குஸ்திக்குப் பெயர் போன காங்கிரஸ் கட்சியில் கும்மாங்குத்து மோதல் குமரியில் தொடங்கி உள்ளது!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனாலும் குமரி மாவட்டத்தில் மட்டும் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதனால் குமரி மாவட்டம் எப்போதும் காங்கிரஸின் கோட்டை என்று மார் தட்டிக்கொண்டார்கள். இப்போது அந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். காரணம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் இடையே நடந்து வரும் பனிப் போர்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் விஜயதரணி அறிவிக்கப்பட்டார். 80 சதவிகிதம் நாடார் சமுதாய வாக்குகள்

இருக்கும் விளவங்கோடு தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த விஜயதரணி வேட்பாளராக அறிவிக்கப் பட்டதால் அதிருப்தியான சூழல் உருவானது. நளினி சிதம்பரத்திடம் ஜூனியர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தது, மணிசங்கர் ஐயரிடம் உதவி வழக்கறிஞர் பயிற்சி, ராகுல் காந்தியிடம் இருந்த நெருக்கம், அகில இந்திய பஞ்சாயத் ராஜ் அமைப்பின் தென் மாநிலத் தலைவராகச் செயல்பட்டது என்று கட்சியின் மேல் மட்டத்தில் விஜய தரணிக்கு இருந்த ஆதரவினால்தான் வேட் பாளர் ஆக்கப்பட்டதாக அப்போதே செய்தி கிளம்பியது. எப்படியும் விஜயதரணி தோற்கடிக்கப்பட்டுவிடுவார் என்று குமரி காங்கிரஸ் தலைவர்களே அசட்டையாக இருக்க, அவர்களின் எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி அமோக வெற்றி பெற்றார் விஜயதரணி.

குமரி மாவட்டத்தின் மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் லோக்கல் பாலிடிக்ஸையும் மீறி வளர்ந்தார் விஜயதரணி. அவர் வெற்றி பெற்ற விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட நெய்யாற்றில் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி கேரள முதல்வர் உம்மன்சாண்டியைச் சந்தித்துப் பேசியது, அடிக்கடி மீடியாக்களில் முகம் காட்டுவது, அறிக்கைகள் விடுவது என்று தன்னை நன்றாகவே மக்களிடம்

அடையாளப்படுத்திக்கொண்டார். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாதேவன் பிள்ளையின் உறவினர் என்ற அரசியல் பாரம்பரியமும் விஜயதரணிக்குக் கை கொடுக்கவே, அவரது வளர்ச்சி குமரி காங்கிரஸ் தலைவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான பிரின்ஸுக்கும் விஜயதரணிக்குமான பனிப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. சமீபத்தில் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்பாகவே இந்தக் கொதிப்பு வெளிப்பட்டுவிட்டது.

கூடங்குளம் அணு உலையை உடனடியாகச் செயல்படவைக்கக் கோரி காங்கிரஸார் குமரி மாவட்டம், தக்கலை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த மீடியாக்கள், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸிடம் பேட்டி கேட்டனர். அவரோ, நிகழ்ச்சி முடிந்த பின் பேசலாம் என சொல்லிவிட, விஜயதரணியிடம் பேசி முடித்துவிட்டார்கள். இதில் கடுப்பாகிப்போன பிரின்ஸ், 'நான் இருக்கும்போது விஜயதரணியிடம் எப்படி நீங்கள் பேசலாம்?' என டென்ஷன் ஆகவே... இரண்டு ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமானது. வெளிப்படையாக மோதல் வெடித்ததை அறிந்து ஆளுக்கொரு பக்கம் கிளம்பிப் போனார்கள்.

நடந்த சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. பிரின்ஸிடம் பேசினோம். ''நான் அந்த இடத்தில் கோபப்படவில்லை. என்னுடைய வருத்தத்தைத்தான் பதிவு செய்தேன். விஜயதரணி தேவை இல்லாத விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைக்கிறார். மாவட்டத் தலைவர் நான் இருக்கும்போது எல்லாரும் அந்தம்மாகிட்ட போய் நிக்குறாங்க. நாங்கள் பல வருஷமாகக் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தால், யாரோ வந்து நான்தான் கட்சி என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சட்டசபையிலும் இப்படித்தான் தேவை இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கிறார். ய£ர் இந்த விஜயதரணி? கட்சியில் இவரது செயல்பாடு சரியில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கே தெரியும். இருந்தாலும் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் தெரியவில்லை’' என்றார்.

இதுபற்றி விஜயதரணியிடம் கேட்டோம். ''ஆரம்பத்தில் என்னை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது என்னைப் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பிரின்ஸ் மட்டும்தான் தொடர்ந்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறார். விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதுமே மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில் பிரின்ஸை சந்தித்து ஆதரவு கேட்கப் போனேன். அப்போதே என்னைத் திட்டி திருப்பி அனுப்பினார். இன்று வரை அது தொடர்கதையாக இருக்கிறது. சட்டமன்றத்திலும் எனக்கு இடைஞ்சல் செய்கிறார். விஜயதரணி ய£ர் என்று கேட்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்கள் என்னை அங்கீகரித்து தங்கள் தொகுதியின் பிரதிநிதி ஆக்கி இருக்கிறார்கள். 23 வருஷமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். அவரும் உழைக்கட்டும். அதற்கான பலன் அவருக்கும் கிடைக்கும். மக்கள் பிரதிநிதியான நான் மக்கள் பிரச்னைகளை மீடியாக்களில் பேசத்தான் செய்வேன். அதற்குப் பொறாமைப்படுவதை விட்டுவிட்டு மக்கள் பிரச்னைகளிலும் கட்சி வளர்ச்சியிலும் கவனம் செலுத்தட்டும். பத்திரிகையாளர்களிடம் கத்துவதை அனுமதிக்க முடியாது. பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட இவர் யார்?’' என்றார்.

ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

- பி.கே.ராஜகுமார், என்.சுவாமிநாதன்

படங்கள்: ரா.ராம்குமார்