விவசாயம் செய்வதற்குத் தண்ணீரும் மின்சாரமும் இல்லாத காரணத்தால், தமிழக பாரதிய கிஸான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் புதுசுபுதுசாக போராட்டங்களை நடத்தி, நாளிதழ்களில் 'நூதனப் போராட்டம்’ என்ற தலைப்பில் இடம்பிடிக்கிறார்கள்.

ஏற்கெனவே யாகம் வளர்த்து அலப்பறை செய்தவர்கள் இப்போது, 'மின்சாரத்தைக் காணோம்... கண்டுபிடிச்சுக் கொடுங்க’ என்று காவல்நிலையப் படி ஏறி புகார் கொடுத்து, போலீஸாரை அலற விட்டிருக்கிறார்கள்.

அவர்கள் நடத்திய முதல் போராட்டமே சூப்பர் ஹிட். காவிரி ஆற்றில் பந்தல் அமைத்து, நாலைந்து அய்யர்களை அழைத்து யாகம் நடத்தினர். 'அமெரிக்க அரசாங்கம் அந்த நாட்டு விவசாயிகளுக்கு 20 சதவிகித மானியம் அளிக்கிறது. ஆனால், தன்னை ஒரு விவசாய நாடுன்னு சொல்லிக்கிற நம் நாட்டு அரசாங்கமோ, ஒண்ணு புள்ளி அஞ்சு, ரெண்டு புள்ளி அஞ்சுன்னு மானியம் கொடுக்கிறாங்க. இது என்னங்க நியாயம்? உரம், மின்சாரம்னு எல்லா விலைகளையும் ஏத்திடுறாங்க. ஆனா, எங்க விளைபொருளை மட்டும் கம்மியான காசுக்குத்தான் வாங்குவாங்களாம். அதான் பாரதப் பிரதமருக்கும் வேளாண்மைத் துறை அமைச்சருக்கும் நல்ல புத்தியைக் கொடுன்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறோம்’ என்றவர்கள், யாகத்தைத் தொடங்கி வைக்க தமிழக அமைச்சர்கள் சிவபதியையும், கே.வி.ராமலிங்கத்தையும் அழைத்துவந்தனர்.

அடுத்த அதிரடி, மழை வேண்டி நடத்தப்பட்ட வேள்வி. காவிரி ஆற்றுக்குள் குளம் வெட்டி, அதில் குடகு மலையில் இருந்து கொண்டுவந்த நீரை ஊற்றி, பத்து வேத விற்பன்னர்களை அதனுள் இறக்கி, 'கர்நாடகாவில் கனமழை வேண்டும் வருண பகவானே...’ என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வேள்வி நடத்தினர். 'கர்நாடகாவில் மழை வந்தாதானே, அணை நிரம்பும். அப்பத்தானே உபரித்தண்ணீர் நமக்கு வரும்'' என்று நடைமுறை பதிலையும் சொன்னார்கள்.

அடுத்த அஸ்திரம்தான் அடாவடி அலப்பறை. உர விலை ஏற்றத்தைக் கண்டித்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். அதாவது, கோவணம் கட்டிப் போராடுவதாக அறிவித்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூடியவர்கள், கடகடவென சட்டை, வேட்டியைக் கழற்றவே பேஸ்தடித்துப் போனார்கள் காவல் துறையினர். 'இது அராஜகம்... இப்படி எல்லாம் நீங்க பண்ணக் கூடாது’ என்று கெஞ்சிக் கூத்தாடி போலீஸார் வேட்டியைக் கட்டிவிட்டனர். வேட்டியுடன் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தவர்கள், கையில் ஆளுக்கொரு சட்டியை எடுத்துக்கொண்டு 'எங்க நிலை இப்ப இப்படித்தான் இருக்கு. நங்க ஆண்டியாப் போயிட்டோம்’ என்று சட்டியுடன் முன்னேறினர். அதிரிபுதிரியாக உள்ளே நுழைந்து சட்டிகளைக் கைப்பற்றினர் காக்கிகள். அப்படியும் விடாமல், ரோட்டில் உட்கார்ந்து தவழ்ந்துக்கொண்டே போய்தான், போராட்டத்துக்கு சுபம் போட்டனர் விவசாயிகள் சங்கத்தினர்.

அடுத்த சில நாட்கள் ரூம் போட்டு யோசித்த விவசாயிகள், மின்சாரம் வேண்டி திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவனைக்கா, அமாலாசிரம மாதாகோயில், நத்தர்ஷா தர்கா என ரவுண்ட் கட்டி பூஜை நடத்தினர். காவிரி ஆற்றில் 108 தீபங்களை மிதக்கவிட்டு, 'இனி யாரை நம்பியும் பயன் இல்லை. காவிரித் தாய்தான் நல்ல வழியைக் காண்பிக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்தனர். ஆனாலும், அவர்கள் கோரிக்கை எதுவும் நிறைவேறவில்லை. அதனால் இப்போது அவர்கள் நாடி இருப்பது காவல் துறையை.

முசிறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், 'மின்சாரத்தைக் காணோம். கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்று புகார் கொடுத்தனர். 'நாங்க பாவம்... எங்களை விட்ருங்க’ என்று எவ்வளவோ சமாதானம் பேசியும் வேலைக்கு ஆகாததால், 'கண்டுபிடித்துத் தர்றோம்’ என்று புகாரைப் பெற்றுக்கொண்டு அதற்கு ரசீதையும் கொடுத்து அனுப்பி இருக்கிறார் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி.

''ஏன் இப்படி எல்லாம்?'' என்று பாரதிய கிஸான் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் அய்யாக்கண்ணுவைக் கேட்டால், ''எங்க உரிமையை நாங்க விட்டுக்கொடுக்க மாட்டோம். முதலாளிகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கும் அரசு, ஏன் எங்களை மட்டும் கண்டுக்கவே மாட்டேங்குது'' எனக் காரத்துடன் பேசுகிறார்.

ஆக, போராட்டம் தொடரும்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்