தி.மு.க-வினரை மட்டும் மிரட்டிக்கொண்டிருந்த நிலஅபகரிப்பு தனிப்பிரிவு, இப்போது அ.தி.மு.க-வினர் மீதும் பாய்ச் சல் காட்டத் தொடங்கி உள்ளது. அந்தத்தாக்குதலில் லேட் டஸ்டாக சிக்கி இருப்பவர் அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை. அவர் மீது நிலஅபகரிப்புப் புகார் கொடுத்து இருப்பவரும் அ.தி.மு.க. பிரமுகர் என்பதுதான் அதிர்ச்சி.

அ.தி.மு.க-வில் சென்னை அண்ணாநகர் பகுதி துணைச் செயலாளராக இருக்கும் மோகன் என்பவர்தான் தம்பிதுரை மீது நிலஅபகரிப்புப் புகார் கொடுத்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். அவருடைய வழக்கறிஞர் பழனிவேலு முதலில் பேசினார். ''ஆவடி அருகேஉள்ள பருத்திப்பட்டு கிராமத்தில் மோகனுக்குச் சொந்தமாக 65 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த நிலம் அவருடைய மனைவிவழிச் சொத்து. அந்த நிலத்துக்கு அருகில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையின் புனித பீட்டர் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் டிரஸ்டியாக தம்பிதுரையின் மனைவி இருக்கிறார். கடந்த 2008-ம் ஆண்டு, புனித பீட்டர் கல்லூரியின் பயன்பாட்டுக்காக மோகனுடைய நிலத்தை தம்பிதுரை கேட்டார். அப்போது, நிலத்தை விற்க வேண்டிய அவசியம் எதுவும் மோகனுக்கு இல்லாததால், நிலத்தை விற்க சம்மதிக்கவில்லை. அதன்பிறகு, தம்பிதுரை தரப்பும் இது தொடர்பாக மோகனை அணுகுவதை நிறுத்திவிட்டனர்.

இந்தநிலையில், மோகனுடைய நிலத்துக்குப் பக்கத்தில் இருந்த 25 சென்ட் நிலத்தை தம்பிதுரையின் மைத்துனர் பாலகிருஷ்ணன், தம்பிதுரையின் கல்லூரியில் வேலை பார்க்கும் சசிதரன் ஆகியோர் வாங்கி உள்ளனர். அதற்குப் பத்திரப்பதிவு செய்யும்போது மோகனுடைய நிலத்தையும் சேர்த்து, மொத்தம் 90 சென்ட் நிலத்துக்கு பத்திரப்பதிவு செய்து உள்ளனர். பிறகு, அந்த நிலத்தை தம்பிதுரையின் கல்லூரி அறக்கட்டளைக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இது எல்லாமே தம்பிதுரையின் வேலைதான். அவர் மச்சானையும் கல்லூரியில் வேலை பார்க்கும் ஊழியரையும் இந்த மோசடிக்கு அவர் பயன்படுத்தி இருக்கிறார்'' என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய மோகன், ''நிலஅபகரிப்புக் குற்றங்களைத் தடுப்பதற்காக அம்மா அவர்கள் தனிப் பிரிவை ஏற்படுத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், அந்தக் கட்சியிலேயே இருந்து எம்.பி. யாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் தம்பிதுரை, அம்மா பெயருக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார். எங்கள் நிலத்தில் நாங்கள் அமைத்திருந்த வேலியை அகற்றிவிட்டு, இப்போது அவர் மிகப்பெரிய காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளார். எங்களுடைய நிலத்தில் எங்களால் நுழையக்கூட முடியவில்லை'' என்றார் வேதனையுடன்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து அறிய இப்போது டெல்லியில் இருக்கும் தம்பிதுரையை தொடர்பு கொள்ள முயன்றோம். 'உரிய விளக்கத்தை கல்லூரியின் துணைவேந்தர் பாலகுருநாதன் அளிப்பார்’ என்று அவர் கூறினார்.

''முதலில் தம்பிதுரைக்கும் இந்தக் கல்லூரிக்கும், கல்லூரி அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த இடத்தை நாங்கள் புகார்தாரரான மோகனிடம் இருந்து வாங்க வில்லை. மோகனுடைய மாமனார் தேவராஜ் நாயக்கர் என்பவரின் வாரிசுகள்தான் இந்த நிலத்தை பாலகிருஷ்ணனுக்கும் சசிதரனுக்கும் கடந்த 2008-ம் ஆண்டு விற்றனர். அவர்களிடம் இருந்துதான் நாங்கள் இந்த நிலத்தை வாங்கினோம். அப்போது, மோகன் என்பவர் எந்தக் குறுக்கீடும் செய்யவில்லை. இந்த நிலத்தை எங்களுக்கு விற்றவர்கள், நிலத்தை விற்பதற்கு முன் அனைத்து முன்னணி செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்திருந்தனர். அப்போதும் கூட, மோகன் நிலத்துக்கு உரிமை கொண்டாடவில்லை. ஆனால், அதன் பின்னர் இந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் மோகன் வழக்குத் தொடுத்துள்ளார். விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் பிரச்னையை பெரிதுபடுத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது'' என்றார் பாலகுருநாதன் நிதானமாக.

இந்த வழக்கை விசாரித்து வரும் ஆவடி போலீஸார், ''இரண்டு தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம். மோகன் தரப்பில் விசாரணை முடிந்துவிட்டது. தம்பிதுரை டெல்லியில் இருந்து வந்ததும், அவர்கள் தரப்பையும் விசாரிப்போம். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

போலீஸாரது நடவடிக்கை இந்த விஷயத்தில் பாரபட்சமாக இருக்கக் கூடாது என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்!

- ஜோ.ஸ்டாலின்