Published:Updated:

பதுங்கிய பெருமாள்சாமி... அமுக்கிய போலீஸ்!

இ.வி.பி. கலாட்டா

பதுங்கிய பெருமாள்சாமி... அமுக்கிய போலீஸ்!

இ.வி.பி. கலாட்டா

Published:Updated:
##~##
பதுங்கிய பெருமாள்சாமி... அமுக்கிய போலீஸ்!

தீம் பார்க்கில் நடந்த விபத்து தொடர்பாக போலீஸாரால் ஒன்றரை மாதங்களாக தேடப்பட்டு வந்த இ.வி.பி-யின் நிர்வாக இயக்குநர் இ.வி.பெருமாள்சாமி, இப்போதுதான் கைது செய்யப்பட்டு உள்ளார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இ.வி.பி. தீம் பார்க்குக்கு தன் தோழிகளுடன் வந்திருக்கிறார் நாக​லாந்தைச் சேர்ந்த அபியா மேக். இவர், தனியார் விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர். ஆக்டோபஸ் என்ற ராட்டினத்தில் சுற்ற விரும்பிய அபியா மேக், தன் தோழிகளுடன் அதில் ஏறி அமர்ந்தார். மேலும் கீழுமாகவும், தலைகீழாகவும் சுழலும் த்ரில்லிங் விளையாட்டு இது. ராட்டினம் ஒரு சுற்று சுற்றிய நிலையில், 50 அடி உயரத்தில் இருந்து அபியா மேக் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்ததும் சுயநினைவு இழந்த அபியா மேக் எழுந்திருக்க முடியாமல் போகவே, ராட்டினத்தின் அடுத்தடுத்த பெட்டிகள் அபியா மீது தொடர்ந்து மோதியதால், சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

பதுங்கிய பெருமாள்சாமி... அமுக்கிய போலீஸ்!

ராட்டினத்தில் இருந்த சேஃப்டி பெல்டை அணிய ஆபரேட்டர்கள் அறிவுறுத்தவில்லை என்றும்,

பதுங்கிய பெருமாள்சாமி... அமுக்கிய போலீஸ்!

ராட்டினம் சேதம் அடைந்திருந்தது... அதை நிர்வாகம் கவனிக்கவில்லை என்றும் விபத்துக்குக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆபத்து சமயத்தில் முதல்உதவி செய்வதற்குக்கூட அடிப்படை வசதிகள் தீம் பார்க்கில் இல்லை என்பது அடுத்த குற்றச்சாட்டு. அதேசமயம், இது இ.வி.பி. தீம் பார்க்கில் நடந்த முதல் விபத்து அல்ல என்பதுதான் உண்மை.

''சில மாதங்களுக்கு முன், சென்னை​யைச் சேர்ந்த ரிச்சா ஷா என்ற கல்லூரி மாணவி 'கப் அன்ட் சாசர்’ என்ற ராட்டினத்தில் சிக்கி காயம் அடைந்தார். அப்போதும், உடனே முதல்உதவி எதுவும் செய்யவில்லை. அபியா ஒரு மணி நேரத்துக்கும் மேல் தரையில் விழுந்து உயிருக்குப் போராடிய நிலையிலும், அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை, முதல் உதவியும் செய்யப்படவில்லை'' என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

நடந்த விபத்துகளுக்கு, நிறுவனத்தின் அஜாக்​கிரதைதான் காரணம் என்று வழக்குப்பதிவு செய்தது போலீஸ். ராட்டினத்தின் ஆபரேட்டர் வில்லியம்ஸ், மேனேஜர் அசோக் உட்பட ஆறு பேரைக் கைது செய்தனர். இ.வி.பி. தீம் பார்க்கை ஆய்வு செய்த அதிகாரிகள், தீம் பார்க் இயங்குவதற்குத் தற்காலிக தடை விதித் தனர்.

இ.வி.பி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெருமாள்சாமி, மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். சந்தோஷ§க்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது என்றாலும் பெருமாள்சாமியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும், பெருமாள்சாமி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார்.

இதயநோய் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார் பெருமாள்சாமி. இந்தத் தகவல் தெரிந்துதான், மருத்துவமனைக்குச் சென்று அவரைக் கைது செய்து இருக்கிறது போலீஸ். அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி, தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி அளித்து இருக் கிறது.

பதுங்கிய பெருமாள்சாமி... அமுக்கிய போலீஸ்!

இ.வி.பி. தீம் பார்க் மேனேஜர்களில் ஒருவரான பாலாஜியிடம் பேசினோம். ''எதிர்பாராமல் நடந்த விபத்துக்குப் பிறகு, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், தடை எதுவும் விதிக்கவில்லை. நாங்களாகவே எங்களது இயந்திரங்களைப் பரிசோதிப்பதற்காகத்தான் இத்தனை நாட்களும் நிறுத்தி வைத்திருந்தோம். அனைத்துப் பரி சோதனைகளும் முடிந்து விட்டன. அதனால், தீம் பார்க்கை புதுப்பொலிவுடன் திறக்கப் போகிறோம். எங்களது நிர்வாக இயக்குநர் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. வேறு வேலையாக வெளிநாட்டுக்குப் போயிருந்தார். கூடிய சீக்கிரமே அவருக்கு ஜாமீன் வாங்கி விடுவோம். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்'' என்றார்.

வழக்கை விசாரிக்கும் நரசத்பேட்டை இன்ஸ்​பெக்டர் செங்குட்டுவனிடம் பேசியபோது, ''கைது செய்யப்பட்ட பெருமாள்சாமியின் உடல்நிலை காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் ஒப்புதல் கொடுத்ததும், அவரைச் சிறையில் அடைப்போம். கலெக்டரே நேரடியாக ஆய்வு செய்து, தீம் பார்க் தொடர்ந்து செயல்படுவதற்குத் தடை விதித்துள்ளார். கலெக்டர் அனுமதி இல்லாமல் அவர்கள் தீம் பார்க்கைத் திறக்க முடியாது. அதையும் மீறித்திறந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தீம் பார்க்குகள் சந்தோஷம் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்!

- எஸ்.கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism