Published:Updated:

நோட்டீஸ்... சீல்... டமார்!

கோவை அதிரடி

நோட்டீஸ்... சீல்... டமார்!

கோவை அதிரடி

Published:Updated:
##~##
நோட்டீஸ்...  சீல்... டமார்!

டந்த மாதம்தான் கோவை, வடவள்ளியில் கோலாகலமாகத் திறந்து​வைக்கப்​பட்டது, கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர். இப்போது, அந்த ஸ்டோர் இடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தால், பரபரக்கிறது கோவை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில், அங்கே ஆய்வு​செய்தார் மாவட்ட ஆட்சியர் கருணாகரன். 'இந்தக் கட்டடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்​பட்டு இருக்கிறது. உடனே இந்த பில்டிங்கை இடிக்க நோட்டீஸ் கொடுங்க’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். கலெக்டர் உத்தரவுப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, கடந்த 17-ம் தேதி அந்த ஸ்டோர் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. இது மட்டுமின்றி, கோவை மாவட்டம் முழுக்க விதிமுறையை மீறிக் கட்டப்பட்டுள்ள 300 கட் டடங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கவும் உத்தரவிட்டு இருக் கிறார் கலெக்டர். அதோடு ஏற் கெனவே நோட்டீஸ் அனுப்​பிய சில கடைகளைப் பூட்டி சீலும் வைத்திருக்கிறார்.

நோட்டீஸ்...  சீல்... டமார்!

ஆக்கிரமிப்புப் பிரச்னைக​ளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர்

நோட்டீஸ்...  சீல்... டமார்!

அமைப்பின் செயலாளர் கதிர் மதியோனிடம் பேசினோம். ''கோவையில் பெரும்பாலான ஷாப்பிங் மால், கல்யாண மண்டபம், பெரிய துணிக் கடைகளில் பார்க்கிங் வசதி, ஃபயர் சேஃப்டி போன்றவை கிடையாது. பார்க்கிங் வசதி இல்லாமல் சிட்டிக்குள் ஒரு கல்யாண மண்டபத்தைக் கட் டினால், அந்த மண்டபத்துக்கு வரும் மக்கள் தங்களது வாக னங்களை ரோட்டில்தானே நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தும்போது அந்தப் பகுதி முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

'ஃபயர் சேஃப்டியே கிடை​யாது’ என்று தீயணைப்புத் துறை சான்றிதழ் கொடுத்த நிறுவனங்களுக்கு எல்லாம் எப்படி மாநகராட்சி அனுமதி கொடுத்தது என்று தெரிய​வில்லை. அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு எல்லாம் கோவை மாநகராட்சி குடிநீர் சப்ளை கொடுத்து, வரியும் வசூல் செய்கிறது. எல்லாத் தவறுகளுமே மாநகராட்சியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.

கோவையில் விதிமுறை​களை மீறிக் கட்டப்பட்டு இருக்கும் துணிக்கடைகள், ஷாப்பிங் மால், கல்யாண மண்டபம் ஆகியவற்றின் பட்டியலை கலெக்டரிடம் கொடுத்து இருக்கிறோம். கலெக்டரும் எங்கள் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்'' என்றார்.

'கோவை மாநரில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி கிடையாது. அதனால் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு, மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. பார்க்கிங் வசதி இல்லாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர​விட வேண்டும்’ என்று ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். அதன்மீது இப்போது விசாரணை தொடங்கி இருக்கிறது.

நோட்டீஸ்...  சீல்... டமார்!

கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரனைச் சந்தித்தோம். ''கோவை மாவட்டத்தில் பல இடங்களில் வீடு, வணிக நிறுவனங்​கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு இருப்பது குறித்து எனக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதுபற்றி விசாரித்து, விதிமுறைகளை மீறிக் கட்டப் பட்டு இருக்கும் கட்டடங்​களுக்கு உடனே நோட்டீஸ் கொடுத்து வருகிறேன். குறிப்பாக சில வணிக நிறுவனங்கள், '20 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி இருக்கும்’ என்று அனுமதி வாங்குகிறார்கள். ஆனால், இரண்டு கார்கள் நிறுத்தும் வசதிகூட இருக்காது. பார்க்கிங் இடத்திலும் சேர்த்து கடையைக் கட்டி இருப்பார்கள். சிலர் குடியிருப்புக்கு என்று அனுமதி வாங்கிக்கொண்டு, அதை வணிக நிறுவனமாக மாற்றி விடுகின்றனர். இப்படி நிறையவே குளறுபடிகள் நடந்துள்ளன. மக்கள் நலனில் அக்கறைகொண்ட சில சமூக ஆர்வலர்கள் இது​போன்ற ஆக்கிரமிப்புகளை எங்களது கவனத் துக்குக் கொண்டு ​வருகிறார்​கள்.

அரசு விதிமுறைப்படி உங்களது குடியிருப்​பையோ, வணிக நிறுவனங்களையோ அமைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லாமல், அனுமதி இல்லாத பிளாட்களில் வீடு கட்டுவதோ, விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டடம் கட்டவோ கூடாது. நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு செய்யும் தவறுகள்தான் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. யாருக்கும் தெரியாமல் தவறு செய்தாலும் அதை யாரோ ஒருவர் கண் காணித்துக்கொண்டுதான் இருக்கிறார். இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் தவறு வெளியில் வரும். அன்று நிச்சயமாக உங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். பிரச்னை வரும்போது, மாவட்ட நிர்வாகத்தின் மீதோ, அரசின் மீதோ வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை'' என்று தெளிவாகச் சொன்னார்.

ஆரம்ப நிலையிலேயே இதுபோன்ற அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும்.

- கே.ராஜாதிருவேங்கடம்

படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism