அக்டோபர் 17, 18 தேதி களில் சென்னை பி.டி.தியாகராயர் அரங்கம் குழந்தைகளாலும் பெற்றோர்களாலும் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் ஏற்படுத்தி இருந்த பொது விசாரணைக்குத்தான் இந்தக் கூட்டம்.

மும்பை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுரேஷ், கல்வியாளர் வசந்திதேவி, ஆணைய உறுப்பினர் நினாநாயக், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராமமூர்த்தி, அசாம் மாநில அரசின் முதன்மைச் செயலாளர் தீர் ஜிங்கிரான், சமூக ஆர்வலர் அர்ச்சனா மகேந்தால் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா தலைமை வகித்தார்.

ஒவ்வொரு வழக்கிலும் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளும் வந்திருந்தனர். புகார்கள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள் பற்றியதாகவே இருந்தன.

மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டிய பள்ளிக்கூடத்தின் செயல், பிரம்பால் அடித்து கண்ணில் பாதிப்பை ஏற்படுத்திய ஆசிரியரின் முரட்டுத்தனம், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை என ஒவ்வொரு வழக்கும் அதிரச் செய்வதாக இருந்தது. பெரும் பாலான குற்றங்கள் மாணவர்

விடுதிகளிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான பள்ளிகளிலும் நடந்துள்ளன. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டுக்கணக்கில் ஆசிரியர்கள் வராத வழக்குகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. அரசுப் பள்ளிகள் கல்வித் துறையின் கீழ் வருகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாத குறையை இந்தப் பொதுவிசாரணை வெளிச்சம் போட்டுக்காட்டியது.

சிறுவர்களைக் கைதுசெய்தால் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் அவர் களை ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினர், நீதிபதிகள் முன் தலைகுனிந்து நின்றனர்.

காரைக்குடி அருகே ஓர் அரசுப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் வன்முறை செய்த ஆசிரியரை விசாரித்த ஆணையம் உடனே அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு, பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தர விட்டது. மாணவர்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணிபுரியத் தகுதி அற்றவர்கள் என்றும் அவர்கள் வேறு பள்ளிகளில் பணிபுரிவது தடுக்கப்பட வேண்டும் என்று கூறியது ஆணையம்.

செல்போனில் நீலப்படம் பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்ட கேள்விகள் சூடானவை. 'மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் உங்கள் பள்ளியில் உள்ளதா? வெளியில் இருந்து மாதம் இருமுறை கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறதா?’ என்ற கேள்விக்கு ', நீதி நெறிமுறை வகுப்பு எடுப்பார்கள்’ என்றனர்.

நீதிபதிகள், 'கவுன்சிலிங்கும் நீதிநெறி போதனையும் ஒன்றல்ல’ என்று விளக்க, படாதபாடு பட்டனர். தவறு இழைக்கும் மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்திருந்தால், உயிர் இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியது ஆணையம். 'கல்வித் துறையின் சார்பில் மொபைல் கவுன்சிலிங் முறை பரீட்சார்த்த முறையில் அறிமுகமாகி இருப்பதாகவும், கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் அது விரிவுபடுத்தப்படும்’ என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவன் முகேஷ், ஆசிரியர் தன்னை செருப்பால் அடித்ததைச் சொன்னபோது அரங்கமே அதிர்ந்து போனது. கடைசி வரிசையில் அமர்ந்திருந்ததால், கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போட்டதைச் சரியாக எழுதாததுதான் அவன் செய்த குற்றமாம்.

இடிந்தகரையில் இருந்து வந்திருந்த குழந்தைகள் ரிஷிகாவும் பாஸ்டினாவும் கவனம் ஈர்த்தனர். 'அணுஉலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அவர்கள் பேசத் தொடங்கியவுடன் பதறியது ஆணையம். 'அணுஉலை வேண்டுமா, வேண்டாமா என்று முடிவுசெய்யும் அதிகாரம் இந்த ஆணையத்துக்கு இல்லை. ஆகவே அதுகுறித்து எதுவும் இங்கே பேச வேண்டாம்’ என்றனர். 'எங்கள் ஊரில் நடக்கும் போராட்டத்தில் செப்டம்பர் 10-ம் தேதி நடந்த போலீஸ் அராஜகம் எங்களைத் தூங்கவிடாமல் செய்துவிட்டது. போலீஸ் வருமோ.. குண்டு போடுமோ.. அப்பா அம்மாவைத் தாக்குமோ என்ற பயத்தில் எங்களால் சரியாகப் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. 30 பிள்ளைகளில் 20 பேர் பரீட்சையில் ஃபெயில் ஆனோம்’ என்று எடுத்துச் சொல்லவே, இடிந்தகரை குழந்தைகளின் நிலைமையைக் கணக்கில் எடுத்து, ஒரு குழுவை அனுப்பி அங்கு ஆய்வு மேற்கொள்வது குறித்தும் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்ப தன் தேவை குறித்தும் பேசி முடிவு செய்யப்படும் என்று சாந்தா சின்ஹா தெரிவித்தார்.

67 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தனியார் பள்ளி விடுதிகளைக் கண்காணிக்கப் புதிய விதிமுறைகளை வகுத்து அதை இரண்டு மாதங்களுக்குள் ஆணையத்துக்குப் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளின் நிலை குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.

மலரைப் போல கையாள வேண்டிய குழந்தைகள் எப்படி எல்லாம் வதைக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் இந்த விசாரணை உணர்த்தியது. இனியாவது மாற்றம் ஏற்படட்டும்!

- கவின் மலர்

படங்கள்: இரா.ஸ்ரீதர்