ஒரு கையில் துப்பாக்கி... மறு கையில் டிஜிட்டல் கேமரா... படுஸ்

. டைலாக டூ-வீலர்களில் மிதந்து, குற்றவாளிகளை வேட்டையாடுகிறது திருச்சி போலீஸின் 'ஆல்ஃபா டீம்’!.
திருச்சி மாநகரப் பகுதிகளில் பைக்கில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு அலையும் கொள்ளையர்கள், தனியாகச் செல்லும் பெண்களின் செயின்களை அடிக்கடி பறிக்க... அவர்களைப் பிடிக்க, ஆறு மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது இந்த டீம். மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள்தான் இதற்கு மூலகாரணம்.

இந்த டீமில் ஐந்து தனிப் படைகள். ஒவ்வொன்றிலும் இரண்டு போலீஸார். ஒருவர் பைக்கை ஓட்ட...

இன்னொருவர் பில்லியனில் துப்பாக்கி, வாக்கிடாக்கியுடன் அமர்ந்திருப்பார். குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கும் ஸ்ரீரங்கம், உறையூர், கே.கே.நகர், கன்டோன்மென்ட் ஏரியாக்களில் இவர்கள் ரோந்து செல்கிறார்கள். குற்றங்கள் நடந்தால், உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் போலீஸார் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்தப் படையினருக்கு லேட்டஸ்டாக டிஜிட்டல் கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது.

கமிஷனர் வன்னியபெருமாளிடம் நவீன மாற்றம் பற்றி கேட்டபோது, ''டூ-வீலரில் செல்லும் குற்றவாளிகளை மற்ற வாகனங்களில் போலீஸார் துரத்திச் செல்லும்போது சந்து பொந்துகளில் நுழைந்து

தப்பித்து விடுவார்கள். ஆல்ஃபா டீமினர் டூ-வீலரில் செல்வதால், துரத்திப் பிடிப்பது எளிதாகிறது. தற்போது டிஜிட்டல் கேமராவுடன் வலம் வரும் இந்த டீம், சந்தேகப்படும்படியாக ஒதுக்குப்புறமான பகுதிகளில் நின்றுகொண்டு இருக்கும் டூ-வீலர்களை போட்டோ எடுக்கிறார்கள். சந்தேகத்துடன் சுற்றித் திரியும் ஆட்களையும் போட்டோ எடுத்து அவர்கள் பற்றிய விவரங்களையும் சேகரிக்கின்றனர். குற்ற சம்பவம் நடந்த ஏரியாவைச் சுற்றி வாகன சோதனை நடத்தும்போதும், சந்தேகப்படும்படியான அனைத்தையும் போட்டோ எடுக்கிறார்கள். இவை அனைத்தையும் கன்ட்ரோல் ரூமில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட போட்டோக்களைக் காட்டி குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரையோ, டூ-வீலரையோ அடையாளம் காட்டச் சொல்வார்கள். ஆல்ஃபா டீமை உருவாக்கிய பின்னர் செயின் பறிப்பு தொடர்புடைய குற்றவாளிகளுடன், வேறு சில குற்றவாளிகளும் பிடிபட்டு இருக்கிறார்கள். செயின் பறிப்பும் குறைந்துள்ளது. இனி, குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது!'' என்றார்.

கலக்குங்க கமிஷனர்... கலக்குங்க!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்தி