Published:Updated:

குற்றவாளிகளைப் பிடித்தால், மரணம் பரிசு!

பழி தீர்த்த கொள்ளையர்கள்.. கண்டுகொள்ளாத காவல் துறை

குற்றவாளிகளைப் பிடித்தால், மரணம் பரிசு!

பழி தீர்த்த கொள்ளையர்கள்.. கண்டுகொள்ளாத காவல் துறை

Published:Updated:
##~##
குற்றவாளிகளைப் பிடித்தால், மரணம் பரிசு!

திருடனை விரட்டிப் பிடித்தால் பாராட்டும் பரிசும் கொடுக்கிறது காவல் துறை. அப்படித்தான் தங்கள் ஊருக்குத் திருட வந்தவர்களை, ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து பிடித்துக்கொடுத்தனர். ஆனால், அதற்குப் பரிசாக இரண்டு பேர் உயிரை இழக்க... ஐந்து பேர் உயிருக்குப் போராடுகிறார்கள். கடலூர் மாவட்டம் தொழுதூருக்கு அடுத்த ஆலந் தூரில்தான் இந்தக் கொடூரம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 3-ம் தேதி இரவு 7 மணி. தொழுதூரில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் கணேசன், அவரது மகன்கள் அபினேஷ் குமார், குணசீலன் ஆகிய இருவரையும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துப் போயிருக்கிறார். கூட்டுரோடு அருகில் திடீரென சிலர், கணேசனையும் அவருடன் இருந்த மகன்களையும் சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் ரத்தவெள்ளத்தில் விழுந்த நேரம்... அந்தப் பகுதியை கடந்த செந்தில், செல்வராஜ் ஆகியோருக்கும் இதே கொடுமை நடந்திருக்கிறது.

குற்றவாளிகளைப் பிடித்தால், மரணம் பரிசு!

கொஞ்சநேரம் கழித்து அறிவுச்சுடர் என்பவர் அந்தப் பகுதிக்குப் போனார். அவரையும் வழிமறித்​துள்ளது அந்தக் கும்பல். அப்போது நடந்​ததை அறிவுச்சுடரின் அம்மா வளர்மதி நம்மிடம் விவரித்​தார். ''அறிவோட சித்தப்பா பையன் சக்தியை பைக்கில் கூட்டிட்டு இவன் போனான். கூட்டு ரோட்டுக்குப் போனப்ப வண்டியை யாரோ வழிமறிச்சு இருக்காங்க. பயந்துபோய் நிறுத்​தாமப் போனதும் முதுகில் கத்தியால் குத்தி இருக்காங்க. சக்தி​யின் கழுத்தையும் கிழிச்​சிட்டாங்க. கீழே விழுந்து மயக்கமான அறிவு, அப்புறம் மயக்கம் ​தெளிஞ்சு எங்களுக்கு போன் செய்தான். நாங்க ஓடிப்​போய்ப் பார்த்தோம். அங்கே நாங்கள் போனபோது, செல்வராஜ் என்பவர் செத்துக்கிடந்தார். செந்தில், கணேசன் இருவரும் ரத்தச் சகதியில் கிடந்தாங்க. ஆம்புலன்ஸ் வரவழைத்து எல்லோரையும் ஆஸ் பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். செந்தில் என்பவருக்கு ஆஸ்பத்திரிக்குப் போனதுமே உயிர் போயிடுச்சு. மத்தவங்க எல்லாரும் சீரியஸா இருக் காங்கய்யா... என் பையன் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலையே'' என்று கதறினார்.

குற்றவாளிகளைப் பிடித்தால், மரணம் பரிசு!

யார் வெட்டியது... எதற்காக வெட்டினர்? என்பது ஊர்க்காரர்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில்தான் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று பாண்டியன், சசிக்குமார், முருகன், ராஜா ஆகிய நான்கு பேரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

''எங்களுக்குச் சொந்த ஊர் புதுச்சேரி. போன வருடம் மே மாதம் தொழுதூருக்குத் திருட வந்தோம். நாங்கள் திருடிவிட்டுக் கிளம்பும்போது ஊர்க்காரர்​களிடம் மாட்டிக்கொண்டோம். எங்களைக் கம்பத்தில்

குற்றவாளிகளைப் பிடித்தால், மரணம் பரிசு!

கட்டிவைத்து அடித்தனர். ஊர் மக்கள் அனை​வரும் எங்களை அவமானப்படுத்தினர். அதற்காக ஊர் மக்களைப் பழிவாங்க நினைத்தோம். உடனே பழிவாங்கினால் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால், கடந்த ஒரு வருடமும் அமைதியாகக் காத்​திருந்தோம். குறிப்பிட்ட நாளை முடிவு செய்து கரன்ட் போகும் நேரத்துக்காகக் காத்திருந்தோம். கரன்ட் போனதும் இருட்டில் வருபவர்களை எல்லாம் வெட்டிக் கொல்வதற்கு முடிவு செய்தோம். திட்டமிட்டபடியே அந்தப் பக்கம் வந்தவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தோம்'' என்று சொல்லி இருக்கிறார்கள்.

குற்றவாளிகளை போலீஸ் எப்படி நெருங்கியது? கடலூர் மாவட்ட எஸ்.பி. ராதிகாவிடம் கேட்டபோது, ''சம்பவம் நடந்த கிராமத்தில் இருக்கும் செல்போன் டவர்களைக் கணக்கெடுத்து ஆய்வு செய்தோம். அந்த நெட்வொர்க்கில் இருந்து சம்பவம் நடந்த நேரத்திலும், அதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகும் எந்தெந்த எண்களில் இருந்து, எங்கெங்கே போன் போனது என்ற லிஸ்ட் எடுத்தோம். அதில் உள்ளூரைச் சேராதவர்களே அதிகம். ஆறு பேர் வெளியூராக இருந்தனர். அந்த ஆறு பேருமே புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்டவர்களைத் தேடி எங்களது குழு சென்றது. அங்கே நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். தகவல் தெரிந்து இரண்டு பேர் தப்பி விட்டனர். சிக்கியவர்களிடம் எங்கள் பாணியில் விசாரித்தபோது, உண்மையைச் சொல்லி விட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசிடம் இருந்து நிவாரணம் வாங்கித்தர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கிராம மக்கள் பயத்தில் இருப்பதால், அவர்களுக்குத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளோம். ஏற்கெனவே திருட்டு வழக்கில் குற்றவாளிகள் சிக்கியபோது அவர்கள் மீது போலீஸ் சரியான நடவடிக்கை எடுத்ததா என்பதையும் விசாரித்து வருகிறோம். அப்படி முறையாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், அந்தப் போலீஸ்காரர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை பாயும்'' என்றார்.

குற்றவாளிகளை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்காவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு, இந்தச் சம்பவம்தான் சாட்சி!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி