விஜயகாந்த் கட்சியில் இருந்து அடுத்து எந்த எம்.எல்.ஏ. ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்பார் என்று பரபரப்பு நிலவும் சூழலில், மேட்டூரில் நடந்த அரசு விழாவில் அ.தி.மு.க. அமைச்சர் எடப்பாடி பழனி சாமியுடன் மேடைஏறி, அதிரவைத்து இருக்கிறார் எஸ்.ஆர்.பார்த்திபன்.

கடந்த 18-ம் தேதி, மேட்டூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவுக்குத் தலைமை வகித்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடைஏறினார் மேட்டூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-வான எஸ்.ஆர்.பார்த்திபன். எடப்பாடி பழனிசாமிக்குப் பக்கத்திலேயே பார்த்திபனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி வணக்கம் சொல்ல, பதிலுக்கு பார்த்திபனும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார். விழாவில் மற்றவர்கள் பேச ஆரம்பித்த பிறகும், எடப்பாடி பழனிசாமியும் பார்த்திபனும் பேசிக்கொண்டே இருந்தனர். அழைப்பிதழில் இருந்த வரிசைப்படி பார்த்திபனை பேச அழைத்தனர். எடப்பாடி பழனிசாமியைத் திரும்பிப் பார்த்துவிட்டு மைக் முன் சென்றார்.

''என்னை வெற்றிபெறச் செய்த இதயதெய்வம் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்'' என்று ஆரம்பித்தார். ''மேட்டூர் தொகுதி தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதி. மேட்டூர் தண்ணீர் பல மாவட்டங்களுக்குச் செல்கிறது. ஆனால், மேட்டூர் தொகுதியில் உள்ள மேச்சேரி, கொளத்தூர், கோனூர் போன்ற ஊர்களில் இப்போது குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்பதும் வெறுமனே பேச்சளவில்தான் இருக்கிறது.

முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ரேஷன் கார்டு என மேட்டூர் தொகுதியில் இருந்து இதுவரை 4,000 மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் கொண்டுபோய் கொடுக்கும் மனுக்களும் குப்பைக்குத்தான் போகின்றன. மேட்டூர் சட்டமன்றத் தொகுதி அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அழைப்பிதழில்கூட மேட்டூர் சட்டமன்றத் தொகுதி என்று போடாமல், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா என்றுதான் அச்சிட்டு இருக்கின்றனர்'' என்று படபடத்து அமர்ந்தார்.

பார்த்திபன் அமர்ந்ததும், பதில் சொல்வதற்காக சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் எழுந்தார். ''எம்.எல்.ஏ. சொல்வதைப்போல அரசோ, அதிகாரிகளோ சுணக்கம் காட்டுவது இல்லை. முதல்வரின் வழிகாட்டுதல்படி நாங்கள் விரைந்து செயல்பட்டு வருகிறோம். எம்.எல்.ஏ., கொடுத்த மனுக்களில் இருந்து 850 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மீதி உள்ளவர்களுக்கு சொந்தமாக நிலம் இருப் பதால், அவர்களுக்கு உழவர் அடையாள அட்டை கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். கலெக்டர் பேசிக்கொண்டு இருந்த நேரத்திலும் எடப்பாடியும் பார்த்திபனும் பேசிக்கொண்டுதான் இருந்தனர்.

விழாவின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பேச வந்தார். ''அம்மா ஆட்சியில் மட்டும்தான் ஏழை மக்களுக்கு உதவிகள் கிடைக்கும். பார்த்திபன் நிதிநிலை அறிக்கையைப் படித்தவர். அரசின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து வைத் திருப்பவர். தமிழகத்துக்கு, மத்தியஅரசு நிதி அளிப்பதே இல்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்கிறது. இது பார்த்திபனுக்கும் தெரியும். கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட் டப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் பணி நிறைவடைந்து விடும்.

மற்ற தொகுதிகளைக் காட்டிலும் மேட்டூர் தொகுதியில்தான் நலத்திட்ட உதவிகள் அதிமாக வழங்கப்பட்டுள்ளன. புதிய பேருந்து வழித்தடமும் தொடங்கி இருக்கிறோம். இதை எல்லாம் பார்த் திபன் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று பொறுப்பாகப் பதில் சொல்லி முடித்தார்.

''அரசு விழாக்களில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று விஜயகாந்த் மறைமுகமாக எச்சரித்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது, திடீரென அரசு விழாவில் கலந்துகொண்ட காரணம் என்ன?'' என்று பார்த்திபனிடம் கேட்டோம்.

''மக்கள் பிரச்னைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எங்கள் தலைவர் கேப்டன் சொல்லி இருக்கிறார். என் தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பேச வேண்டும் என்றுதான் நான் அரசு விழாவில் கலந்துகொண்டேன். இது ஒரு சாதாரண விஷயம். அதனால்தான் அரசு விழாவில் கலந்து கொண்டதைத் தலைமைக்குச் சொல்லவில்லை'' என்றார்.

ஓஹோ!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி