பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸை 'அவன் இவன்’ என்று ஏகவசனத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் பேசியதைக் கேட்டு கொந்தளித்துக் கிடக்கிறார்கள் பா.ம.க. தொண்டர்கள். எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அளவுக்கு நிலவரம் கலவரமாக இருக்கிறது.

கடந்த 25-ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் அ.தி.மு.க-வின் செயல்வீரர் - வீராங்கனைகள் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் பேசினர். அத்தனை பேரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆகுங்கள் என்ற ரீதியில் பேச, கே.பி.முனுசாமி மட்டும் விவகாரமான பாதையில் பேச்சைத் திருப்பினார். நாகரிகம் கருதி அமைச்சர் பேசியதில் பல வார்த்தைகளைத் தவிர்த்திருக்கிறோம்.

''வன்னியர் தலைவர் என்ற பெயரில் கட்சி நடத்தும் ராமதாஸ் ஏமாற்றுப் பேர்வழி. என்னைத் தவிர என் குடும்பத்தினர் யாராவது கட்சியில் பதவிக்கு வந்தால், 'நடுரோட்டில் நிறுத்தி சவுக்கால் அடிக்கச் சொன்னார்’ இந்த ராமதாஸ். அப்புறம் அந்த வாக்குறுதி எங்கே போனதோ தெரியவில்லை. மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. திராவிடக் கட்சியின் தயவால்தான் பா.ம.க-வால் இங்கே (தர்மபுரி) வெல்ல முடிந்தது. ஆனால் இப்போது, 'திராவிடக் கட்சிகளே வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டு அலைகிறார். இப்போது யார் தாம்பூலம் வைத்துக் கூட்டணிக்கு அழைத்தது? பா.ம.க-காரனுங்களுக்குத் தெரிந்த ஒரே டெக்னிக் பூத்-களைக் கைப்பற்றி ஓட்டு குத்துவது மட்டும்தான். தேர்தல் கமிஷன் இப்போது கெடுபிடியாக இருப்பதால், அதையும் இனி செய்ய முடியாது. எங்கள் அம்மா கொடுத்த 54 வாக்குறுதிகளையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றி விட்டார். மின்வெட்டுப் பிரச்னையை தீர்க்கும் வகையில் 'தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை-2012’ என்ற திட்டத்தை முதல்வர் அறிமுகம் செய்திருக்கிறார். 'சூரிய மின்திட்டமெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். ஊழல் செய்யவே இதுபோன்ற திட்டங்கள் உதவும்’ என்று அவதூறு பேசுகிறார் ராமதாஸ். ராமதாஸுக்கு ஊசி போடத்தெரியும். சூரிய மின் சக்தி நுட்பங்களைப் பத்தி என்ன தெரியும்? வல்லு னர்களின் ஆய்வு முடிவைக்கொண்டே இந்தத் திட்டம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்குத் தெரியாததை கண்டுபிடித்து விட்டாரா? வன்னியர் இன மக்களைக் கேடயமாகவைத்து போடும் வேஷம் இனி எடுபடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அம்மாவை பிரதமர் நாற்காலிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' என்று விளாசித் தள்ளினார். வாடா, போடா என்ற ரீதியில் பேசிய அமைச்சரின் பேச்சை, மூத்த அமைச்சர்கள்கூட கண்டிக்காதது ஆச்சர்யம். புகையும் பா.ம.க. எப்படி வெடிக்கப்போகிறதோ?

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: க.தனசேகரன்