சாலை வசதி செய்து தரவில்லை என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடு வதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சாலை போடாதே என்று ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் அவினாசி மக்கள்.

என்னவாம் பிரச்னை..?

அவினாசி சாலைப்பாளையத்தைச் சேர்ந்த அங்காத்தா, ''எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள், நல்லாறு பக்கத்தில் இருக்கும் இடத்தைத்தான் சுடுகாடாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கடந்த வாரம் திடீரென்று இரவோடு இரவாக சுடுகாட்டை நிரவிவிட்டார் தி.மு.க. நகரச் செயலாளர் ரவிச்சந்திரன். அது மட்டும் இல்லாமல் அந்தப் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஆற்றில் இருந்து மண் தோண்டி எடுத்திருக்கிறார். தண்ணீர் இல்லாத ஆற்றின் குறுக்கே சாலை போடவும் பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார். உடனே ஊர் மக்கள் அனைவரும் போய் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினோம். ஆனால் பேரூராட்சித் தலைவி ஜெகதாம்பாள், 'அங்கு ரோடு வந்தே தீரும். வேண்டுமானால் ரவிச்சந்திரன் தோண்டிய குழியை மூடித் தருகிறோம்’ என்று கூறுகிறார். 'அப்படியானால் ஆற்றுக்குள் யார் குழி தோண்டினாலும் வந்து மூடித் தருவீர்களா?’ என்று சண்டை போட்டோம். உடனே போலீஸ் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து ஆற்றுக்குக் குறுக்கே ரோடு வராது என்று உறுதி கொடுத்ததை அடுத்து நாங்கள் அமைதிக்குத் திரும்பி இருக்கிறோம். ஆற்றுக்குக் குறுக்கே ரோடு போட்டால் மழையில் அது நிலைக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அ.தி.மு.க. பேரூராட்சித் தலைவியாக இருந்தும் தி.மு.க-காரர் தோட் டத்துக்குப் போவதற்கு ரோடு போடுவதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறார் ஜெகதாம்பாள். ஊரில் அடிப்படை வசதி இல்லாமல் நாங்கள் ரொம்பவே கஷ்டப்படுறோம். ஆனால் இந்தம்மா தேவையில்லாத ரோட்டுக்கு 50 லட்சம் தருகிறார்'' என்றார் வேதனையுடன்.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம். ''பேரூராட்சித் தலைவியா இருக்கிற ஜெகதாம்பாள்

திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர். இவங்க கட்சிக்கு வந்ததே 2006-ல்தான். வந்த உடனே கவுன்சிலர் ஆகிட்டாங்க. இப்போ பேரூராட்சித் தலைவியா இருக்கிறாங்க. அந்த அளவுக்கு அதிகார மையத்துக்கு நெருக்கமா இருக்காங்க. இவங்க கணவர் சொல்வதுதான் இங்கே நடக்குது. தி.மு.க. நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமைக்கு நெருக்கமானவர். சில மாதங்களுக்கு முன் ரவிச்சந்திரனின் அப்பா இறந்தபோது தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் இவர்கள் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த ஆற்றுக்கு குறுக்கே ரோடு போட்டால்தான் தி.மு.க. நகரச் செயலாளரின் தோட்டத்துக்கும் அவரின் உறவினரின் தோட்டத்துக்கும் சாலை வசதி கிடைக்கும். சுடுகாடு இருந்தால் அவர் களின் நிலத்துக்கு மதிப்பு குறையும் என்பதால், பேரூராட்சி நிதியைப் பயன்படுத்தி இவர்களுக்குச் சாலை போட்டு

தரப்போகிறார்கள். முன்பு ஆட்சியராக இருந்த மதிவாணன், சாலை போடுவதற்கு அனுமதி தரவில்லை. அவர் மாற்றப்பட்ட இரண்டு நாட்களில் புதிய ஆட்சியர் வருவதற்குள் இந்தச் சாலையைப் போட டெண்டர் விட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர். இதற்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்துவிட்டார். நடப்பது தி.மு.க. ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா என்றே அவினாசி மக்களுக்கு தெரியவில்லை'' என்று புலம்பினர்.

அவினாசி தி.மு.க. நகரச் செயலாளர் ரவிச்சந்திரன், ''என் தோட்டத்துக்காக சாலை போடுவதாகச் சொல்வது சுத்தப் பொய். இந்தச் சாலை வந்தால் மக்களுக்குத்தான் போக்குவரத்து நேரம் மிச்சமாகும். அங்கு சுடுகாடு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. சாலைப்பாளையம் மக்களைத் தவிர்த்து மற்ற பகுதி மக்களைக்கேட்டுப் பாருங்கள், உண்மை தெரியும்'' என்றார்.

இது குறித்து பேரூராட்சித் தலைவியும் திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளருமான ஜெகதாம்பாள், ''அது ஒரு இணைப்புச் சாலை. தி.மு.க. நகரச் செயலாளருக்காக அந்தச் சாலை போடப்படுகிறது என்று சொல்வது தவறு. முதலில் சாலைப்பாளையம் மக்கள்தான் இந்தச் சாலை வேண்டும் என்று கேட்டார்கள். பிறகு அவர்களுக்கும் ரவிச்சந்திரனுக்கும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. திடீரென்று எதிர்த்தார்கள். டெண்டர் விடும் அன்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சுடுகாட்டை யாரும் மூடவில்லை. என் கணவரின் தலையீடு பேரூராட்சியில் இருக்கிறது என்பது கடவுளுக்குக்கூட அடுக்காது. நான்தான் ஏ டூ இசட் இங்கு முடிவு எடுக்கிறேன்'' என்றார்.

அது சரி, சுடுகாடு எங்கே போச்சு?

- ம.சபரி

படங்கள்: க.ரமேஷ்