குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1-ம் தேதியை குமரி மாவட்ட மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். அதன் 54-வது வருட கொண்டாட்டக் களேபரங்கள் அடங்கும் முன்பே, குமரி மாவட்டம் கேரளத்துடனே இருந்திருக்கலாம் என வம்பு கிளப்பி இருக்கிறார் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி.

மக்கள் நலப்பணியாளர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விஜயதரணி, ''இப்போதைய ஆட்சியில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் மின்தடை நிலவுகிறது. என்னுடைய தொகுதி அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் நிலவும் மின் தடையால், மக்கள் மீண்டும் கேரளாவோடு சேர்ந்து இருக்கவே விரும்புகிறார்கள். மக்களின் கோரிக்கை நியாயமானதுதான். காரணம் கேரளாவில் ஒரு நாளில் 30

நிமிடங்கள்தான் மின்தடை இருக்கிறது’' என திரியைக் கொளுத்திப் போட குமரி மாவட்டமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத்தின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், ''குமரி மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். குமரித் தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த விளவங்கோடு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு, குமரி மாவட்ட மக்கள் கேரளாவோடு இருந்திருக்கலாம் என்று பேசியது உண்மையிலேயே வேதனையான விஷயம். மாவட்ட

விடுதலை என்பது மார்ஷல் நேசமணி தலைமையில் ஏராளமானோர் போராடிப்பெற்ற விடுதலை. பொறுப்பு உணர்ச்சி இல்லாமல் இப்படிப் பேசியது கண்டிக்கத்தக்கது. மாவட்ட விடுதலைப் போராட்டத்தின்போது புதுக்கடை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானார்கள். போலீஸ் தடியடிகளைத் தாங்கி, பலர் இறந்திருக்கிறார்கள். விஜயதரணியின் இந்தப்பேச்சு ஒட்டுமொத்த விடுதலைப் போராட்ட வீரர்களையும் கேவலப்படுத்துகிறது. உடனடியாக இந்தப் பேச்சுக்கு விஜயதரணி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’' என எச்சரிக்கையோடு முடித்தார்.

இந்தக் குற்றசாட்டுகள் குறித்து விஜயதரணி, ''அது என்னுடைய சொந்தக் கருத்து இல்லை. மக்களின் ஆதங்கத்தைத்தான் வெளியிட்டேன். என்னுடைய தொகுதி மக்களும் வர்த்தகர் சங்கங்களும் மின்தடையைக் காரணம் காட்டி, குமரியை கேரளாவுடன் இணைக்கக் கோரிப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதற்கு தலைமை தாங்குமாறும் என்னை அழைத்தனர். நான்தான் அவர்களை சமாதா னப்படுத்தி அனுப்பினேன். மக்களின் எண்ணத்தை ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தவே, பொதுமேடையில் அதைச் சொன்னேன். குமரி மாவட்ட விடுதலைத் தியாகிகளை நான் கொச்சைப்படுத்தவில்லை. காரணம், என்னுடைய குடும்பத்தினரே, அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்தான். இதுபோன்ற காரியங்களை அரசியல் ஆக்குவதை விட்டுவிட்டு மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடினால், இணைந்து போராட நானும் தயாராக இருக்கிறேன்’' என்றார்.

- பி.கே.ராஜ்குமார்

படங்கள்: ரா.ராம்குமார்