Published:Updated:

சேலம் ஒண்ணு... கோஷ்டிகள் நான்கு!

அ.தி.மு.க-வில் சலசலப்பு

சேலம் ஒண்ணு... கோஷ்டிகள் நான்கு!

அ.தி.மு.க-வில் சலசலப்பு

Published:Updated:
##~##
சேலம் ஒண்ணு... கோஷ்டிகள் நான்கு!

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களைத் தமி ழகம் முழுக்க அ.தி.மு.க. நடத்தி வருகிறது. சேலத்தில் நடந்த கூட்டத்தில், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிப் பூசல் வெளிப்படையாகவே வெடித்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்​கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15-ம் தேதி சேலம், அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் திருமண மண்ட​பத்தில் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ் வநாதன், கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி, வைத்தியநாதன் என மூத்த அமைச்சர்கள் ஐந்து பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச் சருமான விஜயலட்சுமி பழனிசாமி பேச்சுதான் அனைவரையும் அதிர வைத்தது. ''சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் நமது புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியால் நாம் அமோக வெற்றி பெற்றோம். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, நம் கட்சி நிர்வாகிகள் இடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மனக்கசப்பை எல்லாம் மறந்து, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா கைகாட்டும் நபரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று... அம்மாவை பாரதப் பிரதமராக்க வேண்டும்'' என்று உள்கட்சிப் பிரச்னையைத் தொட்டுக்​காட்டினார்.

சேலம் ஒண்ணு... கோஷ்டிகள் நான்கு!

அடுத்துப் பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு முன்னால் பேசிய விஜயலட்சுமியின் பேச்சைக் கண்டுகொள்ளாமல், ''மத்திய அரசின் நிதி தமிழகத்துக்குக் கிடைக்க வேண் டும் என்றால், அம்மா மத்தியில் அதிகாரத்துக்கு வர வேண்டும். மத்திய அரசிடம் குவிந்து கிடக்கும் நிதியெல்லாம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால், அம்மாவைப் பிரதமராக்கியே தீர

சேலம் ஒண்ணு... கோஷ்டிகள் நான்கு!

வேண்டும். அம்மா பிரதமர் ஆனால், இந்தியா வல்லரசு ஆகிவிடும்'' என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி, உள்கட்சிப் பிரச்னைக்குப் பதில் சொன்னார். ''விஜய​லட்சுமி பழனிசாமி பேசும்போது உள்ளாட்சித் தேர்த​லுக்குப் பிறகு, நம் கட்சி நிர்வாகிகளுக்கு இடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது என்று சொன்னார். அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய குடும்பம். ஒரு குடும்பத் தில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையிலேயே சில நேரங்களில் மனக்கசப்பு ஏற்படுவது உண்டு. அப்படி இருக்கும்போது பெரிய குடும்பமான நமது கட்சிக்குள் மனக்கசப்புகள் இருப்பது பெரிய விஷயம் இல்லை.

சாதாரணமாக இருந்த எனக்கு எம்.எல்.ஏ. ஸீட் கொடுத்து, அமைச்​சராகவும் ஆக்கிட்டாங்க. நான் எம்.எல்.ஏ. ஆகாதவரை சாதாரணமாக ரோட்டுக் கடையில், கட்சிக்காரர்கள் 10 பேரோடு உட்கார்ந்து டீ குடிச்சவன்தான். இப்பவும் அந்த 10 பேரையும் நான் மதிக்கிறேனான்னு கவனிப்பாங்க. அவன்கிட்ட நான் சரியா பேசலைன்னா, எனக்கு எதிரா ஒரு கோஷ்டி உருவாகிடும். எனக்கு எதிரா செயல்பட ஆரம்பிச்சிடுவாங்க. கிடைக்காதவர்களுக்குக் கிடைத்தவர்கள் ஆதரவாக இருந்துவிட்டால், எந்தப் பிரச்னையும் வராது'' என்று விளக்கம் கொடுத்தார்.

மேடையில் இருந்த தலைவர்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர். மேடையில் உள்கட்சிப் பிரச்னையைப் பேசக்கூடாது என்று முடிவெடுத்த பிறகு மைக் பிடித்தார் ஓ.பன்னீர்செல்வம். ''எம்.ஜி.ஆர் மறைந்தபோது 18 லட்சம் உறுப்பினர்களைக்கொண்ட நம் கழகத்துக்கு, இன்று ஒன்றரைக் கோடி உறுப் பினர்களைச் சேர்த்திருப்பவர் நம் அம்மா. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை மாநாடு நடத்த கருணா நிதிக்கு எந்த அருகதையும் இல்லை. செம்மொழி மாநாடு தமிழர்களுக்காக நடத்திய மாநாடு இல்லை. அது அவரது குடும்பத்துக்காக நடத்திய மாநாடு. அந்த மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த லஞ்சான், குஞ்சான்னு 165 பேர் முன் வரிசையில் அமர்ந்து இருந்தனர். அந்த அளவுக்கு ஆட்டம்போட்ட கருணாநிதியை இன்று அம்மா அடித்துத் துவைத்து மூலையில் போட்டுவிட்டார்.

13 வருடங்கள் மத்திய அரசோடு கருணாநிதி வைத்திருந்த கூட்டணி, வளமான துறைகளைத் தன் பிள்ளைகளுக்குக் கேட்டு வாங்கி வளமாக்குவதற்குத்​தான். அந்த தீய சக்தியான கருணாநிதி தமிழகத்தில் இனி எந்த ஜென்மத்திலும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது'' என்று பொங்கி முடித்தார்.

கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க-வில் உள்ள நிர் வாகிகள் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினர்கள். அவர்கள், ''சேலம் மாவட்டத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விஜயலட்சுமி பழனிசாமி, வீரபாண்டி எஸ்.கே.செல்வம், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜ் ஆகிய நான்கு பேரும் தனித்தனிக் கோஷ்டிகளாகச் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சியை எதிர்த்து யாரும் எந்த வேலையும் செய்வது இல்லை. எதிர் கோஷ்டியில் இருப்பவர்களை எப்படிக் காலி பண்ணலாம்னு​தான் பார்க்கிறாங்க. இப்போதே கோஷ்டிகளை அடக் காவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் கரைசேர முடியாது'' என்று புலம்பி இருக்கிறார்கள்.

''அம்மாவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை நிச்சயம் கொண்டுபோகிறேன். விரைவில் நல்லதே நடக்​கும்'' என்று நம்பிக்கை கொடுத்தாராம் ஓ.பி.எஸ்.

அதையும் பார்க்கலாம்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்