Published:Updated:

மிரட்டினாரா அமைச்சர்?

முகம்மது ஜான் மீது அதிரடிப் புகார்

மிரட்டினாரா அமைச்சர்?

முகம்மது ஜான் மீது அதிரடிப் புகார்

Published:Updated:
##~##
மிரட்டினாரா அமைச்சர்?

'என்னையும் என் குடும்பத்தையும் அமைச்சர் முகம்மது ஜானிடம் இருந்து காப்பாத்துங்க!’ என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரே புகார் கூறி இருப்ப​தால், அ.தி.மு.க. வட்டாரம் அதிர்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்​பேட்டையை அடுத்த சின்னதகரகுப்பத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. அ.தி.மு.க-வில் ராணிப்​பேட்டை தொகுதிச் செயலாளராக இருக்கிறார். இவர்தான் அமைச்சர் முகம்மது ஜான் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.  

''நான் அ.தி.மு.க-வில் 1977 முதல் இருக்கேன். கட்சிக்காக நாயா பேயா உழைச்சவன். என்னோட உழைப்புக்கு ஏத்த மரியாதையை கட்சி தரலை, அதை நானும் எதிர்பார்க்கலை. ஆனா, சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முகம்மது ஜான் என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டுறதுதான் தாங்க முடியலை.

மிரட்டினாரா அமைச்சர்?

ராணிப்பேட்டையில் முகம்மது ஜானுக்கு எம்.எல்.ஏ. ஸீட் கிடைச்சதும், நாங்க  எல்லோரும் சேர்ந்து உழைச்சு, அவரை ஜெயிக்க வச்சோம். அதுக்கு நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு அவருக்கே நல்லாத் தெரியும். ஒரு முறை அவரே என்கிட்ட, 'உனக்கு ஒன்றியச் செயலாளர் பதவி வேணுமா?’னு கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். அதுக்கு அவர், 'இப்ப போட்டி ரொம்ப அதிகமா இருக்கு. அதனால் நீ  பணம் கொடுத்தா, உனக்கு ஒன்றியச் செயலாளர் பதவியை வாங்கித் தர்றேன்’னு சொன் னார். நானும் நம்ம அமைச்சர்தானே, கட்சிப் பணிக்காகத்தானே கேட்கிறார்னு நினைச்சுக் கொடுத்தேன்.  

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிக்காக நாங்க போனபோது அவர்கிட்ட பணத்தைக் கொடுத்து, 'உங்களைத்தான் நம்பி இருக்கேன்’னு சொன்னேன். 'சரி ஒரு மாதத்தில் பதவி வாங்கித் தர்றேன்’னு சொன்னார். அதுக்குப் பிறகு அவர்கிட்ட சரியா பேசக்கூட முடியலைங்க. நான் எப்ப போன் பண்ணினாலும், 'அமைச்சர் பிஸியா இருக்கார், மீட்டிங்ல இருக்கார், தூங்கிட்டு இருக்கார்’னு சொல்லி போனை கட் பண்ணிடுவாங்க. வேற வழி இல்லாம போன மாசம் அவரை நேரில்

மிரட்டினாரா அமைச்சர்?

பார்க்க வீட்டுக்குப் போனேன். அவரைப் பார்த்து, 'எனக்குப் பதவி தேவை இல்லைங்க. கொடுத்த பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்க. இப்ப இருக்கிற பதவியே போதும்’னு சொன்னேன். உடனே அவர், 'ஆமா நீ யாரு?’னு ஒண்ணுமே தெரியாதவர் மாதிரி கேட்டார். எனக்குப் பயங்கர அதிர்ச்சி. மறுபடியும் விவரமா எடுத்துச் சொன்னேன். உடனே, 'நல்லபடியா இருக்கணும்னா, உடனே ஓடிப்போயிடு. இல்லைன்னா உன் குடும்பம் நாசமாயிடும்!’னு மிரட்டினார். உடனே பயந்து​ஓடி வந்துட்டேன்.

அப்போது தொடங்கி அமைச்சரிடம் இருந்தும், அவருடைய ஆட்களிடம் இருந்தும் தினம் தினம் மிரட்டல்கள் வந்துக்கிட்டே இருக்கு. அதனால் நடந்ததை முழுசா எழுதி கட்சித் தலைமைக்கு அனுப்​பினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

போன வாரம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் மேல்விஷாரத்தில் நடந்தது. அப்போ வந்திருந்த ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களையும்

மிரட்டினாரா அமைச்சர்?

சந்தித்துப் புகார் மனு கொடுத்தேன். அதுக்கு பிறகு இன்னும் அதிகமா கொலை மிரட்டல்கள் வருது. 'நான் நினைச்சா உன்னை ஒண்ணும் இல்லாம செய்துடுவேன். நீ அம்மாகிட்ட நேரடியாப் போய் புகார் சொன்னாக்கூட எனக்குக் கவலை இல்லை. என்னை அஞ்சு வருஷத்துக்கு அசைக்க முடியாது’னு அமைச்சர் முகம்மது ஜானே மிரட்டு​றார். அதுக்குப் பயந்துதான் நான் மாவட் ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன். உடனே, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கணும், இல்லைன்னா, அமைச்சர் ஆட்கள் மூலமா எனக்கு என்ன வேணும்​னாலும் நடக்கலாம்'' என்று அதிர்ச்சி​யுடன் பேசினார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அமைச்சர் முகம்மது ஜான், ''என்னை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கணும்னு இப்படிப் பலபேர் கிளம்பி இருக்காங்க. சம்பந்தப்பட்ட நபர் மீது கட்சியில் ஏகப்பட்ட புகார்கள் இருக்கு. அவர் சொல்வது எல்லாம் கட்டுக்கதை. எனக்கு என் துறை வேலைகளைப் பார்க்கவே நேரம் இல்லை. நான் யாரிடமும் பதவி வாங்கித் தருவதாகச் சொல்லலை... பணம் வாங்கலை... யாரையும் மிரட்டலை!'' என்றார்.

  இதுகுறித்து நம்மிடம் பேசிய வேலூர் மாவட்ட எஸ்.பி. ஈஸ்வரன், 'புகார் கொடுத்ததின் பேரில் விசாரணை நடந்து வருகிறது!’ என்று சுருக்கமாக முடித்துக்​கொண்டார்.

யார் சொல்வது உண்மையோ?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்:   கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism