''மணல் லாரிகள் அல்ல... மரண லாரிகள்'' என்று அலறி வழிவிடுகிறார்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மக்கள். ஏனென்றால், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மணல் லாரிகளில் சிக்கி ஆறு பேர் உயிரை விட்டுள்ளனர். ஆனாலும், வேகத்தைக் குறைக்காமலே ஓடுகின்றன மணல் லாரிகள்.

தொடர் விபத்துகள் குறித்து மனித உரிமை ஆர்வலரும், இளைஞர்களுக்கான சமூக விழிப்பு உணர்வு மையம் நடத்தும் ரமேசுநாதனிடம் பேசினோம். ''திண்டிவனத்தைப் பொறுத்தவரை தினமும் இரண்டு அல்லது மூன்று விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன. காயம் அடைவோர் எண்ணிக்கை இன்னும் அதிகம். திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் மற்றும் புதுவை ரோட்டில் அதிக வேகத்தில்தான் வாகனங்கள் செல்கின்றன. இப்போது நான்கு வழிச்சாலை போன்ற நவீன வசதிகள் இருந்தாலும், அதைப் பயன்படுத்தத் தெரியாமல்தான் பலரும் விபத்தில் சிக்குகிறார்கள்.

இந்தப் பகுதியில் இருந்து பெரும்பாலான லாரிகள் சென்னைக்குத்தான் போகின்றன. போலி பாஸ்

ஒன்றை வைத்துக்கொண்டு, எத்தனை முறை மணல் அடிக்க முடியுமோ... அத்தனை முறை அடிக்கின்றனர். அனைத்து லாரிகளும் 100 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்கின்றன. மணல் எடுக்கும் பகுதியில் லாரி நகர்வது சிரமம் என்பதற்காக என்ஜினின் வேகத்தைக் அதிகரித்து உள்ளனர். அதே வேகத்தில்தான் ரோட்டிலும் ஓட்டுகின்றனர்.

திண்டிவனத்தில் இருந்து சென்னை, செஞ்சி ரோடு பிரியும் சலவாதியிலும் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அந்த இடத்தில் ஒரு சிக்னல்கூட இல்லை. முன்பு இங்கே ஒரு தார் லாரி கவிழ்ந்து விழுந்தது. அப்போது கொட்டிய தாரை இன்னமும் அப்புறப்படுத்தவே இல்லை. அதனால் அந்த இடத்தில் பிரேக் பிடிக்க முடியாமல் பல விபத்துகள் நடக்கின்றன. காவல்துறை தீவிர நட வடிக்கை எடுத்தால்தான் இந்த விபத்துகளைத் தடுக்க முடியும்'' என்று வேதனைப் பட்டார்.

திண்டிவனம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமியிடம், தொடர் விபத்துகள் குறித்துப் பேசினோம். ''விபத் துகள் தொடர்ந்து நடக்கும் இடங்களில் எல்லாம் இப்போது கூடுதல் போலீஸாரை நிறுத்திக் கண்காணிக்கிறோம். விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். லாரிகளின் வேகத்தைக் கண்காணித்து வருகிறோம். மக்களும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் விபத்துகளைக் குறைக்க முடியும்'' என்றார்.

வேகத்தின் பரிசு மரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும்!

- அற்புதராஜ்

படங்கள்: தே.சிலம்பரசன்