'எங்கள் குடியிருப்புக்கு மின்சார வசதி செய்து கொடுங்கள் என்று வருடக்கணக்கில் மனு கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செவிசாய்க்க மறுக்கிறார்கள்’ என்று, கரிச்சிபட்டியைச் சேர்ந்த அழகு, ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) கோரிக்கை விடுத்து இருந்தார்.

சின்னமனூர் ஒன்றியம் அப்பிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மலை அடிவாரத்தில் இருக்கிறது கரிச்சிபட்டி. இந்த ஊருக்கு அருகே புதிதாக உருவாகி இருக்கும் இந்திரா நகர் காலனியில் 25 அரசுத் தொகுப்பு வீடுகள் இருக்கின்றன. ஆக்ஷன் செல்லில் புகார் அனுப்பியிருந்த அழகுவைத் தேடிச்சென்றோம். அவர் தோட்ட வேலைக்குப் போய்விட்டதால், அவரது மனைவி சாந்தியிடம் பேசினோம்.

''தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்தத் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. எங்கள் காலனிக்கு மின்சாரம் கேட்டோம். 'உங்களுக்கு மின் இணைப்பு வேண்டும் என்றால், புதிதாக 10 மின் கம்பங்கள் நட

வேண்டும். அதற்காக இரண்டு லட்சம் ரூபாயைக் கட்டுங்கள்’ என்று மின்வாரியம் சொன்னது. ஆனால், பஞ்சாயத்தில் நிதி இல்லை. அதனால், அன்று முதல் ஒவ்வொரு அலுவலகமாக அலைகிறோம். யாரும் உதவி செய்வதாக இல்லை'' என்றார்.

இவர்களது கோரிக்கையை தேனி கலெக்டர் பழனிசாமியிடம் கூறினோம். அவர், பஞ்சாயத்து உதவி இயக்குனரை உடனே தொடர்புகொண்டு, 'மின்வாரியத்திடம் பேசி இந்திரா நகர் குடியிருப்புக்கு மின்வசதி செய்துகொடுங்கள். பஞ்சாயத்தில் பணம் இல்லை என்றால், ஒன்றியக்குழு பொதுநிதியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுங்கள்’ என்று ஆலோசனை வழங்கினார்.

அதன்பிறகு, வேலைகள் மளமளவென நடந்தன. நாம் கலெக்டரிடம் பேசிய 45 நாட்களில், இந்திரா நகர் காலனிக்கு மின்சாரம் வந்து விட்டது. மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்கள் அத்தனை பேர் வீடுகளுக்கும் இணைப்பு கிடைத்தது. மின்சாரம் வந்த தகவல் அறிந்து மீண்டும் காலனிக்குச் சென்றோம். வீடுகளில் மின்விளக்குகள் ஜொலித் தன.

நம்மைச் சந்தித்த பாண்டி, ''என் வாழ்க்கையில் சொந்த வீடு கட்டாமலேயே செத்துடுவேன்னு நினைச்சேன். எப்படியோ சர்க்கார் புண்ணியத்தில் வீடு கிடைச்சது. உங்க பத்திரிகையால மின்சாரமும் வந்துடுச்சு. ரொம்ப ரொம்ப நன்றிங்க.'' என்றார்.

- இரா.முத்துநாகு, படங்கள்: சக்திஅருணகிரி