Published:Updated:

பவுல் ஜார்ஜ் விடுதலைக்கு யார் காரணம்?

குமரியில் மல்லுக்கட்டும் கட்சிகள்

பவுல் ஜார்ஜ் விடுதலைக்கு யார் காரணம்?

குமரியில் மல்லுக்கட்டும் கட்சிகள்

Published:Updated:
##~##
பவுல் ஜார்ஜ் விடுதலைக்கு யார் காரணம்?

கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகள் துபாய் சிறையில் இருந்து விடு தலையாகி வந்திருக்கிறார் பவுல் ஜார்ஜ். இவரது விடுதலைக்கு உரிமை கொண்​டாடி ம.தி,மு.க-வினரும், காங்கிரஸ் கட்சியினரும் மல்லுக்​கட் டுவதுதான் குமரி டாக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   முதலில், பவுல் ஜார்ஜிடம் பேசினோம். ''எனக்கு 1973-ம் ஆண்டு திருமணம் ஆனது. வெளிநாட்டுக்குப் போனால் முன்னேறலாம்னு 1976-ம் ஆண்டு துபாய்க்குப் போனேன். அங்கே ஓரளவு பணம் சம்பாதித்து, நானும் என் தம்பியும் சேர்ந்து

பவுல் ஜார்ஜ் விடுதலைக்கு யார் காரணம்?

சொந்தமாக ஒரு ஃபர்னிச்சர் கடை போட்டோம். நன்றாகப் போனது. திடீரென்று 1985-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி நள்ளிரவு என் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள், என்னைக் கைது செய்​தனர். 'உன் கடையை ஒட்டியுள்ள வீட்டில் தீப்பிடித்து இரண்டு பாகிஸ்தானியப் பெண்களும், ஏழு குழந்தைகளும் இறந்து விட்டனர். அந்த மரணத்தில் உன் மீது சந்தேகம் உள்ளது’ என்று சொல்லிக் கைது செய்தனர். எனக்கு எதுவுமே புரியலை. அங்கே எப்படி வழக்கு நடந்தது என்றும் தெரியலை. அந்த வழக்கில் 1986-ம் ஆண்டு துபாய் நீதிமன்றம் எனக்குத் தூக்குத்தண்டனை கொடுத்து விட்டது. அப்போதே, தமிழக முதல்வர் தொடங்கி பிரதமர் வரை என் உறவினர்கள் பலரும் மனு கொடுத்தனர். இதைக்கேள்விப்பட்ட வைகோ, என் விஷயத்தை 1986-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் கவனத்துக்கும் என் விஷயத்தைக் கொண்டுபோனார்.

துபாய் நாட்டைப் பொறுத்தவரை, அங்கே தூக்குத் தண்ட​னையை நீதிமன்றம் கொடுத்தாலும், அதை நிறைவேற்றும் அதிகாரம் துபாய் அரசருக்குத்தான் உண்டு. வைகோ நாடா ளுமன்றத்தில் பேசியதன் எதிரொலியாக, என் வழக்கை எடுத்துப்பார்த்த அரசர், 'இந்தக் கொலைகளை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லையே’ என்று கேள்வி எழுப்பி, என் மரண தண்டனையை ரத்து செய்தார். இன்று நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் வைகோதான்'' என்று பெருமூச்சு​விட்டார்.

பவுல் ஜார்ஜ் விடுதலைக்கு யார் காரணம்?

மீண்டும் தொடர்ந்தவர், ''துபாய் நாட்டு சட்டப்படி, பாதிக்கப்பட்ட நபர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொது

பவுல் ஜார்ஜ் விடுதலைக்கு யார் காரணம்?

மன்னிப்பு வழங்கலாம் என்று சொன்னால் விடுதலை பெற முடியும்.  அந்தக் கடிதத்தை துபாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ, அந்த நாடுதான் அந்தக் கடிதத்தைத் தாக்கல்செய்ய வேண்டும். என் விஷயத்தில் இந்திய அரசு அதைச்செய்யவில்லை. என் மீது தவறு இல்லை என்பதைப் புரிந்து​கொண்ட பாகிஸ்தானியக் குடும்பம், எனக்குப் பொதுமன்னிப்புக் கடிதத்தை கடந்த 1996-ல் கொடுத்தனர். அதை, ஒவ் வொரு வருடமும், துபாய் நீதிமன்​றத்தில் நான் தாக்கல் செய்வதும், அவர்கள் தள்ளுபடி செய்வதுமாகவே இருந்தனர். சிறையில் கவலையும் கண்ணீருமாக இருந்ததால்  ஏகப்பட்ட நோய்கள் ஏற்பட்டு விட்டன. கடந்த அக்டோபர் 10-ம் தேதியோடு நான் ஜெயிலுக்குப் போய் முழுதாக 27 வருடங்கள் ஆகி விட்டன.

என்னை விடுதலை செய்யச்சொல்லி அக்டோபர் 14-ம் தேதி சிறையில் உண்ணாவிரதம் இருந்தேன். உடனே, என்னை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நான் அரசு வக்கீலிடம், 'நானும் ஒரு மனிதன்தானே... உங்க​ளுக்குக் கொஞ்சமும் மனிதாபிமானம் கிடையாதா? இந்த உண்ணாநிலைப் போராட்டம்தான் என் கடைசி ஆயுதம். எங்க நாட்டுக்கு விடுதலை வாங்கித்தர காந்தி எடுத்த ஆயுதம். என்னை விடுதலை செய்யுங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள்’ என்று கெஞ்சினேன். அவர் என் கருத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். அதன்பிறகே, விடுதலை கிடைத்து சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறேன். துபாய் சிறையில் இன்னும் ஏராளமான தமிழர்கள் இருக்கின்றனர்... பெரும்பாலானவர்கள், செய்யாத குற்றங்களுக்காகத்தான் சிறையில் வாடுகின்றனர்'' என்றார் வேதனையுடன்.

பவுல் ஜார்ஜ் வெளியே வருவதற்குக் காரணம், குமரி மேற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான பிரின்ஸ்தான் என்று குரல் கொடுக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இதுகுறித்து, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸிடம் பேசினோம். ''பணிநிமித்தமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்று போதுமான பாதுகாப்பு இல்லை. வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் பாதுகாப்புக்காக, கேரளாவில் தனிஆணையம் அமைத்து இருக்கின்றனர். அதுபோல தமிழகத்திலும் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் குரல் கொடுத்தவன் நான். பவுல் ஜார்ஜ் என் தொகுதிக்காரர். அந்த முறையிலும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோளின் காரணமாகவும் இந்தியத் தூதரகம் தொடங்கி துபாய் வரை பலருக்கும் கடிதங்கள் எழுதினேன். அதனால்தான் அவர் விடுதலை ஆனார்.''  என்றார்.

இது உண்மையா என்று பவுல் ஜார்ஜி​டம் கேட்டோம். ''வைகோ என் மரண தண்​டனையை ரத்துசெய்து, என் இருப்பை உறுதி செய்தார். பிரின்ஸ் எம்.எல்.ஏ நான் விடுதலை பெறுவதற்குக் குரல் கொடுத்து, துபாய் சிறையில் இருந்து என்னை மீட்டெடுத்தார். இருவருக்குமே நான் நன்றிக்​கடன் பட்டிருக்கிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் இரண்டு கட்சியினரும் மோதிக்கொள்வது தெரிந்தால், வைகோ, பிரின்ஸ் இருவருமே தாங்கிக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

இரண்டு கட்சியினரும் சேர்ந்து வெற்றியைக் கொண்​டாடலாம்!

- என்.சுவாமிநாதன்

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism