Published:Updated:

'ஹெல்மட் போட்டு வந்தாலும் அடிக்கிறார்கள்!'

கரூர் பரிதாப கவுன்சிலர்கள்

'ஹெல்மட் போட்டு வந்தாலும் அடிக்கிறார்கள்!'

கரூர் பரிதாப கவுன்சிலர்கள்

Published:Updated:
##~##
'ஹெல்மட் போட்டு வந்தாலும் அடிக்கிறார்கள்!'

திசயம்தான்... கரூரில் நாடா ளுமன்றத் தேர்தலுக்கு முன்ன தாகவே அ.தி.மு.க-வுக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து​விட்டன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

48 கவுன்சிலர்களைக் கொண்ட கரூர் நகராட்சியில் 37 உறுப்பினர்களோடு அ.தி.மு.க. அசுர பலத்துடன் இருக்கிறது. 'மீதி உள்ள இதரக் கட்சி உறுப்பினர்களை அ.தி.மு.க-வினர் நகரமன்றத்தில் ஜனநாயகக் கடமைகளைச் செய்ய விடுவதே இல்லை’ என குற்றம்சாட்டி, கடந்த டிசம்பர் 11-ம் தேதி தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. தாலுக்கா அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்துக்கு நான்கு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், நகரமன்ற உறுப்பினர்களும் திரண்டு வந்தனர்.

காங்கிரஸ் கவுன்சிலர் ஜெகதீசனிடம் பேசி​னோம். ''நவம்பர் 30-ம் தேதி நடந்த நகரமன்றக் கூட்டத்தில் குடிநீர்ப் பிரச்னை பற்றியும் துப்புரவுப் பணிகளைச் செய்யாதது பற்றியும் கேள்வி எழுப்பி​னேன். உடனே, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு அடித்தனர். கஷ்டப்பட்டுத்தான் என்னை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் காப்பாற்​றினர். இதேபோல், மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் நாக ராஜனை அடித்துக் காயப்​படுத்தினர். இத்தனைக்கும் அவர் முன்னெச்சரிக்கையாக ஹெல் மெட் அணிந்து கூட்டத்துக்கு வந்திருந்தார். அ.தி.மு.க-வினர் அடித்த அடியில் ஹெல்மெட் கூட நொறுங்கி ​விட்டது. கரூர் நகராட்சியில் ஜனநாயகம் செத்துவிட்டது. குறைகளைச் சொல்லவோ, கேள்வி கேட்கவோ, யாருக்கும் அனுமதி இல்லை'' என்றார் வேதனையுடன்.

'ஹெல்மட் போட்டு வந்தாலும் அடிக்கிறார்கள்!'
'ஹெல்மட் போட்டு வந்தாலும் அடிக்கிறார்கள்!'

தே.மு.தி.க. கவுன்சிலரான ஜமுனா தங்கவேல், ''மக்கள் நலனுக்காக எந்தத் திட்டமும் நிறை​வேற்றப்படுவது கிடையாது. எதிர்க் கட்சி உறுபினர்களின் வார்டுகளில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதும் இல்லை; தகவல் தெரிவிப்பதும் இல்லை. சில நாட்களுக்கு முன் எனது வார்டில் இருந்த ரேஷன் கடை ஒன்றை முன்அறிவிப்பு செய்யாமல் இடித்துத் தள்ளி விட்டனர். அதற்கு இன்று வரை மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர். இந்த உண்ணா​விரதப் போராட்டம் ஒரு எச்சரிக்கை மணிதான். இதற்குப் பிறகும் நகராட்சி நிர்வாகம் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால், போயஸ் கார்டன் சென்று முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்போம்'' என்று ஆவேசப்பட்டார்.

ம.தி.மு.க. கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் புலம்பல் வேறு மாதிரி இருந்தது. ''வார்டு பிரச்னை பற்றி சேர்மனிடம் சொல்லப் போனால், 'அமைச்சர் செந்தில் பாலாஜிதான் எல்லாமே. அவரைப்போய் பாருங்கள்’ என்கிறார். அமைச்சரிடம் போனால், 'அ.தி.மு.க-வுக்கு வந்துடுங்க, உங்களுக்குத் தேவையானதை எல்லாம் செஞ்சு கொடுக்கிறோம்’ என்கிறார். எதிர்க் கட்சி வார்டுகளைத் தொடர்ந்து புறக்கணித்தால், அந்தக் கவுன்சிலர்கள் அ.தி.மு.க-வுக்கு வந்துவிடுவார்கள் என்பது அவர்களின் கணக்கு. இரண்டு மாதங்களுக்கு முன், எங்கள் கட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேரும் சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டனர். அவர்கள் வார்டுகளுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்கி உள்ளனர். இதை வைத்து மற்ற கவுன்சிலர்களுக்கும் தூண்டில் போடுகின்றனர்'' என்றார்.

தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் நாக​ராஜன், ''மன்றக்கூட்டம் அரை மணி நேரத்துக்குள் முடிந்து விடும். தீர்மானங்களை முழுவதுமாகப் படித்து விவாதித்து, நிறைவேற்றுவது கிடையாது. தீர்மானங்​களின் நம்பர்களை மட்டும் வாசித்து நிறைவேற்றியதாகச் சொல்லி, கூட்டத்தை முடித்து விடுவார்கள். அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டுகளில் மட்டும் அதிக நிதி ஒதுக்கி பணிகளைச் செய்கிறார்கள். எதிர்க் கட்சி உறுப்பினர் வார்டுகளுக்கான திட்டங்கள் வெறும் காகித அளவில்தான் இருக்கிறது. அதைப்பற்றிக் கேட்டால், 'கான்ட்ராக்டர் கிடைக்கவில்லை’, கான்ட்ராக்டர் எவ்வளவு சொல்லியும் வேலையை ஆரம்பிக்கவில்லை’ என்று ஏதாவது சொல்லி அலைக்கழிக்கிறார்கள்'' என்றார் வருத்தத்துடன்.

'ஹெல்மட் போட்டு வந்தாலும் அடிக்கிறார்கள்!'

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அ.தி.மு.க-வினர் என்ன பதில் சொல் கின்றனர்? நகரமன்றத் தலைவரான செல்வராஜிடம் பேசினோம். ''நான் கட்சிப் பாகுபாடு பார்ப்பது கிடை​​யாது. கவுன்சிலர்களின் கோரிக்கைகளில் எது அத்தியாவசியமோ, அதற்கு முன்னுரிமை கொடுத்து செய்து தருகிறேன். நகராட்சியில் நிதிப் பற்றாக்குறையும் ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளதால், இருப்பதை வைத்து பணிகளைச் செய்கிறோம். அமைச்சரைப் போய்ப் பார் என்றெல்லாம் சொல்வது இல்லை. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவராக நகரமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு, ஒரே சமயத்தில் அனைவரும் எழுந்து நின்று கூச்சல் போட்டால், ஆளும் கட்சியினரும் சத்தம் போடத்தானே செய்வார்கள்? இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சபையை சீக்கிரம் முடித்து விடுவது அல்லது ஒத்தி​ வைப்பதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்போம். பிரச்னை செய்யும் ஒரு சில அ.தி.மு.க. கவுன்சிலர்களையும் எச்சரித்து இருக்கிறேன். அவர்கள் அரசியல் காரணங்களுக்காகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள்'' என்றார். சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறதோ, அதுதான் கரூர் நகராட்சியிலும் நடக்​கிறது.

யாராக இருந்தாலும் மக்களுக்கு நல்லது பண்ணுங்கப்பா!

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism