கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கும் நேரங்களில் எல்லாம் திருவண்ணாமலையில் ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பி விடும். தீப விழாவின்போது கோயிலுக்குள் செல்வதற்கான பாஸ் ரத்து செய்யப்பட்டதும், தேவையான அளவுக்குக் கழிவறை வசதிகள் உருவாக்கப்படாமல் இருப்பதும் இந்த வருட சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளன.

இந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய தீப விழா, 27-ம் தேதி முடிகிறது. வழக்கமாக மகா தீபத்துக்கு பொதுவழி தரிசனம் தவிர, கோயில் மூலம்

500,

600 ஆகிய விலைகளில் டிக்கெட் மற்றும் வி.ஐ.பி. பாஸ்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு பொதுவழி தரிசனம் மற்றும்

500 டிக்கெட் மட்டும்தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசும் அண்ணாமலையார் பக் தர்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், ''பாஸ் ரத்து செய்தது வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனாலும், அம்மனியம்மன் கோபுர வாயில் வழியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கோயில் உபயதாரர்கள், திருவிழா கட்டளைதாரர்கள் போன்ற முக்கியஸ்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருப்பது சரியல்ல. இப்படி பொத்தாம்பொதுவாக அறிவித்து இருப்பதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உண்டு. வி.ஐ.பி-களுடன் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் செல்வதற்கு ஏதுவாகி விடும். தீபத்தைக் காணவரும் பக்தர்களுக்குச் செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் எதையும் இதுவரை கோயில் நிர்வாகம் செய்யவே இல்லை. தற்காலிகக் கழிவறைகள் நிறைய அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால், அப்படி எதுவும் செய்யவில்லை என்பதால், திருவிழா நேரத்தில் நிச்சயம் பிரச்னை வெடிக்கும்'' என்கிறார்கள்.

இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சங்கர் இந்த விவகாரம் குறித்து பேசினார். ''கார்த்திகை தீப

விழாவை சர்வாதிகாரப் போக் கில் நடத்த நினைக்கும் தமிழக அரசுக்கு, இந்து முன்னணி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரி விக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் திருவிழா தொடங்கும் முன்பே பொதுமக்கள், வியாபாரிகள், இந்து சமுதாயத்தைச் சார்ந்த பெரியோர்களை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, திருவிழாவைப் பற்றி முழுமையாகத் தெரியாத அமைச் சர்கள், அதிகாரிகளை மட்டுமே அழைத்து, கூட்டம் நடத்தி இருக் கிறார்கள்.

இந்து மதப் பெரியோர்களை மதிக்காமலும், இந்து இயக்கங்களைக் கலந்து ஆலோசிக்காமலும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலும் விழாவை நடத்த இருக்கிறார்கள். பொதுமக்களிடம் இருந்து பல கோடிகள் வருமானம் பார்க்கும் கோயில் நிர்வாகம், அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியையும் செய்துகொடுக்க விரும்பவில்லை. காவல் துறையினர் பல ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, எந்த ஓர் ஏற்பாடும் நடக்கவில்லை.

'வி.ஐ.பி-களுக்கு மட்டும் அனுமதி’ன்னு சொல்றாங்க. ஆனால், இதுநாள்வரை யார் யாரெல்லாம் அனுமதிக் கப்படுவார்கள் என்ற பட்டியலை நிர்வாகம் வெளி யிடவே இல்லை. அந்த வி.ஐ.பி-களுடன் வரும் உறவினர்களை இவர்கள் எப்படித் தடுக்கப் போகிறார்கள்? இவர்கள்தான் வி.ஐ.பி. என்று எப்படி ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளப் போகிறார்கள்? இவர்கள்தான் வி.ஐ.பி. என்று ஒருவரைத் தீர்மாணிக்கும் அதிகாரத்தை, நிர்வாகத்துக்கு யார் கொடுத்தது? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை காணாமல், விழா ஏற் பாட்டை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படவில்லை என்றால், இந்து சகோதரர்களும் இந்து முன்னணியினரும் விழாவின் ஏழாம்நாள் அன்று கறுப்பு உடை அணிந்து பெரியதேரை இழுக்க முடிவுசெய்து இருக்கிறோம்'' என்றார் ஆவேசத்துடன்.

அண்ணாமலையார் கோயிலின் இணை ஆணையர் பரஞ்ஜோதியிடம் இது தொடர்பாகப் பேசினோம். ''பேட்டி எல்லாம் வேண்டாமே'' என்றவரிடம், குளறுபடிகள் பற்றி எடுத்துச் சொன்னோம். ''யாரும் குறை சொல்ற மாதிரி தீபத் திருவிழா நடக்காது. எல்லாம் முறையாகச் செய்து இருக்கிறோம். தேவை இல்லாமல் சிலர் குழப்பத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி நன்றாக நடத்துவோம்'' என்று மட்டும் பதில் சொன்னார்.

லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் விழா ஏற்பாடுகளில் அசட்டை இருக்கவே கூடாது!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்