Published:Updated:

படிப்பைத் தடுக்கிறதா ஜமாத்?

புதுக்கோட்டை பூகம்பம்

படிப்பைத் தடுக்கிறதா ஜமாத்?

புதுக்கோட்டை பூகம்பம்

Published:Updated:
##~##
படிப்பைத் தடுக்கிறதா ஜமாத்?

டிப்புக்குப் போராடுகிறாள் ஒரு மாணவி. மத ரீதியிலான அடக்குமுறைக்கு எதிராக வெளியே வந்து, 'பள்ளிக்கூடம் செல்வதைத் தடுக்கிறார்கள். என்னைப் படிக்க வையுங்கள்’ என்று கலெக்டரிடமே மனு கொடுத்திருக்கிறாள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகில் இருக்கிறது கிருஷ்ணாஜி பட்டினம். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம்தான் பிரதாபிராமன் பட்டினம். சுருக்கமாக, பி.ஆர். பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜனுபா பேகம் என்ற மாணவிதான் மனு கொடுத்து இருக்கிறார்.

அவரைச் சந்தித்தோம். ''எங்க அப்பா நல்லமுகமது. அம்மா ஹஜிரா. எங்க கிரா மத்தைச் சேர்ந்த பல மாணவிகள் மணமேல்குடி கிராமத்தில் படிக்கிறாங்க. எங்க அப்பா கட்டுமாவடி கிராமத்தில் வேலை செய்வதால், நான் அந்த ஊர்ப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கிறேன். போனமாசம், எங்க அப்பா

படிப்பைத் தடுக்கிறதா ஜமாத்?

செல்லுக்கு கால் வந்துச்சு. யாருன்னு தெரியாம நான் பேசினேன். அதைப்பார்த்து எங்க அப்பா கோபப்பட்டு என்னை அடிச்சிட்டார். எனக்கும் கோபம் வந்துச்சு. அதனால், வீட்டை விட்டுப் போகலாம்னு முடிவுசெஞ்சு திருச்சிக்குக் கிளம்பிட்டேன்.  என்னோட படிக்கிற ஃப்ரெண்ட் முத்து மீனாவோட அண்ணன் மனோகரன், நான் போற பஸ்ல அறந்தாங்கியில  ஏறினார். என்னைப் பார்த்ததும் விசாரிச்சார். நான் விஷயத்தைச் சொன்னதும், புதுக்கோட்டையில் இறங்கி திரும்பி ஊருக்குப் போகச்சொன்னார். நான் முடியாதுன்னு சொன்னேன். ஆனால், அவர் கட்டாயப்படுத்தி இறக்கி விட்டார். கூல் ட்ரிங்ஸ் வாங்கிக்கொடுத்து ஊருக்குப் போகச் சொல்லிப் பேசிட்டு இருந்தார். அப்போ, யாரோ ரெண்டு பேர் எங்களைப் பார்த்ததும், ஒரு பள்ளிவாசலுக்குக் கூட் டிட்டுப் போனாங்க. அங்கே என்னை​யும் மனோகரனையும் விசாரிச்சுட்டு, எங்க ஊரு ஜமாத்துக்குத் தகவல் சொன்​னாங்க. அப்புறம் அவங்களே எங்களைக் கொண்டுவந்து கிராமத்தில் விட்டாங்க.

எங்க ஜமாத் தலைவர் நஜ்புதீன், என்னை ஒரு ரூம்ல அடைச்சு வெச் சிட்டு, எங்க அம்மாவுக்குத் தகவல் சொன்னாங்க. எங்க அம்மா கண் முன்னால, என்னை அடிச்சாங்க. அதைத் தடுத்த எங்க

படிப்பைத் தடுக்கிறதா ஜமாத்?

அம்மாவையும் அடிச்சாங்க. அப்புறம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டு, 'இனிமே உன் பொண்ணு படிக்கப் போகக்கூடாது. மீறிப்போனா, ஊரைவிட்டுத் தள்ளி வெச்சிடுவோம்’னு மிரட்டினாங்க. எங்க அப்பாவையும் கூப்பிட்டு மிரட்டினாங்க. அதனால அதுக்குப் பிறகு எங்க அப்பா வீட்டுக்கே வரலை. நான் ஸ்கூலுக்குப் போய் ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. எப்படியாவது படிக்கணும்னு ஆசைப்பட்டுத்தான் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கேன்'' என்றார்.

ஜனுபாவின் அம்மா ஹஜிராவிடம் பேசினோம். ''எம் பொண்ணு கோபிச்சுக்கிட்டுப் போனதால், அவ நடத்தை சரியில்லைனு சொல்லி என் குடும்பத்துக்குக் கஷ்டம் கொடுத்துட்டாங்க.  என் பொண்ணை பள்ளிக்கூடம் அனுப்புனா ஊருக்குள் இருக்கக் கூடாதுன்னு ஜமாத் தலைவர் சொல்றார்.  அவங்க மிரட்டலுக்குப் பயந்த என் வீட்டுக்காரர் இப்ப உயிரோடு இருக்காரான்னே தெரியலை. அவருக்கும் எங்களுக்கும்

படிப்பைத் தடுக்கிறதா ஜமாத்?

பாதுகாப்பு வேணும். என் வீட்டுக்காரர் திரும்ப வரணும். என் பொண்ணு படிக்கணும். அதுக்காகத்தான் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கோம்'' என்றார்.

ஜமாத் தலைவர் நஜ்புதீனைச் சந்தித்து விவரம் கேட்டோம். ''நாங்க பெண் கல்விக்கு எதிரானவங்க கிடையாது. அந்தப் பொண்ணு ஸ்கூலுக்குப் போறேன்னு சொல்லிட்டு பசங்களோட சேர்ந்து சுத்துறதைப் பார்த்திருக்காங்க. எங்க கிராமத்தைச் சேர்ந்த பொண்ணுங்க மணமேல்குடி ஸ்கூல்லதான் படிக்​கிறாங்க. இந்தப் பொண்ணு மட்டும்தான் கட்டுமாவடியில் படிக்குது. அங்கே போறதாலதான் கெட்ட பெயர் வரு​துன்னு நினைச்சு, மணமேல்குடியில் படிக்கச் சொன்னோம். மத்தபடி அவங்களை யாரும் மிரட்டவோ... அடிக்கவோ இல்லை. அந்த அம்மா​வின் டார்ச்சர் தாங்காமத்தான் நல்ல​முகமது எங்கேயோ போய்ட்டார். அபராதம் போட்டதாச் சொல்றாங்க. அன்னைக்குப் இந்த பொண்ணை காரில் அழைத்து வந்ததுக்கு 1,500 ரூபாய் வாங்கிக் கொடுத்தோம். மத்தபடி அபராதம் எதுவும் விதிக்கவில்லை'' என்றார்.

மணமேல்குடி டி.எஸ்.பி வின்சென்ட் ஜெயராஜிடம் விசாரித்தோம். ''ஆட்சியர் அலுவலகம் மூலம் எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது. அந்தப் பெண்ணையும், அவரது அம்மாவையும் வரவழைத்து, புகார் வாங்கி இருக்கிறோம். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம். நிச்சயம் அந்தப் பெண்ணை படிக்க வைக்க முயற்சி செய்வோம்'' என்றார்.

இப்போது, ஜனுபா பேகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இதைக்கண்டித்து, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜமாத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கவே, டென்ஷனில் இருக்கிறது புதுக்கோட்டை.

எல்லாம் நல்லதாக முடியட்டும்!

-  வீ.மாணிக்கவாசகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism