பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர், மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்படவே, அதிர்ந்து நிற்கிறது வேலூர். 'குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்’ என்று தமிழகம் முழுக்க பி.ஜே.பி-யினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

பி.ஜே.பி-யில் மாநில மருத்துவர் அணிச் செயலாளராக இருந்தவர் டாக்டர் அரவிந்த் ரெட்டி. வேலூர் ரங்காபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர், நீரிழிவு மற்றும் இ.என்.டி சிறப்பு நிபுணர். இவர்தான் கிளினிக் வாசலிலேயே கடந்த 23-ம் தேதி மர்மக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்களிடம் விசாரித் தோம். ''எப்பவும் அந்த நேரத்தில் டாக்டர் கிளினிக்குக்கு வரமாட்டார். சத்துவாச்சாரியில் அவர் புதுவீடு கட்டி இருப்பதால், பத்திரிகை கொடுக்க வந்திருந்தார். கிளினிக்கில் இருந்து வெளியே வந்து காரின் கதவைத் திறந்தார். அப்போது, வேகமாக வந்த ஒருவன், அவருடைய காலரைப் பிடித்து இழுத்து ஏதோ பேசினான். அவர் ஏதோபதில் சொல்லிவிட்டு நகர்ந்த நேரத்தில், எதிர்ப்புறத்தில் இருந்து வந்த ஒருவன், அரிவாளால் பின்தலையில் ஓங்கி சீவினான். இன்னொரு பக்கத்தில் இருந்து வந்த ஒருவன், மறுபடியும் அரிவாளால் வெட்டினான். அந்த நேரத்தில், காலரைப் பிடித்து இழுத்தவன் பைக்கை ஸ்டார்ட் செய்து தயாராக வைத்திருந்தான். வெட்டியவர்கள் மூவரும் அடுத்த நிமிடம் பைக்கில் ஏறிப்பறந்து விட்டனர். இது எல்லாம் மூன்று நிமிடங்களுக்குள் முடிஞ்சிடுச்சுங்க'' என்றனர் பதற்றமாக.

பி.ஜே.பி-யின் வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சாண்டி நம்மிடம், ''டாக்டர் அரவிந்த் ரெட்டி

ரொம்பவும் தன்மையானவர். சின்னப்பசங்ககிட்ட கூட, ரொம்ப மரியாதையாகப் பேசுவார். எங்க கட்சியில் நான்கு வருடங்களாக இருந்தார். மதுரையில் நடந்த தாமரை சங்கமத்தில் அவருடைய பணி ரொம்பவே பேசப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி பி.ஜே.பி வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது. காவல் துறை இதுவரை என்ன செய்கிறார்கள் என்றே தெரிய வில்லை. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கு போல இதிலும் மெத்தனம் காட்டக்கூடாது!'' என்று வருத்தப்பட்டார்.

முகம் மறைத்துக்கொண்டு பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், ''உண்மையில் எங்களுக்கு எந்தத் தடயமும் சிக்கவில்லை. அரசியல் காரணங்கள், குடும்பப்பிரச்னை, மருத்துவத்தொழில் போட்டி, ரியல் எஸ்டேட் பிரச்னை என்று பல கோணங்களில் விசாரிக்கிறோம். அரசியலைப் பொறுத்தவரை யாரிடமும் பகை இல்லை. அதேபோல, குடும்பத்திலும் பிரச்னைகள் இல்லை. ரியல் எஸ்டேட் விவகாரத்தில் அதிகதீவிரம் காட்டவில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் மருத்துவமனையில்தான் இருந்துள்ளார். சர்க்கரை நோய் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து வந்தார். சமீபத்தில்கூட, அந்த ஆராய்ச்சி தொடர்பாக டெல்லிக்கு சென்று வந்தார் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்த இலவசமாக சிகிச்சை அளிக்க இவர் முயற்சி செய்திருக்கிறார். இவரைக் கொலை செய்தவர்கள் தொழில்ரீதியான கொலைகாரர்கள். டாக்டர் அந்த நேரத்தில் அங்கு வருவார் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துள்ளது. அவர்கள் வந்த டூ வீலரை நாங்கள் பிடித்து விட்டோம். மருத்துவ ரீதியான காரணங்கள்தான் கொலைக்குக் காரணமாக இருக்கும் என்பதுதான் எங்களுடைய முதல் கட்ட சந்தேகம். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம்'' என்றார் உறுதியாக.

அரவிந்த் ரெட்டியின் மனைவி சுதா பேச முன்வரவில்லை. யு.எஸ்-ஸில் இருக்கும் அரவிந்த் ரெட்டியின் தம்பி பாலாஜியிடம் பேசினோம். ''அண் ணனுக்கு எதிரிகள் யாரும் கிடையாது. மிரட்டல் வந்திருந்தால், அண்ணன் நிச்சயம் சொல்லி இருப்பார். இதுக்குமேல எதுவும் கேட்காதீங்க. மீடியாகிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு போலீஸ் சொல்லி இருக்காங்க.!'' என்றார்.

வேலூர் எஸ்.பி. ஈஸ்வரனிடம் பேசினோம். ''பல தகவல்கள் எங்களுக்குக் கிடைத்து இருக்கின்றன. உங்களிடம் அதுகுறித்துப் பேசினால் குற்றவாளிகள் உஷாராகலாம். எனவே, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். ப்ளீஸ்!'' என்றார்.

ஒரு வாரம் ஆகியும் குற்றவாளிகளை நெருங்க முடியாததால், 'குற்றவாளிகளைப் பற்றிய துப்பு கிடைத்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்’ என்று காவல் துறை அதிகாரிகளின் செல்போன் எண்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்துள்ளனர். மர்மக் கொலைக்கு விரைவில் விடை கிடைக்கட்டும்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்