Election bannerElection banner
Published:Updated:

பொற்காசு பரிசு ரெடி!

பலே வேலூர் டாஸ்மாக்

##~##
பொற்காசு பரிசு ரெடி!

விற்பனையை அதிகரிக்க பரிசுகள் கொடுப்​பது வியாபாரத்தில் சகஜம்தான். ஆனால், டாஸ்மாக் விற்பனையைப் பெருக்கு​வதற்கு பரிசு அறிவித்து இருப்பது, வேலூர் ஏரியாவை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இந்த அறி விப்பைச் செய்திருப்பதால், ஏரியாவில் அனல் பறக்கிறது. 

நம்மிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளரான நாராயணன், ''கடந்த ஒரு வாரமாகவே வேலூர் பகுதி முழுக்க விளம்பர பேனர்கள் கட்டி இருக்கிறார்கள். அதில், 'ஹைடெக் டாஸ்மாக் பார் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பொற்காசு போன்ற பல பரிசுகள்’ என்று விளம்பரம் செய்து, மக்களைக் குடிக்க அழைக்கிறார்கள். வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள இந்த ஹைடெக் பாரை நடத்துபவர், அ.தி.மு.க-வின் வேலூர் மாநகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளாரான டி.டி.ஆர்.ரகு. மக்களைக் குடிக்க அழைக்கும் இவர், எப்படி இளைஞர்களை நல் வழிப்படுத்துவார் என்று புரி யவில்லை.

பொற்காசு பரிசு ரெடி!
பொற்காசு பரிசு ரெடி!
பொற்காசு பரிசு ரெடி!

இந்த விளம்பரத்தைப் பார்க்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தரசிகள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை இவர்கள் யோசிக்கவே இல்லை. சுகாதாரத் துறை அமைச்சருக்குச் சொந்த​மான தொகுதியில் இப்படி விளம்​பரம் செய்வது சரிதானா? கட்சிப் பொறுப்பில் இருப்பவர் என்றால், என்ன வேண்டுமானாலும் செய் யலாமா? உடனே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கட்சிப் பொறுப்பில் இருந்து அவரை விலக்குவதுடன் பார் உரிமத்தையும் ரத்து​செய்ய வேண்டும்'' என்று உணர்ச்சி​வசப் பட்டார்.

வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உமாமகேஸ்வரியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''ஹைடெக் பார் விளம்பரம் பற்றி எங்களுக்கும் புகார் வந்தது. சம்பந்தப்பட்டவர்களிடம், அந்த விளம்பரத்தை அகற்றச் சொல்லி இருக்​கிறோம். எங்கள் உத்தரவை மீறினால், அந்த பாரின் உரிமத்தை ரத்து செய்வோம்'' என்றார்.

இந்த விளம்பரம் குறித்துப் பேசுவதற்காக டி.டி.ஆர்.ரகுவைத் தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம் பேச விரும்பவில்லை. கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், மக்களைக் குடிக்கத் தூண்டும் வகையில் விளம்பரம் செய்வது நியாயம்தானா?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு