கட்டும்போதே ஒரு பள்ளிக்கூடம் இடிந்துவிழவே... புதுக்கோட்டை மாவட்டமே அதிர்ச்சியில் மூழ்கி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை யில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோமாபுரம். இந்தக் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு அறிவியல் ஆய்வகம் கட்டுவதற்காக 2009-ம் ஆண்டு 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது அப்போதைய தி.மு.க. அரசு. கட்டி முடிக்க வேண்டிய காலம் கடந்தும் முழுமை பெறாமல் இருந்த அந்தக் கட்டடமும் கோமா நிலையில்தான் கிடந்து, இப்போது அது இடிந்தும்விட்டது. நல்லவேளை, அது மாணவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுத்தாத நாளில் விழுந்தது!

நம்மிடம் பேசிய கந்தவர்வக்கோட்டை அ.தி.மு.க. பிரமுகரான செங்கொடியான், ''கடந்த ஆட்சியில் அந்த ஸ்கூலுக்கு ஆய்வகம் கட்ட நிதி ஒதுக்கி இருந்தாங்க. அப்ப தெத்துவாசல்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஒன்றியக் கவுன்சிலராக இருந்தார். அவர் பெயரில் கான்ட்ராக்ட் எடுத்து, கந்தர்வக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவரா இருந்த மாரியய்யா இந்தக் கட்டட வேலையை ஆரம்பிச்சார். கட்டடம் கட்டத் தொடங்கும்போதே மணலுக்குப் பதிலா ஏரி மண்ணை சிமென்டில் கலந்து கட்டினாங்க. அப்பவே இந்தக் கட்டடம் எத்தனை நாளைக்கு இருக்கப்போகுதுன்னு பலரும் குறை சொன்னாங்க. ஆனா எதைப்பத்தியும் கவலைப்படாத மாரியய்யா, தொடர்ந்து வேலையைப் பார்த்தார். அதுக்குள்ள ஆட்சி மாறிடுச்சு.

இந்த வேலை 2010-ம் ஆண்டே முடிவடைஞ்சு இருக்கணும். ஆனாலும், தி.மு.க-வைச் சேர்ந்த மாரியய்யாவுக்கு சப்போர்ட்டா பொதுப் பணித் துறையைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் சேவியர்

செயல்பட்டார். டெண்டர் எடுத்து நாலு வருஷம் கடந்தும் கட்டி முடிக்காம இருக்கிறதைக் கண்டுக்கவே இல்லை. இந்தக் கட்டடத்துக்கு மேல் தளம் போட்டு எட்டு மாசமாச்சு. இன்னும் பூச்சு வேலை பார்க்கலை. அதனால் கட்டடம் பயன்பாட்டுக்கு வராம இருந்துச்சு. இந்த நிலையில் தானாவே அந்தக் கட்டடம் இடிஞ்சு தரைமட்டம் ஆயிருச்சு. கட்டும்போதே ஆய்வு செய்றேன்னு பொதுப் பணித் துறை அதிகாரி சேவியர் வந்து போயிட்டுத்தான் இருந்தார். அப்படி இருந்தும் கட்டடம் இடிஞ்சுருக்குன்னா, அவர் எந்த லட்சணத்தில் ஆய்வு செஞ்சிருப்பார்னு பாருங்க.

கட்டடம் இடிஞ்ச பிறகு அதைப் பார்வையிட வந்த சேவியர், இடி விழுந்து இடிஞ்சு போயிருச்சுன்னு வாய் கூசாமச் சொல்லிட்டுப் போயிட்டார். இடி விழுந்திருந்தா, பக்கத்தில் இருக்கும் கட்டடமும் சேதமடைஞ்சு இருக்கும். ஆனா, அப்படி எதுவுமே நடக்கலை. இப்பவே இடிஞ்சுபோனதால நல்லவேளையா உயிர்ப் பலி எதுவும் இல்லை. மாணவர்கள் இருக்கும்போது இடிஞ்சிருந்தா... நினைச்சுப் பார்க்கவே திகிலா இருக்கு. தவறு நடக்கக் காரணமா இருந்தவங்க, அதுக்கு உடந்தையா இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும். இதை செய்யலைனா... நானே தமிழக முதல்வரை சந்திச்சு முறையிடுவேன்'' என்றார்.

அகில இந்திய காந்தி பேரவையின் நிறுவனத் தலைவர் தினகரன், ''கான்ட்ராக்டர்கள் சிலர் காசு பார்ப்பதற்காகத் தரக்குறைவாக வேலை செய்வார்கள். அதை சரிபார்க்கத்தான் அதிகாரிகளை அரசு நியமனம் செய்திருக்கு. ஆனா, அதிகாரிகளே தவறுக்கு உடந்தையா இருந்திருக்காங்க. இந்தக் கட்டடம் மட்டுமில்ல... புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப் பணித் துறையால் கட்டப்பட்ட பல கட்டடங்களும் இப்பவோ, அப்பவோனுதான் இருக்கு. அதனால் பொதுப் பணித் துறையால் கட்டப்பட்ட அத்தனைக் கட்டடங்களையும் நேர்மையான அதிகாரிகளை வைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும். தரமில்லாத கட்டடங்களைக் கட்ட உதவியாக இருந்த அத்தனை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து, அதற்கான பணத்தை அவர்களிடம் இருந்தே பெற வேண்டும்'' என்றார்.

தலைமறைவாக இருக்கும் கோவிந்தராஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். ''எனக்கும் அந்தக் கட்டடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கட்டியவரைக் கேளுங்கள்'' என்று போனை துண்டித்துக் கொண்டார்.

கட்டடம் கட்டிய மாரியய்யாவிடம் பேசி னோம். ''எனக்கும் அந்தக் கட்டடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோவிந்தராஜ்தான் கான்ட் ராக்டர். அவரைத்தான் கேட்க வேண்டும்'' என்று நழுவினார்.

பொதுப் பணித் துறை உதவி செயற்பொறி யாளர் சேவியரிடம் பேசியபோது, ''நல்லா இருக்குற ஒரு கட்டடம் எப்படி கீழே விழும்? இடி விழுந்ததால் தான் இந்தக் கட்டடம் இடிஞ்சுபோனதா அந்தப் பகுதி மக்கள் சொன்னாங்க. இருந்தும் இது குறித்துப் புகார் கொடுத்து இருக்கோம். இரண்டு வருடங் களாக இந்தக் கட்டடம் கட்டி முடிக்காமல் இருப்பதால், இதுவரை ஐந்து முறை நோட்டீஸ் கொடுத்து அபராதம் போட்டிருக்கிறோம். கடந்த 15 நாட்களுக்கும் முன்புகூட 10 ஆயிரம் ரூபாய் அபராதம் போடப்பட்டது. கோவிந்தராஜ்தான் கான்ட்ராக்டர். எங்கள் ரெக்கார்டில் அப்படித்தான் இருக்கிறது. எனவே அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

தற்போது சேவியர் உள்ளிட்ட மூன்று அதிகாரி களைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அமைச்சர் ராமலிங்கத்தைத் தொடர்புகொண்டோம். ''இது தொடர்பாக மூன்று அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். பொதுப் பணித் துறையால் கட்டப்பட்டு இருக்கும் அத்தனை கட்டடங்களையும் மறு ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் அந்த அறிக்கை வந்ததும் நடவடிக்கை கடுமையாக இருக்கும். இதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை'' என்றார் கண்டிப் புடன்.

பள்ளிக்கூடத்தின் மீது இடி விழுந்ததோ, இல்லையோ மக்களின் வரிப் பணத்தில் இடி விழுந்திருப்பது நிஜம்.

- வீ.மாணிக்கவாசகம்