ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஸ்டேடியத்தில் ஊழல் விளையாட்டு!

கோவை பகீர்

##~##
ஸ்டேடியத்தில் ஊழல் விளையாட்டு!

கவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள், சிலசமயம் குபீர் அதிர்ச்சிகளைக் கிளப்புவது வாடிக்கை. கோவை நேரு ஸ்டேடியம் குறித்துத் திரட்டப்பட்ட தகவல் களும் அந்த ரகம்தான். 

ம.தி.மு.க-வின் மாநில தீர்மானக் குழு உறுப் பினர்களில் ஒருவரான கோவையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி இது தொடர்பான ஆதாரங்களுடன் நம்மிடம் பேசினார். ''விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஒவ்வொரு ஸ்டேடியத்திலும் மாணவ, மாணவியருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்தவகையில், கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான நேரு ஸ்டேடியத்தை மிகச் சிறப் பாகக் கையாளுவதற்காக, கடந்த 1988-ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஸ்டேடியம் ஒப்படைக் கப்பட்டது. அப்போதே ஸ்டேடியத்தைச் சுற்றிலும் இருக்கும் வாடகைக் கடைகளும் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. ஆனால், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.

ஸ்டேடியத்தில் ஊழல் விளையாட்டு!
ஸ்டேடியத்தில் ஊழல் விளையாட்டு!

அதனால், 'கடந்த 24 வருடங் களில், இந்த ஸ்டேடியம் திறமையாக கையாளப்பட்டதன் காரணமாக மாணவர்களின் தரம் உயர்ந்திருக்கிறதா? கடைகளை நேர்மையான முறையில் ஏலம் விட்டிருக்கிறார்களா? கடைகளின் வாடகை நிர்ணயித்ததில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா?’ என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமா ஸ்கேன் செய்து பார்த்தேன்.

கிடைத்த தகவல்களின்படி, ஊழலும் சீர்கேடும்தான் மிஞ்சியிருக்கிறது. இவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதிகூட கிடையாது. இவ்வளவு ஏன், விளை யாட வரும் பெண்களுக்கு உடை மாற் றுவதற்குக்கூட தனிஅறைகள் இல்லாதது மிகப்பெரிய கேவலம். ஸ்டேடியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என எதுவுமே உருப்படியாக இல்லை. அதனால் திறமையானவர்களை உருவாக்க முடியவில்லை.

அதைவிட, இங்கே கடைகளை வாடகைக்கு விட்டதில் மிகப்பெரிய அளவுக்கு ஊழல்கள் நடந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த ஸ்டேடியத்தில் பாதுகாப்பு நலன்கருதி 16 நுழை வாயில்கள் இருந்தன. அதில், ஐந்து வாயில்களை அடைத்துக் கடைகளாக மாத்தியிருக்காங்க. இது தொடர்பாக, மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையில் அனுமதிகூட வாங்கவில்லை. ஸ்டே டியத்தில் மிகப்பெரிய அளவுக்குக் கூட்டம் கூடி, வெளியேறும் நேரத்தில் ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும்? கோவையின் ஹார்ட் ஆஃப் தி சிட்டியில்

ஸ்டேடியத்தில் ஊழல் விளையாட்டு!

இருக்கிறது, இந்த ஸ்டேடியம். அதனால், இந்தப்பகுதியில் சதுர அடி 100 ரூபாய்க்கு மேல் வாடகைக்குப் போகிறது. ஆனால், ஸ்டேடியக் கடைகளை சதுர அடிக்கு மூன்று முதல் நான்கு ரூபாய் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். இங்கே 59 கடைகள் இருக்கின்றன. இங்கே கடை நடத்துபவர்கள் அன்றாடம் காய்ச்சிகளோ, வறுமைக்கோட்டை ஒட்டி வாழ்பவர்களோ கிடையாது. வேற்று மாநிலங்களைச் சேர்ந்த லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும்தான் கடை நடத் துறாங்க.

மேலும், பல கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவர் பெயரால் எடுக்கப்பட்ட கடைகளை, சம்பந்தமே இல்லாமல் வேற யாரோ நடத்துகிறார்கள். ஸ்டேடிய நிர் வாகிகளின் அனுமதி இல்லாமல் கடைகளை மாற்றி அமைக்கிறதும், மாடி கட்டுறதும், கன்னா பின்னானு விளம்பரப் பலகைகள் வைப்பதும் நடக்கின்றன. கடைக்காரர்கள் இத்தனை விதிமீறல்களில் ஈடுபடுவதை, ஸ்டேடிய நிர் வாகிகள் கண்டும் காணாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? ஒவ்வொரு கடைத் தரப்பில் இருந்தும் கணிசமான அளவுக்குக் கப்பம் கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். அரசாங்கச் சொத்தை வைத்து, தனிநபர்கள் சேர்ந்து கோடிக் கணக்கில் ஊழல் செய்திருக்கிறார்கள். அதனால், இந்த முறைகேடுகளை எல்லாம் தெளிவாக விளக்கி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி இருக்கிறேன்.

வாடகை நிர்ணய விஷயத்தில் மட்டும் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் அர சாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு இருக்கிறேன். ஸ்டேடியத்தில் உள்ள சீர்கேடுகளைக் களைந்து நேர்மையான முறையில் செயல்பாடுகள் நடக்க வேண்டும். அரசு உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோர்ட்டுக்குப் போக தயங்க மாட்டேன்'' என்கிறார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டேன் லியிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். ''நான் இங்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதனால், என்னவென்று விசாரிக்கிறேன்'' என்றார்.

கோவை மாவட்ட கலெக்டரான கருணாகரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். விஷயங்களை உள்வாங்கிக்கொண்டவர், ''விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் தான் இந்த விஷயங்களில் முடிவு எடுக்கிறது. ஆனாலும், இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்துகிறேன். விசாரணையில் கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப நட வடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

விளையாட்டல்ல... இது சீரியஸ் விஷயம்!

- எஸ்.ஷக்தி

படங்கள்: தி.விஜய்