Published:Updated:

மீண்டும் சிறையில் எஸ்ஸார் கோபி

மதுரை பரபர

மீண்டும் சிறையில் எஸ்ஸார் கோபி

மதுரை பரபர

Published:Updated:
##~##
மீண்டும் சிறையில் எஸ்ஸார் கோபி

பரி மலைக்குச் செல்ல இருந்த நேரத்தில் மீண்டும் கைதாகி இருக்கிறார் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் அதிரடி அரசியல் பிரமுகருமான எஸ்ஸார் கோபி. ஆட்சி மாறியதும், நில அபகரிப்பு, கொலை உள்ளிட்ட ஐந்து வழக்கு​களில் எஸ்ஸார் கோபியைச் சிக்க வைத்தனர். ஆறாவதாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த வழக்கும் நிலம் சம்பந்தப்பட்டதுதான்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர் முதல் பிட் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் சிவகாமி. அ.தி.மு.க-காரரான இவரது கணவர் முத்துராமன்தான் இப்போது கோபியின் மீது மோசடிப் புகார் தொடுத்திருப்பவர். அவரைச் சந்தித்தோம். ''கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனிடம் சென்ட் 15 ஆயிரம் ரூபாய் வீதம் 5.82 ஏக்கருக்கு கிரயம் பேசி, முன் பணமா 50 ஆயிரம் குடுத்து 2007-ல் ஒப்பந்தம் போட்டேன். மூணு மாசத்துக்குள் மீதிப் பணத்தைக் குடுத்துட்டு பத்திரம் போட்டுக்கிறதாப் பேச்சு. ஆனா, அவங்க சொன்னபடி பத்திரம் முடிக்க வரலை. அதனால், நோட்டீஸ் அனுப்பினேன். 'இன்னும் ஏழு பேருக்கு அந்த இடத்தில் பங்கு இருக்கு’னு சொன்ன பாலசுப்பிரமணியன், அவரது பங்கான 3.5 ஏக்கரை மட்டும் எனக்குக் குடுக்க ஒப்பந்தம் போட்டார். ஆனா, அந்த இடத்தையும் சேர்த்து எஸ்ஸார் கோஷ்டிக்கு விக்கிறதுக்கு ஒப்பந்தம் போட்டுட்டார்.

மீண்டும் சிறையில் எஸ்ஸார் கோபி

எஸ்ஸாரோட ஆளுங்க மொத்த இடத்தையும் சுத்தம் பண்றதுக்காக ஜே.சி.பி-யைக் கொண்டு​வந்தப்ப

மீண்டும் சிறையில் எஸ்ஸார் கோபி

நான் தடுத்தேன். 'உங்க ரெண்டு பேருக்​கும் இந்த இடத்தில் சம்பந்தம் இல்லை. இடம் எங்களோடது’னு மிரட்டினார் எஸ்ஸார் கோபி. ஆட்களை வைச்சுப் பேசியதில், 30 லட்சம் குடுத்துட்டா ஒதுங்கிக்கிறதா கோபி கோஷ்டி சொன்னாங்க. நானும் சம்மதிச்சு, 16 லட்சத்தைப் பணமாக் குடுத்துட்டு மீதிக்கு செக் குடுத்தேன். அதுக்கப்புறமும் பாலசுப்பிரமணியும் எஸ்ஸார் கோபியும் சேர்ந்துக்கிட்டு, பத்திரம் போடாம இழுத்தடிச்சாங்க. நான் நெருக்கியதும் எஸ்ஸார் கோபியோட தோட்டத்துக்கு வரச்சொல்லி, மிரட்​டினாங்க. உயிருக்குப் பயந்து போலீஸ்ல போய் புகார் குடுத்துட்டேன்'' என்கிறார் முத்து​ராமன்.

இவரது புகாரின் பேரில், எஸ்ஸார் கோபி, ரமேஷ் என்ற ராமச்சந்திரன், எஸ்.ஆர்.முத்து, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவுசெய்த திருநகர் போலீஸார் கோபி, சிதம்பரம், சந்திரமோகன், ரமேஷ் ஆகியோரை 14-ம் தேதி அதிகாலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றது. கடைசியில், ரமேஷைத் தவிர்த்து மற்ற மூவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

ஸ்டேஷனில் விசாரணையில் இருந்த போது நம்மிடம் பேசிய எஸ்ஸார் கோபி, ''என் பெயருக்கு 2008-ல் 5.82 ஏக்கரைக் கிரயம் கொடுப்பதாக பாலசுப்பிரமணியன் ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து இருக்கிறார். இடையில் வந்த முத்துராமன், 'எஸ்ஸாரை எனக்கு மாத்திவிடச் சொல்லு’னு பாலசுப்பிரமணியனிடம் கேட்டார். '30 லட்சம் குடுத்துட்டா, நாங்க ஒதுங்கிக்கிறோம்’னு சொன்னோம். அதுக்குச் சம்மதிச்சு பாதித் தொகையை பணமாவும் மீதியை செக் ஆகவும் எங்களுக்குக் குடுத்தார் முத்துராமன். இதையடுத்து பாலசுப்பிரமணியனோடு நாங்கள் போட்டிருந்த கிரய ஒப்பந்தத்தை 2009-ல் ரத்து செஞ்சுட்டு, அந்த விவகாரத்தில் இருந்தே ஒதுங்கியாச்சு.

இதுக்கு இடையில் பாலசுப்பிரமணியனுக்கும் முத்துராமனுக்கும் ஏதோ பிரச்னை. அதனால், பாலசுப்பிரமணியன் முத்துராமனுக்குப் பத்திரம் முடிச்சுக் குடுக்க மறுத்துட்டார். இதுக்கும் எங்​களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? தி.மு.க. செயற்​குழுக் கூட்டத்தில் கலந்துக்கிறதுக்காக, 12-ம் தேதி நான் சென்னைக்கு போய்க்கிட்டு இருந்தேன். அந்தத் தேதியில் முத்துராமனை தோட்டத்துக்கு வரச்சொல்லி மிரட்டினதா ஒரு பொய்ப்புகார் குடுத்துருக்காங்க. எங்களோட இருந்த ரமேஷ், அ.தி.மு.க-காரர். அவரையும் கைது​செஞ்சு வாரன்ட் ரிப்போர்ட் எழுதினவங்க, திடீர்னு மந்திரிகிட்ட இருந்து போன் வந்ததும் அவரை மட்டும் விட்டுட்டாங்க. தி.மு.க-வினர் மீது எத்​தனையோ பொய் வழக்குகளைப் போட்​டிருக்காங்க, அதுல இதுவும் ஒண்ணு'' என்றார்.

திருநகர் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், ''இந்த விவகாரத்தில் இருந்து விலகுறதுக்கு ரெக்​கார்டா 30 லட்சமும், வெளியில் தெரியாம 80 லட்சமும் பேரம் பேசியிருக்கு எஸ்ஸார் குரூப். இந்த செட்டில்மென்ட்டுக்கு சம்மதிச்ச பின்னாடி பாலசுப்பிரமணியன் பல்டி அடிச்சுட்டார். சுமார் 90 லட்சத்துக்கு அக்ரிமென்ட் போட்ட இடம் ரெண்டு கோடிக்கு மதிப்பு உயர்ந்ததுதான் காரணம். 'பேசுனபடி முடிச்சுவிடுங்க’ன்னு எஸ்ஸார் கோபிகிட்ட போயிருக்கார் முத்துராமன். அதுக்குத்தான் அவரைக் கூப்பிட்டு மிரட்டிருக்காங்க. ரமேஷ், எஸ்ஸார் கோபியோட டம்மி ஆள்தான். அவர் பெயரை சும்மா எண்ணிக்கைக்கு அக்ரிமென்ட்ல சேர்த்திருக்காங்களே தவிர, அவருக்கு இந்த மோசடியில் எந்தப் பங்கும் இல்லை. மேலும், ரமேஷ் அப்ரூவராக மாறி கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் கொடுக்க சம்மதித்திருக்கிறார். அதனால்தான் அவரை நாங்கள் ரிமாண்டுக்கு அனுப்பவில்லை. மற்றபடி ஆளும் கட்சிக்காரர் என்பதற்காக, அவர் விடுவிக்கப்படவில்லை'' என்கிறார்.

'வில்லாபுரத்தில் சுவரில் விளம்பரம் எழுத வந்தவ​ரோடு எஸ்ஸார் கோபி தகராறு செய்தார். இதைத் தட்டிக்கேட்ட அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் உமா சங்கரையும் மிரட்டினார்’ என்று சொல்லி இன்னொரு வழக்கையும் பதிவு செய்து இருக்கிறார்கள். அதேபோல், சாதி அமைப்பு ஒன்றுக்குச் சொந்தமான பாவக்காய் மண்டபத்தில் அழகிரி பிறந்த நாளுக்கு விளம்பரம் எழுதியது எஸ்ஸார் குரூப். ஜெ. பிறந்த நாளுக்கு விளம்பரம் எழுதுவதற்காக அதை அழிக்கச்சொன்ன தன்னை மிரட்டியதாக மண்டபத்தின் நிர்வாகக் குழுத் தலை வரான ரமேஷி​டம் (முத்துராமன் விவகாரத்தில் எஸ்ஸாருடன் வழக்கில் சேர்க்கப்பட்டவர்) புகார் ஒன்றை வாங்கி இருக்கிறதாம் போலீஸ்.

ஏற்கெனவே, குண்டர் தடுப்புக் காவலை உடைத்திருக்கும் எஸ்ஸாரை ஏனோ மீண்டும் துரத்துகிறது போலீஸ்!

- குள.சண்முகசுந்தரம்  

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி