'ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுசீலா பேசுறேங்க. கோவையில் இருக்கும் எஸ்.ஐ. சுமதியைப் பத்தி நிறைய விஷயங்கள் பேசணும். போன் பண்ணுங்க’ - தட்டுத் தடுமாறி நம் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044- 66808002) ஒரு குரல் பதிவாகி இருந்தது.

சுசீலாவைச் சந்தித்தோம். ''எனக்குக் கல்யாணமாகி ஐந்து வருடங்களாகக் குழந்தை இல்லை. 2010-ம் ஆண்டு கோவையில் இருக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்குப் போய்க்கொண்டு இருந்தேன். அப்போதுதான் பரிஜா என்பவர் எனக்குப் பழக்கமானாங்க. அப்போது, 'பாலக்காடு பகவதியம்மன் கோயில்ல பரிகாரம் செஞ்சா, நிச்சயம் குழந்தை பிறக்கும்’னு சொன்னாங்க. நானும் அவங்க பேச்சைக் கேட்டு, பாலக்காடு போனேன். பஸ்ல போகும்போது குடிக்கிறதுக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்தாங்க. திடீர்னு தூக்கம் வர்ற மாதிரி இருந்தது. அதனால், கழுத்தில் போட்டிருந்த ஆறு பவுன் தங்க நகையைக் கழட்டி பைக்குள்ள பத்திரமா வெச்சுக்கிட்டேன். பாலக்காட்டில் இறங்கியதும் பையை பரிஜாவிடம் கொடுத்துவிட்டு பாத்ரூம் போனேன். வந்து பார்த்தால் பரிஜாவைக் காணோம். பைக்குள் இருந்த பணம் 3,000 ரூபா, நகை, செல்போன் எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடிட்டாங்க. அங்கே இருந்தவங்ககிட்ட உதவி கேட்டு எப்படியோ கோவைக்கு வந்து சேர்ந்தேன். பரிஜாவோட சொந்த ஊர் செல்வபுரம். அதனால் அங்கே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். ஆனால், அந்த ஸ்டேஷனில் எஸ்.ஐ-யாக இருந்த சுமதி, 'புகாரை வாங்க மாட் டேன்’னு மறுத்துட்டாங்க. கமிஷனராக இருந்த சிவனாண்டியிடம் புகார் கொடுத்தேன். அவர் சொன்ன பிறகுதான் கேஸ் போட்டாங்க.

'நீ சொல்ற பொம்பளை எங்க போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில்தான் கருவாட்டுக்கடை வெச்சிருக்காங்க. அவங்களை உடனே பிடிச்சுடலாம்’னு எஸ்.ஐ. சுமதி சொன்னாங்க. நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு

நடையா நடந்ததுதான் மிச்சம். ஆனா, அந்தப் பொம்பளையை அவங்க பிடிக்கவே இல்லை. 'அவ மூணாறுல பதுங்கி இருக்கா... பொள்ளாச்சியில் பதுங்கி இருக்கா... அவளைப் பிடிக்கப் போகணும்’னு சொல்லி என்கிட்ட கார் வாடகை 15 ஆயிரம் ரூபாய் வாங்கினாங்க. அஞ்சு மாசத்துக்கு அப்புறம், நகையை மீட்டதாச் சொல்லி என்னைக் கூப்பிட்டு நகைகளை அடையாளம் காட்டச் சொன்னாங்க எஸ்.ஐ. சுமதி. நானும் என் நகையை அடையாளம் காட்டினேன். 'நகையை மீட்டு வந்ததுக்கு எங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்கு. அதைக் கொடுத்துட்டு உன் நகையை வாங்கிட்டுப் போ’னு சொன்னாங்க. 'என்கிட்ட அவ்வளவு பணம் இல்லைங்க மேடம்’னு சொன்னேன். 'அப்படின்னா கோர்ட்ல உன் நகையை ஒப்படைச்சுடுறோம். அங்கே போய் வாங்கிக்கோ’னு சொல்லிட்டாங்க. இப்போ கோர்ட்ல அரை பவுன் மட்டும் மீட் டதாச் சொல்லி ஒப்படைச்சு இருக்காங்க. நான் எவ்வளவோ போராடியும் இதுவரை என் நகையை வாங்கவே முடியலை. முதல்வர் அம் மாவுக்கும் புகார் அனுப்பினேன். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்கச் சொல்லி உத்தரவு போட்டாங்க. ஆனா, அவங்களும் அந்த எஸ்.ஐ. சுமதிக்குப் பழக்கமானவங்க. அதனால், அவங்களும் வழக்கை விசாரிக்கவே இல்லை. கடைசியா தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செஞ்சேன். அவங்கதான் இப்போ விசாரிச்சுட்டு இருக்காங்க. என்னை மாதிரி பல பேரை இந்த எஸ்.ஐ. சுமதி ஏமாத்தி இருக்காங்க. போலீஸ் என்பதால் அவர்களுக்குள் விஷயத்தை மூடி மறைக்கப் பார்க்கிறாங்க'' என்று கண் கலங்கினார்.

இதற்கிடையில், கோவையைச் சேர்ந்த செந்தில் என்பவர், ' நகை காணாமல் போனது சம்பந்தமாக நான் கொடுத்த புகாரின் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருந்த சுமதி வழக்குப் பதிவு செய்யவில்லை’ என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சுமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

எஸ்.ஐ. சுமதி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி அவரிடம் கேட்டோம். ''நகை திருடிய பெண்ணை நாங்கள் கைது செய்யும் போது அவளிடம் ஐந்தரை கிராம் தங்கம்தான் வைத்திருந்தாள். அதை ரெக்கவரி செய்து கோர்ட்டில் ஒப்படைத்து விட்டு, குற்றவாளியை ரிமாண்ட் செய்து விட்டோம். நான் பணம் கேட்டேன் என்று சொல்வது அப்பட்டமான பொய். உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கும் செந்தில் என்பவர், புகார் கொடுக்க வந்தார். ஆனால், அவர் எங்கள் காவல் நிலைய எல்லைக்குள் வராத காரணத்தால் வழக்குப்பதிவு செய்யவில்லை. இப்போது, அவருடன் சேர்ந்து கொண்டு சுசீலா என் மீது அவதூறு பரப்பி வருகிறார். எல்லா விவகாரங்களையும் நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்'' என்று சொன்னார். கோவை மாநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதனிடம் பேசினோம். ''எஸ்.ஐ. சுமதி மீது அடுத்தடுத்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறோம். சுமதி பற்றிய அறிக்கையை மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பி விட்டோம். விசாரணை நடக்கிறது'' என்றார்.

போலீஸ் வட்டாரத்திலோ, 'சிட்டிக்குள்ள இருக்கும் ஒரு ஏ.சி-க்கும் சுமதிக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை. ஏ.சி-யைப் பற்றி சுமதி உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க, அதன் மீதும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஏ.சி-தான் இப்போது சுமதிக்கு எதிரான ஆட்களை ஒன்று திரட்டிக் கொண்டி ருக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள்.

வேலியே பயிரை மேய்ந்தால், வேறு என்னதான் செய்வது?

- ம.சபரி, படங்கள்: தி.விஜய்