ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

தீண்டாமைச் சிக்கலில் ஓ.பி.எஸ்-ஸின் தம்பி!

பெரியகுளம் பஞ்சாயத்து

##~##
தீண்டாமைச் சிக்கலில் ஓ.பி.எஸ்-ஸின் தம்பி!

தீண்டாமையின் வேர்கள் இன்னமும் உறுதியாகவே இருக்கிறது என்பதற்கு, தேனி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவமே சாட்சி!

 பாதிக்கப்பட்ட இளைஞரான நாகமுத்து நம்மிடம், ''கடந்த 2001-ல் இருந்து நான் பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்தேன். கோயிலில் துப்புரவுப் பணியில் இருந்து கருவறை பூஜை வரை செய்து வந்தேன். இரவு,  கோயிலிலேயே தங்கி விடுவேன். சம்பளமாக மாதம் ஒரு முறை 100 ரூபாய்க்கு ரேஷன் அரிசி மட்டும் வாங்கித் தருவார்கள். ஒரு கட்டத்தில், நான் தலித் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவரவே, 'பக்தர்களுக்கு நீ திருநீறு தரக் கூடாது’ என்று மிரட்டி ஒதுக்கி வைத்தனர்.

பின்னர், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் கைகளுக்கு அந்தக் கோயில் நிர்வாகம் போனது.

தீண்டாமைச் சிக்கலில் ஓ.பி.எஸ்-ஸின் தம்பி!

கடந்த மே மாதம் 5-ம் தேதி, ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ராஜா, என் சாதியைச் சொல்லித் திட்டி, 'கோயிலுக்குள் வரக்கூடாது’ என்று எனக்குக் கட்டளை போட்டார். நான், 'எனக்குப் பிறகு கோயிலுக்கு வந்த நீங்கள், என்னை எப்படி வரக்கூடாது என்று சொல்லலாம்?’ என்று கேட்டேன். அதனால் கோபத்துடன் என்னை அடிக்கப் பாய்ந்தார். அதற்குள், 'ஏன்டா... அண்ணனையே எதிர்த்துப் பேசுறியா?’ என்று சொல்லி ராஜாவின் ஆட்கள் என்னை அடித்து உதைத்தனர்.

பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். புகாரை வாங்காமல் டி.எஸ்.பி. உமாவை பாரு என்றனர். அவரைச் சந்தித்தபோது, 'டேய்... யாரு மேல புகார் பண்ற..? உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். புகாரை வாபஸ் வாங்கு’ என்று மிரட்டினார். நான் மறுக்க, கோயில் உண்டியலைத் திருடியதாக என் மீதே புகார் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார். அதன் பிறகு, எவிடென்ஸ் கதிர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்

தீண்டாமைச் சிக்கலில் ஓ.பி.எஸ்-ஸின் தம்பி!

போட்டேன்'' என்றார் சோகத்துடன்.

எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். ''நாகமுத்து இவ்வளவு உறுதியாகப் போராடி நீதிமன்றம் சென்ற பிறகுதான் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எஃப்.ஐ.ஆர். போடவே நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், கைது செய்யச்சொல்லி இன்னொரு முறை நீதிமன்றம் போக வேண்டிய நிலையாகி விட்டது'' என்றார்.

இப்போது, தேனி குற்றப் பிரிவில் பணிபுரியும் டி.எஸ்.பி. உமாவிடம் பேசியபோது, ''நான் அப்படி எல்லாம் பேசவில்லை. விசாரணையை நேர்மையாகத்தான் நடத்தினேன். கோயிலில் அந்தப் பையன்தான் வம்பு செய்து இருக்கான். கோயிலில் நடந்த பிரச்னையை நாங்களே பேசி முடிச்சிக்குறோம்னு போயிட் டாங்க...'' என்றார்.

அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவிடம் பேசினோம். ''கோயிலில் நாகமுத்து வேலை செய்ததெல்லாம் உண்மைதான். எல்லோரும் வந்துபோகும் கோயிலில் இந்து முன்னணிக் கொடியைக் கட்டினான். அதுக்காகத்தான் கண் டிச்சோம். அவனோட அப்பாவே பிரச்னை வேணாம்னு எழுதிக் கொடுத்துட்டார். இதுதவிர, கோயில் உண்டியலையும் தூக்கிட்டுப் போயிட்டான். ஏதாவது கேட்டால், சம்பந்தமே இல்லாமல் சாதியைப் பற்றிச் சொல்கிறான். சாதியைச் சொல்லி நான் திட்டவே இல்லை'' என்றார் படபடப்பாக.

சாதிக்கொடுமைக்குத் தீர்வு எப்போதோ?

- சண்.சரவணக்குமார்

படங்கள்: சக்தி அருணகிரி