ஊருக்குள் பிரச்னை என்றால், ஊராட்சி மன்றத் தலைவரைத் தேடிப் போகலாம். ஊராட்சி மன்றத் தலை வருக்கே பிரச்னை என்றால்..? இது, காஞ்சி மாவட்ட சோகம்!

மேல்மருவத்தூரை அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது, இந்தளூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவர் குமாரை, கடந்த நான்கு மாதங்களாகக் காணவில்லை. அவர், அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது பெற்றோரையும் காணவில்லை என்பதுதான் விவகாரம்.

ஊருக்குள் விசாரித்தோம். நம்மிடம் பேசிய பொன்னுசாமி என்பவர், ''குமாருக்கு சொந்த ஊர் இதுதான். பெரிய சொத்துபத்துக்காரங்க. ஊரில் நிறைய ஏக்கர் சொத்து கிடக்குது. ரெண்டு வருஷத்துக்கு முந்தி, இங்கே இருந்த பாரம்பரிய வீட்டை வித்துட்டு சோத்துப்பாக்கத்தில் போய் செட்டில் ஆகிட்டாங்க. ஹார்டுவேர் கடை இருக்கு. உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு வருஷம் முந்திதான் திரும்பவும் ஊருக்கு வந்தார். முந்தைய தேர்தலில் அவர் தோற்றுப்போனதால், இந்தமுறை பணத்தை தண்ணி மாதிரி செலவழிச்சார். ஊராட்சித் தலைவராகவும் ஜெயித்தார். யார் எப்போ உதவின்னு போய் நின்னாலும் செய்வார். ஆனா கொஞ்சம் ரோஷமான ஆளு. யாரும் தப்பாப் பேசக் கூடாதுன்னு நினைப்பார்.

போன ஜூன் மாதம்தான் அவரை நாங்க கடைசியாப் பார்த்தது. ஏதோ தொழில் சம்பந்தமா வெளியே போயிருப்பாருன்னு நினைச்சுக் கண்டுக்காம விட்டுட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது, அவர் குடும்பத்தோடு காணாமல்போன விஷயம். கடன் பிரச்னையில ஓடிப்போயிட்டதா சொல்றாங்க. கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறவர், கடனுக்காக ஓடினதாச் சொல்றதை நம்ப முடியலை'' என்றார்.

ஊராட்சித் துணைத் தலைவர் தனசேகரனிடம் பேசினோம். ''ரொம்பவும் நல்ல மனுசன். ஜூன் மாதம் 28-

ம் தேதி அலுவலகத்தில் பார்த்தேன். அதன்பிறகு பார்க்கலை. குடும்பத்தோட காணாமப் போயிட்டதாச் சொல்றாங்க. எந்தக் கடனையும் சமாளிக்கிற அளவுக்கு சொத்து உள்ளவர். அதனால் கடனுக்குப் பயந்து ஓடினதாச் சொல்றதை நம்ப முடியலை. எல்லாமே புதிரா இருக்குது. அவரை கண்டுபிடிக்கச் சொல்லி கலெக்டர், காவல் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து இருக்கோம். அவங்கதான் இந்த விவகாரத்தின் மர்மத்தை அவிழ்க்கணும்'' என்றார் வருத்தமான குரலில்.

ஊராட்சித் தலைவரின் குடும்பத்துக்கு நன்கு அறிமுகமான விஜயா என்பவர், ''காணாமப்போறதுக்கு முன்னாடி இந்த வீட்டை யாருக்கோ கிரையம் கொடுத்திருக்கார். அவங்கதான் இப்போ வீட்டில் தங்கி இருக்காங்க. செங்கல்பட்டில் தன் இரண்டு பிள்ளைகள் படிச்ச பள்ளியில் இருந்து டி.சி-களையும் வாங்கினதாச் சொல்றாங்க. அவருக்கு என்ன ஆச்சோன்னு பயமா இருக்கு'' என்றார் கவலையுடன்.

ஊருக்குள் இன்னொரு தகவலும் உலா வருகிறது. ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்து ஆடுகிறது. குமாருக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. அவருடைய சொத்துக்களைக் குறிவைத்த கட்டப்பஞ்சாயத்து கும்பல் எதாவது அவரை கடத்திச் சென்று இருக்கலாம். சொத்துக்களைக் கைப்பற்றி, கை மாற்றிய பிறகு அவரை விடுவிப்பார் கள் பாருங்கள்'' என்று தங்கள் பங்குக்குத் திகில் கிளப்புகிறார்கள்.

கந்துவட்டி மிரட்டல், ஹார்டுவேர் கடையில் நஷ்டம் என்று பல்வேறு வதந்திகள் உலவும் நிலையில், மாவட்ட காவல்துறை எஸ்.பி. மனோகரன், ''ஊராட்சித் தலைவர் காணாமல்போன விவகாரத்தில் விசாரணை நடக்கிறது. முதல்கட்ட விசாரணையில் அவர் கடன் பிரச்னையில் இருந்ததும், அதனால் தலைமறைவாக இருப்பதும் உறுதியாகி விட்டது. வேறு யாருடனும் அவருக்கு முன்விரோதம் இருந்ததாகத் தெரியவில்லை. காணாமல் போவதற்கு முன் சில சொத்துக்களை கைமாற்றியது, வீட்டுப் பொருட்களை முற்றாகக் காலி செய்திருப்பது, பிள்ளைகளின் டி.சி-களை வாங்கியது போன்றவை, அவர் திட்டமிட்டு செய்து இருப் பதாகவே தெரிகிறது.

தொடர்ந்து அவரது மொபைல் எண்களைக் கண்காணித்து வருகிறோம். அவர் இருக்கும் இடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம். இன்னும் சில தினங்களில் வழக்கின் புதிர் அவிழ்க்கப்பட்டு விடும்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய கலெக்டர் சித்திரசேனன், ''தலைவர் காணாமல் போனதால் ஊராட்சிப் பணிகள் பாதிக்கக் கூடாது என்பதால், துணைத் தலைவரையே தலைவர் பணிகளைக் கவனிக்க அறிவுறுத்தி உள்ளேன். அவர் தலைமறைவால் ஊராட்சிப் பணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' என்றார்.

குமார் இப்போது பொள்ளாச்சிக்கு அருகே ஒரு கிராமத்தில் குடும்பத்தினரோடு பதுங்கி இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. கந்துவட்டிப் பிரச்னையால்தான் தலைமறைவாக இருக்கிறார் என்றும் உறுதியாகச் சொல்கிறார்கள். அவர் வெளியே வந்தால்தான் தெளிவான விடை கிடைக்கும்.

- எஸ்.கிருபாகரன்

படங்கள்: வீ.ஆனந்தஜோதி