குப்பை என்று ஒதுக்கிவைக்க முடியாத அளவுக்கு, கடந்த சில நாட்களாக கோவை மாநகராட்சியைப் புரட்டி எடுக்கிறது, ஒரு குப்பைக்கிடங்கு விவகாரம். போராட்டத்தை அடுத்து சமாதான வலைகள் வீசப்பட்டு இருந்தாலும்கூட மக்களின் ஆக்ரோஷம் அடங்குவதாக இல்லை.

போத்தனூர் - செட்டிபாளை யம் ரோட்டில் 654 ஏக்கரில் கோவை மாநகராட்சியின் கழிவு நீர்ப் பண்ணை உள்ளது. இதைச் சுற்றி சுமார் 11 ஊர்களில் பல்லாயிரக்கணக்கான குடும்பங் கள் வசிக்கின்றன. 2003-ம் வருடத்தில் இருந்து தினமும் சிட்டி முழுக்க சேகரிக்கப்படும் சுமார் 700 டன் குப்பைகள் இங்குதான் கொட்டப்படுகின்றன. அதனால் பிரமாண்ட மலை போல் நிரம்பி வழிகிறது குப்பை. இதன் நாற்றத்தைக் கூட பொறுத்துக்கொள்ளும் மக்களால், தாங்கவே முடியாத வேறு ஒரு பிரச்னை ஒன்று உருவானது. இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பது. சமீபத்தில் இங்கே பிடித்த தீ தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக எரிந்து கொண்டே இருக்கவே... புகை மண்டலத்தால் குப்பைக் கிடங்கை சுற்றி வசிக்கும் ஊர் மக்கள் பெரும் பிரச்னைகளுக்கு ஆளானார்கள். மூச்சடைப்பு, தொண்டைக் கமறல், கண் எரிச்சல் என்று பிரச்னைகள் அதிகமாயின. அதனால் ஒரு கட்டத்தில் சாலை மறியல், கலெக்டர் அலுவலகம் முற்றுகை, ஒப்பாரிப் போராட்டம் என்று மக்கள் இறங்கிவிட்டார்கள்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய கோவை ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன்,

''கடந்த சில வருஷங்களாவே இங்கே மக்கள் படுற கஷ்டம் ரொம்பக் கொடுமை. பல பேருக்குத் தோல் வியாதியும் மூச்சுத் திணறலும் வந்து டார்ச்சர் பண்ணுது. முன்னாடி எல்லாம் இந்த ஏரியாவுல 40 அடிக்கு போர்வெல் போட்டாலே தண்ணீர் வந்துடும். ஆனா இப்போ நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போயிடுச்சு. அப்படியே தண்ணி வந்தாலும் கெட்ட வாடையோடதான் வருது. எல்லாம் இந்தக் குப்பைக்கிடங்கோட கைங்கர்யம்தான்.

இந்தக் குப்பைக்கிடங்கில் இருந்து வெளியே வருகிற மழைத் தண்ணீர் கொண்டுவருகிற அசிங்கங்களும் துர்நாற்றமும் சகிக்க முடியலை.. இங்கேயிருந்து கிளம்பி வரும் ஈ மற்றும் கொசுப் படையெடுப்பால் ரகம் ரகமான நோய்கள் மக்களை வாட்டி வதைக்குது.

இதெல்லாம் பத்தாதுன்னு இந்தக் கிடங்கில் தீ வைச்சும் மக்களைக் கொடுமைப்படுத்துறாங்க. இதுவரைக்கும் குறைஞ்சது 25 தடவையாவது தீ பிடிச் சிருக்கும். அதிலும் இப்போது ஏற்பட்ட தீ மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்குது. ரோட்டில் நடக்க முடியலை. வீட்டுக்குள்ளே இருக்க முடியலை.. அதனால பலரும் வேற பகுதியில் இருக்கிற உறவுக்காரங்க வீடுகளைத் தேடிப் போயிருக்காங்க. மாநகராட்சி நிர்வாகம் இந்தக் குப்பைக் கிடங்கு விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தியே ஆகணும். மாநகராட்சி முழுக்க இருக்கிற குப்பைகளை இந்த ஒரே இடத்தில் கொட்டாமல், மண்டல வாரியாக மற்ற இடங்களி லும் கொட்டலாம்'' என்றார்.

இங்கே குப்பைக் கழிவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புப் பொருட்களை சேகரிக்கவே சில விஷமிகள் இப்படி தீ வைக்கும் செயலில் ஈடுபடுகிறார்களாம். தீ வைத்து, எரிந்து எல்லாம் சாம்பலானதும் அதில் கிடக்கும் இரும்பு உள்ளிட்ட பொருட்களை எளிதாகப் பொறுக்கிப்போய் விற்று பணம் பார்ப்பதையே ஒரு கூட்டம் பிழைப்பாகச் செய்கிறதாம். இவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி ''மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனத்தின் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் மற்றும் நல நிலை நிரப்பல் (சானிட்டரி லேண்ட்பில்) ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த சானிட்டரி லேண்ட்பில் அமைப் பில் கொட்டப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் டன் குப்பையில்தான் தீ பிடித்திருக்கிறது. இது எதிர்பாராமல் ஏற்பட்ட சம்பவம். இந்த இடம் முழுவதும் யு.பி.எல். என்ற ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுப் பாட்டில் இருக்கிறது. குப்பைகளின் மீது தினமும் கிரேவல் மண் அல்லது கட்டட இடிபாடு மண் கொட்டப்பட வேண்டும். சம்பவ தினத்தன்று ஒப்பந்ததாரர் மண்ணைக் கொட்டத் தவறியதால் தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வகையில் பார்த்துக்கொள்ள அந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. நடந்த தீ விபத்துக்கு விளக்கமும் கேட்டுள்ளோம். இதையெல்லாம் தாண்டி குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவும் முயற்சிக்கிறோம். இந்த அளவுக்கு விஸ்தீரமான இடம் கிடைக்கிறதா என்று தேடியும் வருகிறோம்'' என்றார்.

நோய் அதிகம் பரவுவதற்கு முன்னால் சீக்கிரமாய் இடத்தைத் தேடுங்கள்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்