Published:Updated:

''தொல்லியல் துறை கைப்பற்றக் கூடாது!''

மல்லையில் போராடிய வைகோ

''தொல்லியல் துறை கைப்பற்றக் கூடாது!''

மல்லையில் போராடிய வைகோ

Published:Updated:
##~##
''தொல்லியல் துறை கைப்பற்றக் கூடாது!''

'மாமல்லபுரம் ஸ்தல சயனப்பெருமாள் கோயிலை தொல்லியல் துறை கைப்பற்றக் கூடாது’ என்று, போராடும் மக்களுக்கு ஆதரவாக கடந்த 21-ம் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் களம் இறங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த வைகோவை வரவேற்ற பெருமாள் கோயில் அர்ச்சகர்கள், மேடைக்குக் கீழேயே தொல்பொருள் துறைக்கு எதிராக கண்டன முழக்கம் போட்டனர். அந்தப் பகுதியில் உள்ள முக்கியமானவர்களையும் மேடையில் ஏறச்சொன்னார் வைகோ.

மக்கள் வாழ்வுரிமைச் சங்கத் தலைவர் ஜனார்த்தனன், ''நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரம் என்று சொல்லக்கூடிய நேரத்தில் இந்தத் தொல்லியல் சட்டத்தை கொண்டு வந்தனர். அதனால், அந்தச் சட்டம் எப்போது வந்தது என்று நாடாளு​மன்ற உறுப்பினர்களுக்குக் கூட

''தொல்லியல் துறை கைப்பற்றக் கூடாது!''

தெரியவில்லை. புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதையே காரணம் காட்டி அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்​களைப் பறிக்கக்கூடாது'' என்றார்.

அடுத்துப் பேசிய மல்லை சத்யா, ''மாமல்லபுரத்தில் ஒவ்​வொரு இடத்துக்கும் பாதுகாப்பு வேலி அமைத்து, ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறது தொல்லியல் துறை. இப்போது, மாமல்லபுரத்தையே ஒட்டுமொத்தமாக விழுங்கி, நம்மை அப்புறப்படுத்தத் துடிக்கிறது. நாம் ஏற்கெனவே எடுத்த முடிவுப்படி, நாம் வெற்றிபெற்று இருக்க வேண்டும். இல்லை, இந்த மண்ணில் வீழ்ந்திருக்க வேண்டும். இனி, மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை ஒரு அடிகூட கைப்பற்ற விடக்கூடாது'' என ஆவேசம் காட்டினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக மைக் பிடித்தார் வைகோ. '' 'மாமல்லன் பூமி மண்டியிடாது’ என்று இங்கே தமிழ் இன உணர்வை பறைசாற்றும் விதமாக வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருக்கிறது. தொல்லியல் துறையின் மூலமாக இந்த நகரத்துக்குக் கேடு செய்யக்கூடிய சட்டத்தை 2010-ம் ஆண்டு நிறைவேற்றினர். அதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். அந்தச் சட்டத்தின் விளைவாக, இங்கே பல்வேறு பகுதிகளில் 300 அடிக்கு உட்பட்ட இடங்கள் அகற்றப்பட வேண்டும் என்கிறார்கள். 1,000 அடி தூரத்துக்குக் கட்டடம் கட்ட அனுமதி தருவதும் கிடையாது. பட்டாக்கள் பெறமுடியாது. இந்த ஆபத்து ஒரு பக்கத்தில் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கும் நேரத்தில், கடந்த மே மாதம் 20-ம் தேதி ஸ்தல சயனப்பெருமாள் கோயிலையும் கையகப்படுத்தும் அக்கிரமமான அறி விப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இதை, தொல்லியல் துறைதான் செய்திருக்கிறது என்று மக்களிடம் நாடகமாடக் கூடாது.

''தொல்லியல் துறை கைப்பற்றக் கூடாது!''

இந்த மாவட்டத்தில் மட்டும் 1,200 பழைமையான கோயில்கள் இருக்​கின்றன. இந்தக் கோயில்களை எல்லாம் பாது​காப்பதற்கு 1,000 ஆண்டுகளாக எங்கள் மன்னர்களுக்கு இல்லாத அக்கறை, மண்ணின் மக்களுக்கு இல்லாத அக்கறை, உத்தரப் பிரதேசத்திலே இருந்தும் மத்தியப் பிரதேசத்திலே இருந்தும் டெல்லியில் இருந்தும் நீங்கள் தீர்மானிக்கிறீர்களா? இது போராட்டம் அல்ல; எச்சரிக்கை செய்கிற நிகழ்ச்சி.

மேற்குத் தொடர்ச்சி மலையை, மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தப் போகிறோம் என்று சொன்னவுடன், 'மலையை விடமாட்டோம்’ என்று கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிப் போராடுகிறார்கள். அதுபோல், தமிழக சட்டமன்றத்திலும் ஸ்தல சயனப்பெருமாள் கோயிலைக் கையகப்படுத்தக் கூடாது, 2010 மத்திய தொல்லியல் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

''தொல்லியல் துறை கைப்பற்றக் கூடாது!''

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒன்பது வைணவ வழிபாட்டு மூலஸ்தானத்தில் இருக்கிற விக்கிரகங்களை வாஷிங்டனுக்கு காட்சிப் பொருளாக கொண்டுசெல்ல 1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதில் பெரும்பாலும் ராமர் கோயிலின் சிலைகள். 'இந்தத் தவறை செய்யாதீர்கள்’ என்று குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் மறைந்த காஞ்சிப்பெரியவர் கடிதம் எழுதினார். அதை, அரசு அலட்சியம் செய்தது. அந்த விவகாரம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். அத்வானி உள்ளிட்ட 34 எம்.பி-க்கள் அதில் கையெழுத்து போட்டனர். நாடாளுமன்றத்தில் நடந்த கடுமையான விவாதத்தின்​போது, பிரான்ஸ் நாட்டில் இருக்கும் மோனோலிசா ஓவியத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்ல முடியுமா என்று வாதிட்டேன். அதனால், அப்போது விக்கிரகங்கள் அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்வது தடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள சிற்பங்களைப் போல உலகத்தில் வேறு எங்கும் காணமுடியாது. இந்த கோயில்கள் அனைத்தும் தமிழ்​நாடு அரசின் கீழ் வரும் இந்து அறநிலைத் துறை வசமே இருக்க வேண்டும். இது எச்சரிக்கைதான். இப்போதும் தங்கள் முடிவை கைவிடவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டத்தை மத்திய தொல்லியல் துறை சந்திக்க வேண்டி இருக்கும்'' என்று முழங்கினார்.

மாமல்லபுரம் தப்பிக்கட்டும்!

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism