2 மணிக்கு மேல் ஆகும். இந்த வருடம் தேரோட்டம் சீக்கிரமே முடியுதுன்னு தெரிஞ்சுபோச்சுன்னா எல்லா ஜனங்களும் ஒரே நேரத்தில் குவிய ஆரம்பிச்சுடுவாங்க. அதனால் நெருக்கடி அதிகம் ஆயிடும். பெல் நிறுவனத்தில் இருந்து தேருக்கு ஹைடிராலிக் பிரேக் போடுவதற்கு ஆபரேட்டர் ஒருவரும் உதவியாளர் ஒருவரும் மட்டும்தான் வருவார்கள். அவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, எப்படி எல்லாத் தேர்களையும் குறிப்பிட்ட நேரத்தில் நிலைக்குக் கொண்டு வர முடியும்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசிய துரை ஆச்சாரி (கோயில் மிராசு), ''நாங்கதான் எல்லாத் தேர்களுக்கும் முன் சக்கரத்தைத் திருப்ப கட்டை போடுவோம். நாங்க சுமார் 60 பேர் இருக்கோம். கோயில் நிர்வாகம் எங்களைக் கூப்பிட்டு நீங்க செய்துதான் கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அவங்களை மீற முடியாமத் தலையாட்டிட்டு வந்திருக்கோம். ஆனா, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அல்லது விபத்து ஏற்பட்டாலோ நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று கோயில் நிர்வாகத்திடம் சொல்லிவிட்டோம்'' என்றார்.

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதியிடம் பேசினோம். ''நீங்க சொல்றது எல்லாம் சரிதான். இது குறித்து விரைவில் எல்லோரையும் கூப்பிட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம். அதில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

பக்தர்களின் மனம் கோணாமல்... அதே நேரம் பாதுகாப்பான முடிவு எட்டப்படட்டும்!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்