ஏற்கெனவே 'எஸ்கார்ட்’ வளையத்தில் இருக்கும் பி.ஜே.பி. மாநிலத் துணைத்தலைவர் ஹெச்.ராஜா-வுக்கு ரெட்அலர்ட் கொடுத்திருக்கிறது உளவுத் துறை. காரணம், இளையான்குடியில் அவரது சர்ச்சைக்குரிய பேச்சால் வெடித்த ரகளை!

பி.ஜே.பி-யின் மாநில மருத்துவர் அணிச் செய லாளர் அரவிந்த் ரெட்டி கொலையைக் கண்டித்து சிவகங்கை பி.ஜே.பி. சார்பில் கடந்த 26-ம் தேதி இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய ராஜா, ''தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் அரசியல் தலையீடுகள்தான். அரவிந்த் ரெட்டி கொலை விசாரணையில் இருக்கும் மூவரில் இருவர் முஸ்லிம்கள். சமீபத்தில், ராமநாதபுரத்தில் முஸ்லிம் தீவிர அமைப்பினர் 17 பேருக்குத் தீவிரவாத பயிற்சி அளித்துள்ளனர். போலீஸ் அவர்களை கைது செய்தது. ஆனால், தொகுதி

எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா தலையிட்டு அவர்களை விடுவித்து இருக்கிறார். மனிதநேய மக்கள் கட்சி என்கிறார்கள். இவர்கள் மனிதரும் இல்லை; இவர்களிடம் மனித நேயமும் இல்லை'' என்று முழங்கினார்.

பேச்சை முடித்து விட்டு ராஜா உள்ளிட்டவர்கள் பேக்கரியில் டீ குடித்துக்கொண்டு இருந்த நேரத்தில் அங்கே வந்த ம.ம.க-வின் பி.ஆர்.ஓ. ஷேக் இப்ராஹிம், 'இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தரக்குறைவாக பேசிய ராஜாவே மன்னிப்புக் கேள்’ என்று கோஷம் போட்டார். பி.ஜே.பி-யினர் சிலர் அவரை அடிக்கப் பாய, ஷேக்குக்கு ஆதரவாக முஸ்லிம்கள் வர, பதறிப்போய் ஓடிவந்தது போலீஸ். அப்படியும் களேபரத்தைத் தடுக்க முடியவில்லை. கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து பி.ஜே.பி-யினர் மீது கண்மூடித்தனமாக தாக்கினர் முஸ்லிம்கள். இதில் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ஜெயபிரகாசம், திருப்புவனம் ஒன்றியத் தலைவர் மலையேந்திரன், ராஜாவின் மைத்துனரும் தேசியப் பொதுக்குழு உறுப்பினருமான சபேசன் உள்ளிட்ட பலருக்கு செமத்தியான அடி விழுந்து, காயங்களுடன் தப்பினர். ராஜாவை மட்டும் பத்திரமாக மீட்டது போலீஸ். அடித்து விரட்டியும் ஆத்திரம் அடங் காதவர்கள், பி.ஜே.பி. கொடிகளை எரித்து, அங்கு நின்றிருந்த ஜெயப்பிரகாசத்தின் காரையும் நொறுக் கினர்.

சிகிச்சையில் இருந்த மாவட்ட பி.ஜே.பி. தலைவர் பி.எம்.ராஜேந்திரனிடம் பேசினோம். ''என்னுடைய தலைமையில்தான் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ராஜாதான், 'நானும் வருகிறேன்’ என்று வந்தார். ஆர்ப்பாட்டத்தில் ராஜா வழக்கம்போல உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினார். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒருவர், எங்களுக்கு எதிராக கோஷம் போட்டார். போலீஸ் சமாதானப்படுத்திய நேரத்தில் யாரோ செருப்பைத் தூக்கிக் காட்டினார். அடுத்து, முஸ்லிம் இளைஞர்கள், செங்கற்களையும் கம்புகளையும் கொண்டு எங்களைத் தாக்க ஆரம்பித்தனர். அந்தக் கும்பலிடம் இருந்து நாங்கள் தப்பி வந்ததே தெய்வச் செயல்தான். ஒரு மேன்சனுக்குள் ஒளிந்திருந்த எங்களை, எஸ்.பி. வந்துதான் மீட்டார்'' என்று மிரட்சியோடு சொன்னவர், ''தலைவர்களாக இருப்பவர்கள்

உணர்வுபூர்வமாகப் பேசலாம். உணர்ச்சியைத் தூண்டுவதுபோல் பேசக் கூடாது. அப்படிப் பேசியதால்தான் நாங்கள் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறோம். பலத்த காயமடைந்த மலையேந்திரனின் நிலையைப் பார்த்து நானே அழுதுவிட்டேன். அவருக்கு ஏதாவது ஆகி இருந்தால் யார் அவரது குடும்பத்தைத் தாங்குவது?'' என்று வேதனைப்பட்டார்.

இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய ம.ம.க-வின் மாநில அமைப்புச் செயலாளர் மௌலானா முகமது நாஸர், ''ஹெச்.ராஜாவுக்கு முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதே வாடிக்கையாகி விட்டது. வெள்ளிக் கிழமை அதுவும் தொழுகை நேரத்தில் இங்கு வந்து எதையாவது பேசிவிட்டுப் போகிறார். போலீஸ் வந்து சமாதானம் செய்த போதே ராஜாவுக்குப் பின்னால் நின்ற ஒரு ஆள், செருப்பைத் தூக்கிக் காட்டினார். அதற்கு மேல் எங்கள் இளைஞர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ராஜா உயிரோடு திரும்பிப்போனதே பெரிய காரியம். இனிமேல், இளையான்குடிக்கு அவர் வந்தால் விளைவு விபரீதமாகும்'' என்று எச்சரித்தார்.

ராஜாவிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு, ''மாவட்டத் தலைவர் அழைத்ததால்தான் அங்கு போனேன். ராமநாதபுரத்தில் தீவிரவாதப் பயிற்சி எடுத்தவர்களை போலீஸ் பிடியில் இருந்து ஜவாஹிருல்லா மீட்டது உண்மை. இல்லைன்னா கூட்டம் போட்டு பதில் சொல் லட்டும். அதை விட்டுட்டு, கூட்டமாக இருக்கிறோம் என்பதற்காக கொலைவெறி தாக்குதல் நடத்துவதா?'' என்று ஆவேசப்பட்டவர், ''கூடிய சீக்கிரமே மீண்டும் இளையான்குடிக்குப் போகிறேன்; என்ன செஞ்சுருவாங்கன்னு பார்ப்போம்'' என்றார்.

ஜவாஹிருல்லாவிடம் பேசினால், ''தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வேலையை கடந்த பல வருடங்களாக ராஜா செய்துவருகிறார். அரவிந்த் ரெட்டி கொலையில் முஸ்லிம்கள் யாரும் போலீஸ் விசாரணையில் இல்லை. எனது தொகுதியில் பெரியபட்டணத்தில் பயிற்சி வகுப்பு நடத்தியவர்களை போலீஸ் கைது செய்தது. விசாரித்ததில், அவர்கள் ஆன்மிகப்பயிற்சி எடுத் ததாக தெரியவந்ததால் போலீஸ் அவர்களை விடுவித்தது. திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டிய ராஜா மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

கூடுதல் எஸ்.பி. கண்ணன், ''ராஜா அங்கு வருவதாக முதலில் எங்களுக்குத் தகவலே இல்லை. முஸ்லிம்கள் தரப்பில் 400 பேர் மீதும் பி.ஜே.பி. தரப்பில் ராஜா, ராஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம்'' என்றார்.

இளையான்குடி சம்பவத்தை அடுத்து ஹெச்.ராஜாவுக்கான பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்த 'நோட்’ போட்டிருக்கிறதாம் உளவுத் துறை!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்