Published:Updated:

பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!

காஞ்சிக்கு வருகிறார் வெள்ளத்துறை?

பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!

காஞ்சிக்கு வருகிறார் வெள்ளத்துறை?

Published:Updated:
##~##
பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!

ரபரப்பான காஞ்சி பேருந்து நிலையம் மற்றும் இரண்டு காவல் நிலையங்கள் கூப்பிடு தூரத்தி​லேயே இருக்க... எந்தப் பதற்றமும் இன்றி நிதானமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளரை கடந்த 9-ம் தேதி கூறுபோட்டது ஒரு ரவுடிக் கும்பல். வெள்ளை உடை, தோளில் கட்சித் துண்டு, முகத்தில் பளீர் சிரிப்பு அடையாளத்துடன் கட்சியில் வளைய வந்த, அம்பேத்கர் வளவன் என்ற நாராயணன்தான் கொல்லப்பட்டவர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேருந்து நிலைய சிக்னல் அருகே பிரபல ஓட்ட​லின் முன் நாராயணனின் அறிவிக்கப்படாத அலுவலகம் இருந்தது. அன்றைய தினம் மாலை, வழக்கம்போல கட்சியினருடன் பேசிக்கொண்டு இருந்த நாராயணனுக்கு எமனாக வந்தது ஒரு செல்போன் அழைப்பு. தனிமையில் பேச சில அடிகள் தள்ளிச் சென்றார். மின்சாரம் இல்லாததால், அந்தப் பகுதியில் இருள் கவிழ்ந்து கிடக்க... எங்கு இருந்தோ வந்த ஒரு கும்பல், சுதாரிக்கக்கூட அவகாசம் தராமல் அங்கேயே அவரைக் கூறுபோட்டது. பின் மண்டை, முதுகு, மார்புகளில் ஆழமாய் இறங்கின வெட்டுக்கள். காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்டு, சாவகாசமாக இருளில் கரைந்தது மர்மக்கும்பல். மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் நாராயணனின் உயிர் பிரிந்தது. விஷயம் அறிந்த கட்சியினர் சாலை மறியலில் இறங்க, பதற் றமானது காஞ்சி.

பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!
பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் விடுதலைச்செழியன், ''காஞ்சியில் தலித் அல்லாதோர் பலரும் எங்கள் கட்சியில் தீவிரப் பணி ஆற்றுகின்றனர். இது குறிப்பிட்ட சாதியைச்

பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!

சேர்ந்த அரசியல் பிரமுகரான ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லை. பா.ம.க-வில் இருந்து விலகி இப் போது சாதிப்பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர்தான் சில நாட்களுக்கு முன் எங்கள் கட்சித் தோழர் சதீஷ் என்பவரை அடியாட்களை வைத்து வெட்டினார். இன் னமும் அவர் உயிருக்குப் போராடுகிறார். இதைக் கண்டிக்கும் விதமாக பலரிடமும், 'இப்படி ஒரு சம்பவம் இனி நடந்தால் யாராக

பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!

இருந்தாலும் விடமாட்டேன்’ என நாராயணன் ஆவேசப்​பட்டார். இதுதான் கொலைக்குக் காரணம். சிறையில் இருந்தபடி ஸ்ரீதர் போட்ட உத்தரவைத்தான் கூலிப்படையினர் நிறைவேற்றி உள்ளனர்'' என்றார் ஆவேசமாக.

இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட​வராகக் குறிப்பிடப்படும் ஸ்ரீதரின் வீடு, இறுதி ஊர்வலத்தின்போது தாக்கப்​பட்டது. இதனால், டென்ஷனான ஸ்ரீதர், ''ஏன் எல்லா சம்பவங்களிலும் என் பெயரை இழுக்​கிறார்கள்? எல்லா வற்றையும் விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு நான் திரும்ப நினைக்கிறேன். ஆனால், அனைத்து சம்பவங்களிலும் என்னைப் பலிகடா ஆக்கு​கிறார்கள். சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவே பொது வாழ்க்கைக்கு வந்தேன். சமுதாயப் பணிகளில் ஈடுபடவே பள்ளித் தாளாளர் ஆனேன். ரவுடி என்ற அடையாளத்தை மீறி இப்போதுதான் ஒரு சமூக அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. அப் படிப்பட்ட சூழலில் ஒரு கட்சியின் முக் கியப் பிரமுகரை கொல்லும் அளவுக்கு நான் என்ன முட்டாளா? எந்த ஒரு நோக்கமும் இல்லாத நிலையில் இப்படி ஒரு கொலையைச் செய்து என்னை சிக் கலுக்கு உள்ளாக்கிக் கொள்வேனா?'' என்று வெடித்தாராம்.

இந்தநிலையில், கடந்த 12-ம் தேதி தாமஸ், நரேஷ்குமார் மற்றும் அறிவழ​கன் ஆகிய மூன்று பேர் இந்தக் கொலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். 'விடுதலைச் சிறுத்தை​கள் கட்சியில் சேருவதற்காக நாங்கள் நாராயணனை அணுகினோம். எங்களைச் சேர்க்க மறுத்து விட்டார்.

பெருகும் கொலைகள்.. நடுங்கும் மக்கள்!

அதனால்தான் கொன்றோம்’ என்றே திரும்பத் திரும்பச் சொன்னார்களாம். சரண் அடைந்​தவர்களின் பின்னணியை அலசிய காவல் துறை, இன்னும் சிலரை அள்ளிவந்து விசாரித்தது.

வழக்கை விசாரிக்கும் காஞ்சி நகர டி.எஸ்.பி-யான சந்திரசேகரனிடம் பேசி னோம். ''கொலையின் சூத்திர​தாரி பிரபல தாதா ஸ்ரீதர்தான். குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் அவரின் உத்தரவால்தான் கொலை நடந்துள்ளது. காஞ்சியைச் சேர்ந்த மணி​வண்ணன் என்பவரிடம் 1.10 கோடி ரூபாய் கடன் பெற்ற ஒருவர் முறையாக வட்டி தராமல் இழுத்தடித்ததோடு, 'நாராயணன் அண்ணன் இது விஷயமாகப் பேசுவார்’ என கூறி இருக்கிறார். இதில் எரிச்சல் அடைந்த மணிவண்ணன், ஸ்ரீதரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளார். கடந்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் சதீஷ் என்பவர் தாக்கப்​பட்டார். அந்த வழக்கில் தன்னையும் சேர்க்க காவல் துறைக்கு அழுத்தம் தருவதாக நாராயணன் மீது ஏற்கெனவே கடுங்கோபத்தில் இருந்த ஸ்ரீதருக்கு, இது கூடுதல் கோபத்தைக் ஏற்படுத்தி இருக்கிறது. தன் பழைய சகாவான கோனேரிக்குப்பம் சோகன் பிரபுவின் உதவியை நாடினான். அதன்படி, தன் பகுதியைச் சேர்ந்த அறிவழகன், நரேஷ்குமார், தாமஸ் ஆகிய மூன்று பேரை பிரபு அனுப்பி இருக்கிறான். அவர்கள் மூவரும் சேர்ந்துதான் இந்தக் கொலையை செய்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கட்சியில் சேர்க்க மறுத்ததால் கொலையைச் செய்தோம் என்று சொன்னவர்கள், நாங்கள் முறையாக விசாரித்ததும் உண்மையை ஒப்புக்கொண்டனர். முதல் கட்டமாக கொலையில் தொடர்பு உடைய மணிவண்ணன், பிரபு உள்ளிட்ட எட்டுப் பேரை ரிமாண்ட் செய்து இருக்கிறோம்'' என்றார்.

காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறி காஞ்சி மாவட்டத்தில் ரவுடிகளின் சாம்ராஜ்யம் விரிவடைந்துகொண்டே போவது மேலிடத்தின் கவனத்துக்குப் போயிருக்கிறதாம். ரவுடிகளுக்கு செக் வைக்கும் வகையில், 'என்கவுன்டர்’ ஸ்பெஷ​லிஸ்ட் வெள்ளத்துரை காஞ்சிக்கு அழைக்கப் படலாம் என்கிறது காக்கி வட்டாரம்.

- எஸ்.கிருபாகரன்

படங்கள்: வீ.நாகஜோதி