Published:Updated:

காதலில் சிக்கிய போலீஸ்!

விழுப்புரம் வில்லங்கம்

காதலில் சிக்கிய போலீஸ்!

விழுப்புரம் வில்லங்கம்

Published:Updated:
##~##
காதலில் சிக்கிய போலீஸ்!

காதல் விவகாரத்தை விசாரிக்கச் சென்ற போலீஸாரை கிராம மக்கள் அடித்துத் துவைத்த சம்பவம்தான் விழுப்புரத்தில் இப்போது ஹாட்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ளது அரவங்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த காந்தியும், தர்மபுரி மாவட்டம் அரூர் கிரா மத்தைச் சேர்ந்த இளவரசியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து உள்ளனர். இந்தநிலையில், காந்தியின் மைத்துனர் சக்திவேல் மற்றும் சிலர் இளவரசியின் தந்தை லட்சுமணனிடம் சென்று பெண் கேட்டுள்ளனர். அவரோ திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அதனால், காந்தியும் இளவரசியும் ஊரைவிட்டு தப்பி விட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், 'காந்தி தன் மகளைக் கடத்திச் சென்றுவிட்டார்’ என்று போலீஸில் புகார் செய்தார். தர்மபுரி மாவட்ட கொட்டாம்பட்டு காவல் நிலைய எஸ்.ஐ, சம்பத்குமார், கான்ஸ்டபிள் அண்ணாதுரை ஆகியோருடன் ஐந்து ஆட்களை அழைத்துக்கொண்டு கல்வராயன் மலைக்கு வந்துள்ளார் லட்சுமணன்.

காதலில் சிக்கிய போலீஸ்!

அடுத்து நடந்த சம்பவங்களை விவரித்தார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுப்பிரமணி. ''கடந்த 12-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஏழு பேர் சுமோ காரில் வந்தனர். யூனிஃபார்ம் அணியாமல் வந்ததால், வந்தவர்களில் இருவர் போலீஸார் என்பது யாருக்கும் தெரியவில்லை. காந்தியின் வீட்டுக்குள் நுழைந்து இளவரசியைத் தேடினர். அங்கு இல்லை என்றதும், காந்தியின் மைத்துனர் சக்திவேலிடம் விசாரித்தனர். அவருக்கும் தகவல் தெரியவில்லை. ஆனால், அவர் சொல்வதை நம்பாத இளவரசியின் தந்தை, சக்திவேலை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சித்துள்ளார். சக்திவேல் அடம்பிடிக்கவே, அவரைக் குண்டுக்கட்டாக காரில் ஏற்றிச் சென்று உள்ளனர். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள், ஐந்து பைக்குகளில் காரை விரட்டிச் சென் றனர்.

காதலில் சிக்கிய போலீஸ்!

அதிவேகமாகச் சென்ற கார், மணியார்​பாளையம் கிராமம் அருகே குழந்தையன் என்பவர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே குழந்தையன் இறந்து விட்டார். ஆனாலும் கார் நிற்காமல் செல்லவே,

காதலில் சிக்கிய போலீஸ்!

மக்களின் ஆத்திரம் அதிகரித்தது. விரட்டிச் சென்று காரை மடக்கி​னர். தப்பிக்க முயன்ற ஏழு பேரையும் மக்கள் புரட்டி எடுத்தனர். அவர்கள் அடிக்கும்போது, 'நாங்க போலீஸ். எங்க மேலேயா கை வைக்கிறீங்க?’ என்று மிரட்டி உள்ளனர். அவர்கள் சொன்னதை நம்பாத கிராம மக்கள், அனைவரையும் பள்ளிக்கூடத்தில் சிறை வைத்தனர். பிறகு, கிராமத் தலைவர் வெள்ளையன், கரியானூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து ஏழு பேரையும் அழைத்துச் சென்றனர்.  

கரியானூர் காவல் நிலையத்துக்குச் சென்றதும் எஸ்.ஐ. சம்பத்குமார், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், அடித்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி கிராமத் தலைவர் வெள்ளையன் உட்பட 50 பேர் மீது புகார் கொடுத்தார். நியாயமாகப் பார்த்தால், சம்பத்குமார் மீதுதான் மக்கள் புகார் செய்து இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து விசாரணை நடந்த வேண்டும் என்றால், விழுப்புரம் மாவட்ட போலீ ஸாரிடம் தகவல் அளித்திருக்க வேண்டும். ஆனால், எஸ்.ஐ. சம்பத்குமார் அப்படி எந்தத் தகவலும் அளிக்கவில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு தன் அதி காரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மஃப்டியில் வந்து விசாரித்து இருக்கிறார்.

அவர்கள் வந்த கார் மோதியதில், எங்கள் கிரா​மத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அதற்குக் காரணமானவர்களைக் கைது செய்யவில்லை. ஆனால், அன்று இரவு ஒரு மணிக்கு கரியானூர் காவல் நிலைய எஸ்.ஐ. கிஷோர்​குமார், மணியார்பாளையத்துக்கு வந்து சம்பவத்​துக்கு சம்பந்தமே இல்லாத இருவரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றார். தடுக்க வந்த பெண்களை அடித்துள்ளனர். மலைக் கிராமத்தில் என்னவென்றாலும் செய்யலாம் என்ற தைரியத்தில்தான் இப்படிச் செய்கிறார்கள்.

மறுநாள், போலீஸாரின் அராஜகத்தைக் கண்டித்து சாலை மறியல் நடத்தினோம். எட்டு மணி நேர மறியலுக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட இருவரையும் டி.எஸ்.பி. விடுதலை செய்துள்ளார். வழக்கை வாபஸ் பெறுவதாகவும், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதாவும் உறுதி அளித்துள்ளார். ஆனால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய எஸ்.ஐ. சம்பத்குமார் மற்றும் அவருடன் வந்த காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை'' என்றார் வருத்தத்துடன்.

இந்தப் பிரச்னை தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் பேசினோம். ''தர்மபுரி எஸ்.ஐ. விசாரணைக்காக விழுப்புரம் வருகிறார் என்றால், எங்களுக்குத் தகவல் அளித்திருக்க வேண்டும். ஒருவேளை தகவல் அளிக்கும் இடத்தில் தவறு நடந்து இருக்கலாம். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு இருக்கிறேன். அவர்களுடைய கார் அதிவேகமாகச் சென்று மோதியதால்தான், மக்களுக்கும் அவர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளது. மற்றபடி வேறு பிரச்னை இல்லை என்று நினைக்கிறேன். புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ. கிஷோர்குமார் நள்ளிரவில் சென்று இரண்டு பேரைக் கைது செய்துள்ளார் மற்றபடி பெண்களை அடித்ததாகச் சொல்வது கட்டுக்கதை'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.ஐ. சம்பத்​குமாரி​டம் பேசினோம். ''16 வயதான மைனர் பெண் இளவரசியை, காந்தி கடத்திச் சென்று விட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், விழுப் புரம் போலீஸாரிடம் அனைத்துத் தகவலையும் அளித்துவிட்டுத்தான் அந்தக் கிராமத்துக்குச் சென்றேன். போலீஸ் சீருடையில் சென்றால், எங்காவது காட்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். அதனால்தான் மஃப்டியில் சென்றேன். மற்றபடி பணத்துக்காகச் சென்றேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை. சக்திவேலை விசாரணைக்கு அழைத்துக்கொண்டு காரில் செல்லும்​போது ஊர் மக்கள்தான் தேவை இல்லாமல் பைக்கில் துரத்தினர். அதனால்தான் கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மக்களும் நான் யார் என்று தெரியாமல் கைவைத்து விட்டனர்''  என்றார்.

காதல் இன்னும் எத்தனை பிரச்னைகளைக் கிளப்புமோ?

- ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்