Published:Updated:

காவு வாங்குமா மேம்பாலம்?

பூதலூர் வேதனை

காவு வாங்குமா மேம்பாலம்?

பூதலூர் வேதனை

Published:Updated:
##~##
காவு வாங்குமா மேம்பாலம்?

'போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கட் டப்பட்ட பாலம் பாதியிலேயே நிற் பதால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது’ என்று வெடிக்கிறார்கள் பூதலூர்வாசிகள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிறது பூதலூர். 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த ஊருக்கு நடுவே தஞ்சை டு திருச்சி ரயில்வே ரூட் இருக்கிறது. இந்த ரயில்வே கேட்டைத் தாண்டித்தான் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு போன்ற முக்கிய ஊர்களுக்குச் செல்ல வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல். அதைத் தவிர்க்கும் பொருட்டு, ரயில்வே துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மூன்றும் இணைந்து, 2009-ம் ஆண்டு 20 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டத் தொடங்கின. மூன்று வருடங்களைத் தாண்டியும் மேம்பாலப் பணி பாதியிலேயே தேமே என்று நிற்கிறது. பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

காவு வாங்குமா மேம்பாலம்?

பூதலூர் அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் சண்முகராஜன், ''எங்க கடைகளை இடிச்சுப் பாலம் கட்டினாலும், ஊருக்கு நல்லது நடக்குதேன்னு ஒத்துழைச்சோம். ஆர்ஜிதம் செய்ததுக்கு இன்னும் பணம் கொடுக்கலை. கடையையும் முழுசா இடிக்கலை. பாலமும் பாதியில் நிக்குது. இதனால் வியா​பாரம் பாதிச்சு, எல்லாரும் திண்டாடிக்கொண்டு இருக்கோம்'' என்றார் விரக்தியாக.

மக்கள் உரிமை இயக்கத்தின் செயலாளரான பழ.ராஜ்குமார், ''பாலம் கட்டும் பணி பாதியில் நிற்பதால், டவுனுக்கு மூன்று கி.மீ. சுற்றி போக வேண்டி இருக்கு. அந்த சாலையும் சரியா இல்லாத​தால, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஒருமுறை பஸ் கவிழ்ந்ததில் 45 பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். எங்க ஏரியாவைச் சேர்ந்த ஒருவர் தீக்குளிச்சப்ப, ஆம்புலன்ஸால் உடனே வர முடியாததால, அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், கண்டிப்பாக பலரது உயிர் போய்விடும்'' என்றார் வேதனையுடன்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பேச மறுக்க, அவர்  சார்பாகப் பேசிய மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில், ''பூதலூர் பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும்'' என்று மட்டும் சொன்னார்.

மக்கள் பிரச்னை குறித்துப் பேசுவதற்கு கலெக்டருக்கு என்ன தயக்கமோ?

- எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism