சேலம் மாவட்டச் செயலாளராக வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாதான் நியமிக்கப்படுவார் என்று பலரும் உறுதியாக நம்பிய நேரத்தில், வேறு ஒருவரை பொறுப்பாளராக நியமித்து இருக்கிறது தி.மு.க. தலைமை. இதனால், சலசலப்பின் உச்சத்தில் இருக்கிறது வீரபாண்டியார் மாவட்டம்!

சேலத்தில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த வீர பாண்டி ஆறுமுகம், கடந்த 23-ம் தேதி காலமானார். அந்தப் பொறுப்புக்குப் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும், டி.எம்.செல்வகணபதியும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவும் களத்தில் நின்றனர். இந்தநிலையில், மாவட்டத் துணைச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு மாவட்டப் பொறுப்புச் செய லாளராகப் பதவி உயர்வு கொடுத்து, ஏரியாவை அதிர வைத்திருக்கிறது தலைமைக் கழகம்.

யார் இந்த சிவலிங்கம்?

சேலம் அருகே உள்ள உடையாப்பட்டி, எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் சொந்த ஊர். இவருக்கு அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் உடையாபட்டியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுமலை. பல போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் முதல்ஆளாக நின்ற சிவலிங்கத்தின் மீது பொன் னுமலையின் பார்வை விழுந்தது. கூடவே கட்சிப் பொறுப்புகளும் வந்தன.

அதன்பிறகு, கட்சியின் பெருந்தலைகளோடு அறிமுகம் கிடைத்ததால், கட்சியில் சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே சேலம் மாவட்டத் துணைச்செயலாளர் பதவி கிடைத்தது. வீரபாண்டி ஆறுமுகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறினார். இதனால் 1989, 1996 தேர்தல்களில் வென்று இரண்டு முறை பனமரத்துப்பட்டி எம்.எல்.ஏ-வாகவும் வலம் வந்தார். வீரபாண்டி ஆறுமுகத்துடன் ஆரம்ப காலத்தில் இருந்து அரசியல் செய்தவர்கள் பலரும் பிரிந்துபோன நிலையிலும், இவர் இறுதிவரை அவரின் ஆதரவாளராகவே இருந்தார்.

''அதேநேரத்தில் ஆறுமுகத்தின் எதிர்க் கோஷ்டிகளான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனிடமும் டி.எம்.செல்வகணபதியிடமும் நட்போடுதான் இருந்தார். அதுதான் சிவலிங்கத்தின் சாதுர்யம்'' என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஆறுமுகம் இறந்ததும் அவரின் மகன் ராஜாவுக்குத்தான் பொறுப்புகள் கொடுக்கப்படும் என தி.மு.க-வினர் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் சிவலிங்கம் பொறுப்புக்கு வந்திருப்பதால், ராஜாவின் ஆதரவாளர்களான மாநகர இளைஞர் துணை அணி அமைப்பாளர் சுந்தரம், குகைப் பகுதிச் செயலாளர் சுப்பிரமணி, அஸ்தம்பட்டி இளைஞர் அணி துணை அமைப்பாளர் மஹபூப் பாஷா,

அஸ்தம்பட்டி மாணவர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ் எனப் பலரும் தலைமையின் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்துள்ளனர்.

இன்னும் பலர், தலைமைக்கும் மாவட்டக் கழகத்துக்கும் ராஜினாமாக் கடிதத்தோடு கண்டனக் கடிதங்களையும் அனுப்பி வருகிறார்கள். இதுகுறித்து, ராஜாவின் ஆதரவாளர்களிடம் பேசினோம்.

''எங்கள் விரல்களைக்கொண்டே எங்கள் கண்களைக் குத்தும் காரியத்தைத் தலைமைக் கழகம் செய்கிறது. இந்தத் துரோகத்தை என்னவென்று சொல்வது? தர்மபுரியில் மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் இறந்த பிறகு அவரது மகன் இன்பசேகரனுக்குத்தான் பொறுப்பு கொடுக்கப்பட்டது. பூண்டி கலைச்செல்வன் இறந்ததும் அவரது தம்பிக்குத்தான் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்படி இருக்கும்போது சின்ன வயதில் இருந்தே கட்சியின் தூணாக இருந்துவந்த எங்கள் தலைவர் வீரபாண்டியாருக்கும் அவரது குடும்பத்துக்கும் கட் சியின் தலைமை காட்டுகிற நன்றி விசுவாசம் இதுதானா? அப்பாவுக்கு மரியாதை காட்டும் தலைமைக் கழகம், பிள்ளைக்கு நாமம் போடுமா? கலைஞருக்குப் பிறகு பேராசிரியருக்குத் தலைவர் பதவி கொடுப்பார்களா?'' என்று குமுறினர்.

இதுபற்றி சிவலிங்கத்திடம் பேசினோம். ''சேலத்தைப் பொறுத்தவரை எந்தவிதமான குரூப் பாலிடிக்ஸும் இல்லை. நான் வகிக்கும் சேலம் மாவட்டப் பொறுப்பாளர் பதவி தற் காலிகமானதுதான். தி.மு.க-வில் மாவட்டச் செய லாளர் பதவியைத் தேர்தல் நடத்தித்தான் முடிவு செய்வார்கள். விரைவில் தேர்தல் வரும். சிலர் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்றால், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். தி.மு.க-வைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்'' என்றார்.

இன்னும் சிலரோ, ''சிவலிங்கத்துக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டதால், ராஜா கடும் கோபம் அடைந்தார். ஆனால், மாவட்டப் பொறுப்பாளர் பதவி கிடைத்ததும் சிவலிங்கமே ராஜாவுக்குப் போன் செய்து, 'ராஜினாமா செய்து விடுகிறேன்’ என்றார். ஆனால், ராஜாதான் 'வேண்டாம்’ என்று தடுத்தார். ராஜா சொன்ன பிறகுதான் சிவலிங்கம் பதவியை ஏற்றுக்கொண்டார்'' என்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து ராஜாவிடம் பேசினோம். ''ஆரம்பத்தில் இருந்தே அப்பா, நான், எஸ்.ஆர்.சிவலிங்கம் மூவருமே இணைந்துதான் கழகப்பணி ஆற்றி இருக்கிறோம். எங்களிடம் எந்தக் கோஷ்டி எண்ணமும் இல்லை. புதிய பொறுப்பாளரை அறிவிப்பது சம்பந்தமாக சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்பாவின் விசுவாசிகள் அதனால்தான் ராஜினாமாக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். நான் அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறேன்'' என்றார்.

புகைய ஆரம்பித்து விட்டது!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்