ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

விபத்தை மறைக்கிறாரா போலீஸ் அதிகாரி?

பெரம்பலூர் வில்லங்கம்

##~##
விபத்தை மறைக்கிறாரா போலீஸ் அதிகாரி?

காவல் துறை அதிகாரியின் காரை, அவருடைய மனைவி பயன் படுத்துவது சட்டப்படி தவறு. அந்தக் காரைப் பயன்படுத்தி விபத்தை ஏற்படுத்தி ஓர் உயிரைப் பறித்ததுடன் நில்லாமல், அதை மூடிமறைக்க நாடகமும் நடத் தினால்..? அப்படித்தான் அநி யாயம் நடந்ததாக பெரம்பலூர் வட்டாரத்தில் கொதிக்கிறார்கள்!  

''பெரம்பலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி-யாக பணியாற்றும் ஜெயராமனின் மனைவி சரஸ்வதி. இவர், டி.எஸ்.பி-க்கு அரசு வழங்கியுள்ள காரில் கடந்த 6-ம் தேதி அரியலூர் ஜவுளிக்கடைக்குச் சென்றார். துணைக்குப் பெண் போலீஸ் கலைவாணியும் சென்றார். திரும்பி வரும் வழியில் தங்க நகரம் என்ற இடத்தில், டிரைவர் ரமேஷ் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, மேலமாத்தூரைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தக் கார் பள்ளத்தில் விழ, காரில் இருந்தவர்கள் சிறு காயத்துடன் தப்பினர். ஆனால், கார் மோதிய வெண்ணிலா

விபத்தை மறைக்கிறாரா போலீஸ் அதிகாரி?

இறந்து விட்டார். இந்தச் சம்பவத்தை மறைப்பதற்காக வெண்ணிலா மனநிலை சரியில்லாதவர் என்று ஜோடனை நடக்கிறது'' என்று, காவல் துறை வட்டாரத்திலேயே கொதிக்கிறார்கள்.

மேலமாத்தூர் சென்று வெண்ணிலாவின் தாய் கொட்டி யம்மாளைச் சந்தித்தோம். ''எனக்கு ஒரு பையன், மூணு பொண் ணுங்க. என் வீட்டுக்காரர் இறந்துட்டார். கடைசி பெண் வெண் ணிலா தவிர, மத்த எல்லோருக்கும் கடன்வாங்கி கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். 'ரெண்டு பேரும் வேலைக்குப் போய் சம் பாதிச்சுக்

விபத்தை மறைக்கிறாரா போலீஸ் அதிகாரி?

கடனை அடைப்போம், அப்புறமா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு வெண்ணிலா சொல்லிட்டா. சொன்னபடியே ரெண்டு பேரும் வேலைக்குப் போய் கடனை அடைச்சுக்கிட்டு இருந்தோம். வழக்கம்போல, அன்னைக்கு காலையில கலகலன்னு பேசிட்டு, களை வெட்டுறதுக்குப் போன வெண்ணிலாவைப், பொணமாக்கிட்டாங்களே...'' என்று கதறினார்.

வெண்ணிலாவின் சித்தப்பா மகனான இளம்பரிதி, ''காட்டுக்கு களை வெட்டப் போனவ, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும் போதுதான் அந்தக் கொடுமை நடந்திருக்கு. வேகமாக வந்த டி.எஸ்.பி-யோட கார், வெண்ணிலா மேல மோதி இருக்கு. சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாங்க போறதுக்குள்ள அவளை தஞ்சாவூருக்குக் கொண்டு போயிட்டாங்க. ஆனா, அங்கிருந்த போலீஸ்காரங்க டி.எஸ்..பி. மனைவியையும் கூட வந்தவங்களையும் பெரம்பலூருக்கு அனுப்பிட்டு, கார் நம்பர் பிளேட்டை அழிச்சிட்டாங்க. அடுத்த 10 நிமிடங்களில் அங்கிருந்து காரை எடுத்துச் செல்வதற்கு வண்டி வந்தது. அதேநேரத்தில், வெண்ணிலா இறந்துபோன தகவல் கிடைத்தது. அதனால், 'எங் களுக்கு நியாயம் கிடைக்காத வரை வண்டியை விட மாட்டோம்’னு சொன்னோம். 'இது டி.எஸ்.பி. வண்டிடா... ஒழுங்கா விடுங்க. இல்லன்னா, நடக்கறதே வேற’னு போலீஸ்காரங்க மிரட்டி காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இப்ப என்னென்னவோ சொல்லி வெண்ணிலா சாவைக் கொச்சைப்படுத்துறாங்க'' என்றார் அழுகையுடன்.

விபத்தை மறைக்கிறாரா போலீஸ் அதிகாரி?

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மக்கள் நீதிப்பேரவையின் மாநில அமைப்பாளர் ஆதிதமிழ்ச்செல்வன், ''அரசு வாகனங்களை அதிகாரிகள் சொந்தக் காரணங்களுக்காகப் பயன்படுத்தக்

விபத்தை மறைக்கிறாரா போலீஸ் அதிகாரி?

கூடாது என்று சட்டம் இருந்தும், காவல் துறை உயர் அதிகாரிகள் அதை மதிப்பதே இல்லை. துணி எடுப்பதற்காக டி.எஸ்.பி-யின் மனைவி சரஸ்வதியை அழைத்துச் சென்ற டிரைவர் ரமேஷ§ம் பெண் போலீஸ் கலைவாணியும் போலீஸ்காரர்களா இல்லை, டி.எஸ்.பி. வீட்டு வேலைக்காரர்களா என்பதுதான் எங்கள் கேள்வி.

விபத்து நடந்து விட்டது என்றால், விபத்துக்குக் காரணமானவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், வெண்ணிலாவின் சாவுக்குக் காரண மானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களைக் காப்பாற்றும் முயற்சிதான் நடக்கிறது. டி.எஸ்.பி-யும் அவருடைய மனைவியும் காரில் போனதாகவும், மனநிலை சரியில்லாத வெண்ணிலா திடீரென்று குறுக்கே வந்து விட்டதாகவும் சொல்லி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். வெண்ணிலாவின் மரணத்துக்கு நீதி கிடைக்காத வரை, இதை விடமாட்டோம்'' என்றார் ஆவேசமாக.

வழக்கின் விசாரணை அதிகாரியான குன்னம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிடம் பேசினோம். ''விசாரிச்சுட்டு இருக்கேன். எதுவா இருந்தாலும் ரெண்டு நாள் பொறுத்துத்தான் சொல்ல முடியும்'' என்றார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி. ஜெயராமனிடமே கேட்டோம். ''சம்பவத்தன்று உடன் வேலை செய்யும் போலீஸ்காரர்களுடன் நான் அரியலூர் டி.எஸ்.பி-யை பணி நிமித்தமாக சந்திக்கச் சென்றேன். என் மனைவியும் உடன் வந்தார். வரும்போது ஜவுளி எடுத்துக்கொண்டு வந்தோம். அவ்வளவுதான். அந்தப் பெண் திடீரென்று ரோட்டின் குறுக்கே வந்து விட்டார். தவிர்க்க முடியாமல் கார் மோதவும்... அந்தப் பெண் இறந்து விட்டார். பின்னர், விசாரித்தபோதுதான் அந்தப் பெண்ணுக்கு அவ்வப்போது புத்தி சுவாதீனம் இல்லாமல் போகும் என்றும், அதனால்தான் அந்தப் பெண்ணுடன் பிறந்த அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் 30 வயது ஆகியும் அவருக்குத் திருமணம் நடக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இது தவிர்க்க முடியாமல் நடந்த விபத்து'' என்றார்.

ஓர் உயிருக்கு இதுதான் மரியாதையா?

- சி.ஆனந்தகுமார், படங்கள்: எம்.ராமசாமி