'ரத்தத்தில் குளிக்கும் செங்கல்பட்டு!’ என்ற தலைப்பில் 2.12.12 தேதியிட்ட ஜூ.வி-யில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 'எந்த நிமிடத்திலும் அடுத்த கொலை நடக்கலாம்’ என்று எழுதி இருந்தோம். ஒரு வாரத்துக்குள், அடுத்த கொலை நடந்தேவிட்டது!

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட, டிரைவர் கொல்லப்பட்டார். அந்த காரில் சென்ற அரசு அதிகாரிகள் தப்பிப் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியைத் தேடினோம்.

''சேத்துப்பட்டு ஊராட்சித் தலைவர் சங்கர், தி.மு.க. கிளைக் கழகச் செயலாளராகவும் இருக்கிறார். இவர், 10 வருடங்களுக்கும் மேலாக சேத்துப்பட்டில் கல் குவாரி தொழில் நடத்திவந்தார். இப்போது கல் குவாரியை அவருடைய தம்பி வாசு கவனித்துவருகிறார். கடந்த

உள்ளாட்சித் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்தன் தோற்றுவிட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பகை. தோல்விக்குக் காரணமான சங்கருக்கு தொல்லை கொடுக்க நினைத்த ஆனந்தன், கல் குவாரிகளை மூடச்சொல்லி அடிக்கடி பெட்டிஷன் போட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரிடம் இருந்து ஆனந்தனுக்கு கொலை மிரட்டல் வந்தது. உள்ளூரில் தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால், குடும்பத்தோடு தாம்பரத்துக்குக் குடியேறினார் ஆனந்தன். ஆனால், பெட்டிஷன் போடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

ஆனந்தனுடைய அடியாட்கள் தன்னை கொலைசெய்யத் துடிக்கிறார்கள் என்று டி.எஸ்.பி. கஜேந்திர குமாரிடம் சங்கர் புகார் அளித்து இருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், மீன்குஞ்சு குமார், சரண்ராஜ், தாம்பரம் ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அப்போது முதல் ஆனந்தன் தலைமறைவு ஆனார். சிறையில் இருந்த நான்கு பேரும் கடந்த 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது'' என்று முந்தைய சம்பவங்களை வரிசைப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி இரவு, சங்கருக்குச் சொந்தமான காரில் காஞ்சி புரம் கலெக்டர் பங்களாவுக்கு அவரது தம்பி வாசு சென்றுள்ளார். அங்கு கலெக்டர் சித்திரசேனன், கனிமவள உதவி

இயக்குனர் சிவக்குமார் ஆகியோருடன் பேசிவிட்டு, இரவு 8 மணிக்குக் கிளம்பி இருக்கிறார். அந்த காரில் டிரைவர் கார்த்திகேயன், சங்கரின் தம்பி வாசு, கனிமவளத் துறை உதவி இயக்குனர் சிவக்குமார், உதவியாளர் சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் கரசங்கால் சாலை வழியாக மலைப்பட்டு தரைப் பாலம் அருகே கார் சென்றபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. அங்கே மறைந்து இருந்த மர்ம நபர்கள், காருக்கு முன்புறம் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீச... நிலைதடுமாறி நின்றது கார். கார் மீது தொடர்ந்து குண்டுகளை வீசியது அந்தக் கும்பல். குண்டுகளை வீசிய பின்பு காரில் உள்ளவர்களை நோட்டமிட்டனர். அதில் சங்கர் இல்லை என்பதை உணர்ந்ததும் தப்பி ஓடியது கும்பல். அந்தச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். வழியிலேயே டிரைவர் கார்த்திகேயன் உயிர் பிரிந்துள்ளது.

மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாசு, ''குண்டு போட்ட உடனே, நான் செத்ததுபோல கார் சீட்டுக்குக் கீழே விழுந்துட்டேன். நான் எழுந்து இருந்தால், அவங்க என்னை வெட்டியிருப்பாங்க'' என்று பயத்துடன் சொல்கிறார். காயம்பட்ட அரசு அதிகாரிகள், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கனிமவளத் துறை உதவி இயக்குனர் சிவக்குமார், ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் எப்போதும் தனது காரில் ஸ்ரீபெரும்புதூர் வழியாக வீட்டுக்குச் செல்வார். அவரது கார் பழுது அடைந்ததால், வாசுவுடன் செல்ல நேரிட்டதாகச் சொல்கிறார்கள். சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், இரவு 9 மணிக்கு டி.ஆர்.ஓ-வை அழைத்துக்கொண்டு ஸ்பாட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் மருத்துமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்றுவரும் அதிகாரிகளைச் சந்தித்தார். அந்த அதிகாரிகள் சென்ற காரில், சில முக்கிய ஆவணங்களும் கொண்டுசெல்லப்பட்டது. அந்த ஆவணங்களை யாரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அதிகக் கவனம் எடுத்துக்கொண்டார். இரவு 3 மணிக்குத்தான் கலெக்டர் காஞ்சிபுரம் திரும்பினார் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சு.

ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. கஜேந்திரகுமாரிடம் பேசினோம். ''சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை விசாரணை செய்துவருகிறோம். ஆனந்தன் மற்றும் அவரின் ஆட்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் ஒரே ஊரைச் சேர்ந்த உறவினர்கள். தேர்தல் முன்விரோதம்தான் இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். சிவகாசி பகுதியில் இருந்து இங்கே வருபவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு செய்வது எல்லாம் சாதாரணம். எதிரிகளை நிலைகுலையச் செய்ய இந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப் படைகளை அமைத்துள்ளோம்'' என்றார்.

மக்களின் அச்சம் தொடர்கிறது!

- பா.ஜெயவேல்